திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
செங்கீரைப்பருவம்2 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்
செங்கீரைப்பருவம்
11✓
வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்
விரித்துமா சுணமுமிழ்ந்த
வெங்கதிர் மணிக்கற்றை யூழியிரு ளைப்பருக
வேய்முத் துதிர்ந்து சொரியக்
கங்காளர் முடிவைத்த கங்கா நதித்திரள்
கடுப்பக் குறுங்கவைக்காற்
கவரியின் பருமுலைக் கண்டிறந் தொழுகுபால்
கதிர்வெயிற் படமுரிந்து
மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட
மலைக்குறவர் கண்டெடுத்து
வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
மகளிருலக் கைசலிக்க
செங்காவி விழிபருகு பன்னிருகை மேகமே
செங்கீரை யாடி யருளே
திரையெறியு மலைவா யுகந்தவடி வேலனே
செங்கீரை யாடி யருளே.
12✓
கறைகொண்ட முள்ளெயிற் றுத்துத்தி வரியுடற்
கட்செவிப் பஃறலைநெடுங்
காகோ தரச்சிர நெளிக்கவட பூதரங்
கால்சாய மகரமெறியுந்
துறைகொண்ட குண்டகழ்ச் சலராசி யேழுஞ்
சுறுக்கெழ முறுக்கற்றுச்
சூரன் பயங்கொளச் சந்த்ரசூ ரியர்களுந்
தூளியின் மறைந்திடத்திண்
பொறைகொண்ட சுரர்மருவு மண்டகோ ளகைமுகடு
பொதிரெறிய நிருத ருட்கப்
பூச்சக்ர வாளகிரி கிடுகிடென வச்சிரப்
புருகூதன் வெருவி வேண்டுந்
திறைகொண் டளக்கவரு மயிலேறு சேவகா
செங்கீரை யாடி யருளே
திரையெறியு மலைவா யுகந்தவடி வேலனே
செங்கீரை யாடி யருளே.
✓
ஏர்கொண்ட பொய்கைதனி னிற்குமொரு பேரரசி
னிலைகீழ் நிழற் பறவையா
மிதுநிற்க நீர்நிழற் கயலாமி தன்றியோ
ரிலையங்கு மிங்கு மாகப்
பார்கொண்ட பாதியும் பறவையா னாகவப்
பாதியுஞ் சேல தாகப்
பார்கொண் டிழுக்கவது நீர்கொண் டிழுக்கவிப்
படிகண்ட ததி சயமென
13✓
நீர்கொண்ட வாவிதனி னிற்குமொரு பேழ்வாய்
நெடுபூத மதுகொண் டுபோய்
நீள்வரை யெடுத்ததன் கீழ்வைக்கு மதுகண்டு
நீதிநூன் மங்கா மலே
சீர்கொண்ட நக்கீ ரனைச்சிறை விடுத்தவா
செங்கீரை யாடி யருளே
திரையெறியு மலைவா யுகந்தவடி வேலனே
செங்கீரை யாடி யருளே.
14✓
கந்தமலி நெட்டிதழ்க் குறுமுகைப் பாசடைக்
கமல மலரைக் கறித்துக்
கடைவாய் குதட்டும் புனிற்றெருமை தன்குழக்
கன்றுக் கிரங்கி யோடிக்
கொந்தவிழ் கருங்குவளை யோடைத் தடாகக்
குரம்பைக் கடந்து செந்நெற்
குலைவளைக் கும்பழக் குலைமடற் கதலிக்
குருத்தற மிதித்து மீளப்
பந்தரிடு துலடிப் பலவுதரு முட்குடப்
பழமெலா மிடறி வெள்ளைப்
பணிலஞ் சொரிந்தநித் திலமுறுத் தப்பதை
பதைத்துமுலை பாலு டைந்து
சிந்தமக ராழியலை யொடுபொருத செந்தூர
செங்கீரை யாடி யருளே
செந்நிறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி யருளே.
15✓
வீறாட வெங்கதிர்ப் புகர்முகக் கூரிலை
மிகுத்தவே லுறைகழித்து
செவ்வாய் பிளந்துசிறு கட்பே ரிடாகினிகள்
விசையாட வெங்கவந்த
மாறாட முதுபகட் டுயிர்பிடர்க் கரியநிற
மறலியிரு கைசலித்து
மன்றாட வுடல்விழிக் குரிசில்கொண் டாடநெடு
மாகமுக டிடைவெளியறப்
பாறாட வம்பொற் கிரீடம் பரித்தலகை
பந்தாட விந்தாடவிப்
பாலைக் கிழத்திமுக் கவரிலைச் சூலம்
பசுங்கொழுங் குருதி வெள்ளச்
சேறாட வென்றுசிறு முறுவலா டுங்குமர
செங்கீரை யாடி யருளே
செந்நிறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி யருளே.
16✓
மகரசல ராசிதனில் வருணன்வந் தடிபரவி
வைத்தமணி முத்துமாலை
வடபூ தரத்தில்விழு மருவியென வுத்தரிக
மார்பிலூ டாடமன்னுந்
தகரமல ரிதழ்முருகு கொப்புளிக் குஞ்சிகைத்
தமனியச் சுட்டியாடத்
தவளமுழு மதியமுத துளியெனத் திருமுகத்
தரளவெயர் வாடமுழுதும்
பகரவரு மறைமுனிவர் கொண்டாட முழுவாளி
பங்காளி திருமுலைப்பால்
பருகக் குழைந்துசிறு பண்டியுந் தண்டையும்
பாதமும் புழுதியாடச்
சிகரவரை யரமகளிர் சிறுமுறுவ லாடநீ
செங்கீரை யாடி யருளே
செந்நிறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி யருளே.
17வேறு✓
இந்திர னுஞ்சசி யும்பர வும்படி
யிங்கே வந்தார்கா
ணிந்திரை யுங்கர சங்கமு குந்தனு
மிந்தா வந்தார்பா
ரந்தண னுங்கலை மங்கையு நின்சர
ணஞ்சேர் கின்றார்போ
யண்டரு டன்பல தொண்டர்ப ணிந்தன
ரஞ்சே லென்றாளாய்
முந்துத டந்திரை யுந்துவ லம்புரி
மொண்டே கொண்டேக
முன்றிறொ றுந்தர ளங்களு மிழ்ந்திட
முந்தூர் நந்தூருஞ்
செந்தில்வ ளம்பதி வந்தரு ளுங்குக
செங்கோ செங்கீரை
தென்றன்ம ணங்கமழ் குன்றுபு ரந்தவ
செங்கோ செங்கீரை.
18✓
வரைபொரு புளகித மலைமுலை யரிவையர்
வந்தார் பந்தாட
மற்கட லிறைதரு நவமணி வடமது
வண்டார் தண்டார்பா
ருரைபொரு கவிஞரு முனிவரு மமரரு
முன்போ லுண்டோதா
னுரையெமர் வழிவழி யடிமையி துளதென
வுன்பா லன்பானார்
கரைபொரு கடறிட ரெழுமயின் மிசைவரு
கந்தா செந்தூரா
கழிமட வனமொடு முதுகுரு கொருபுடை
கண்சாய் தண்கானற்
றிரைபொரு திருநகர் மருவிய குருபர
செங்கோ செங்கீரை
செருