முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
முத்தப்பருவம்5 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

முத்தப்பருவம்

41✓
கத்துந் தரங்க மெடுத்தெறியக்
கடுஞ்சூ லுளைந்து வலம்புரிகள்
கரையிற் றவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலையுண்டு
தத்துங் கரட விகடதட
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளந் தனக்கு விலையுண்டு
தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்
கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்ட றருநித் திலந்தனக்குக்
கூறுந் தரமுண் டுன்கனிவாய்
முத்தந் தனக்கு விலையில்லை
முருகா முத்தந் தருகவே
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தந் தருகவே. 41
42✓
வளைக்குந் தமரக் கருங்கடலின்
வளைவா யுகுத்த மணிமுத்துன்
படிவேற் கறைபட் டுடல்கறுத்து
மாசு படைத்த மணிமுத்தந்
துளைக்குங் கழையிற் பருமுத்தந்
துளபத் தொடைமா லிதம்பருகித்
தூற்றுந் திவலை தெறித்தமுத்தஞ்
சுரக்கும் புயலிற் சொரிமுத்தந்
திளைக்குங் கவன மயிற்சிறையிற்
சிறுதூட் பொதிந்த குறுமுத்தந்
செந்நென் முத்தங் கடைசியர்கா
றேய்த்த முத்தஞ் செழுந்தண்டேன்
முளைக்குங் குமுதக் கனிவாயான்
முருகா முத்தந் தருகவே
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தந் தருகவே. 42
43✓
கலைப்பால் குறைத்த பிறைமுடிக்குங்
கடவு ளுடலின் விளைபோகங்
கனலி கரத்தி லளிக்கவந்தக்
கனலி பொறுக்க மாட்டாமன்
மலைப்பால் விளங்குஞ் சரவணத்தில்
வந்து புகுத வோராறு
மடவார் வயிறு சூலுளைந்து
மைந்த ரறுவர்ப் பயந்தெடுப்பக்
கொலைப்பால் விளங்கும் பரசுதரன்
குன்றி லவரைக் கொடுசெல்லக்
கூட்டி யணைத்துச் சேரவொரு
கோல மாக்கிக் கவுரிதிரு
முலைப்பால் குடித்த கனிவாயால்
முருகா முத்தந் தருகவே
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தந் தருகவே. 43
44✓
கத்துங் கடலி னெடும்படவிற்
கழியிற் கழுநீ ரிற்சுழியிற்
கானற் கரையிற் கரைதிகழுங்
கைதைப் பொதும்பிற் சுரும்பினங்க
டத்துங் கமலப் பசும்பொகுட்டிற்
சாலிக் குலையிற் சாலடியிற்
றழைக்குங் கதலி யடிமடலிற்
றழைவைத் துழுத முதுகுரம்பைக்
குத்துந் தரங்கப் புனற்கவரிற்
குவளைத் தடத்தின் மடைவாயிற்
குடக்கூன் சிறுமுட் பணிலமொரு
கோடி கோடி யீற்றுளைந்து
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முருகா முத்தந் தருகவே
மொழியுஞ் சமய மனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே. 44
45✓
வயலுஞ் செறிந்த கதலிவன
மாடஞ் செறிந்த கதலிவன
மலர்க்கா வெங்குந் தேனினிரை
மாலை தோறுந் தேனினிரை
புயலுஞ் செறிந்த கனகவெயிற்
புடையே பரந்த கனகவெயில்
பொதும்பர் தோறு மோதிமமென்
புளினந் தோறு மோதிமஞ்செங்
கயலுஞ் செறிந்த கட்கடையார்
கலவி தரும்போர் கட்கடையார்
கருணை புரியு மடியாருன்
காதல் புரியு மடியார்சீர்
முயலும் படிவாழ் திருச்செந்தூர்
முருகா முத்தந் தருகவே
மொழியுஞ் சமய மனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே. 45
✓
தொழுதுந் துதித்துந் துயரகற்றிச்
சுரருக் கிறையுஞ் சுரருமுடன்
சூழ்ந்த கடம்பா டவியிலுறை
சொக்கக் கடவு டனைமூன்று
பொழுதும் பரவி யெழுத்துச்சொற்
போலப் பொருளும் புகறியெனப்
புகலு மாறஞ் சிரட்டிதிணைப்
பொருட்டுத் திரத்தின் பொருண்மயங்கா
46✓
தெழுதும் பனுவற் பரணன்முத
லேழேழ் பெருமைக் கவிப்புலவ
ரிதயங் களிக்க விருப்பமுட
னிறையோன் பொருட்குப் பொருள்விரித்து
முழுதும் பகர்ந்த கனிவாயான்
முருகா முத்தந் தருகவே
மொழியுஞ் சமய மனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே.
47வேறு✓
கடுந டைச்சிந் துரம ருப்பின்
கதிர்கொண் முத்துஞ் சரவைநீள்
கடல ளிக்கும் பணில முத்துங்
கழையின் முத்துங் கரடுவா
னுடுமு கட்டம் புயல்க ருக்கொண்
டுமிழு முத்தங் கருகறே
னொழுகு பொற்பங் கயம டற்றந்
தொளிரு முத்தந் திருகல்காண்
படுக ரைக்குண் டகழி நத்தின்
பரிய முத்தந் தெரியவே
பரவை யெற்றுந் திரைகொழிக்கும்
படியின் முத்தஞ் சிறுமகார்
கொடுப ரப்பும் பதிபு ரக்குங்
குமர முத்தந் தருகவே
குறுமு னிக்குந் தமிழு ரைக்குங்
குழவி முத்தந் தருகவே.
48✓
பருவ முற்றுங் குடவ யிற்றொண்
பணில மொய்க்குந் துறையெலாம்
பருமு ரட்செங் கயல்கு திக்கும்
பலப டத்தெண் டிரைமுநீர்
பொருது குத்துந் திடர னைத்தும்
புறவு மொய்க்கும் புறவுசேர்
புளின வெற்பெங் கணுநி ரைக்கும்
புளின மொய்க்குங் குவளைவா
யரும டற்கண் டினமெ னச்சென்
றளிகண் மொய்க்கும் புதியது
லலவன் மொய்க்குங் குழிவ ழிச்சென்
றலைகொ ழிக்குங் கரையெலாங்
குருகு மொய்க்கும் பதிபு ரக்குங்
குமர முத்தந் தருகவே
முறுமு னிக்குந் தமிழு ரைக்குங்
குழவி முத்தந் தருகவே.
49வேறு✓
பையரவி னுச்சிகுழி யப்பொருங் குண்டகட்
படுகடற் பணில முத்தம்
பார்வையா லுஞ்சிறிது பாரோமி தன்றிப்
பசுங்கழை வெடித்த முத்தஞ்
செய்யசிந் தையினுமிது வேணுமென் றொருபொழுது
சிந்தியோ முத்தி வட்டத்
திரைமுழங் கக்கொழுந் திங்கள்வட் டக்குடைச்
செழுநிழற் சம்ப ராரி
யெய்யுமலர் வாளியை யெடுத்துத் தெரிந்துநா
ணிறுகப் பிணித்த வல்வி
லீன்றகுளிர் முத்தத்தை முத்தமென் றணுகோ
மிதழ்க்கமல முகையு டைக்குந்
துய்யமணி முத்தந் தனைத்தொடே முன்னுடைய
துகிரில்விளை முத்த மருளே
தோகைமே காரவா கனசெந்தி லாயுனது
துகிரில்விளை முத்த மருளே.
50✓
இறுகல்கரு குதல்முரிவி லட்சுமி புடாயமுள்
ளேறல்புகை யேறல் செம்ம
ணேறல்வெச் சந்திரகுன் மத்தகக் குழிவன்றி
யிரவியொளி யிற்க ரத்தன்
மறுவறு தகட்டிலோ ரத்திலுயர் தூக்கத்தின்
மன்னுமா தளைக விர்ப்பு
மாந்தளிர் முயற்குருதி செவ்வறத் தங்கோப
மருவுமணி வகைய ளிப்பேர்
முறுகல்வளி யேறல்கல் லேறல்சிப் பிப்பத்து
முரிதறிரு குதல்சி வப்பு
முருந்திற் குருத்துச் செருந்துருவி யிடையாடி
மூரிகுதை வடிவொ துங்க
றுறுமுகங் கக்கலொளி மட்கல்கர டென்னாத
துகிரில்விளை முத்த மருளே
தோகைமே காரவா கனசெந்தி லாயுனது
துகிரில்விளை முத்த மருளே.
51✓
கோதிவரி வண்டுமது வுண்டுகுடி கொள்ளுமெங்
குழலுக் குடைந்து விண்ணிற்
குடிகொண்ட கொண்டற் குறுந்துளியி னித்திலக்
கோவையொரு கால்வி ரும்பேங்
காதிலுறும் வள்ளைமக ரக்குழை கடக்குமெங்
கண்ணுக் குடைந்து தொல்லைக்
கயத்திற் குளித்தசேல் வெண்டரள மென்னிலொரு
காலமுங் கருதி நயவேம்
போதிலுறு பசுமடற் பாளைமென் பூகம்
பொருந்துமெங் கந்த ரத்தைப்
பொருவுறா வேள்வலம் புரியார மின்புறேம்
பொற்றோ டனக்கு டைந்த
சோதிவேய் முத்தந் தனைத்தொடே நின்னுடைய
துகிரில்விளை முத்த மருளே
தோகைமே காரவா கனசெந்தி லாயுனது
துகிரில்விளை முத்த மருளே.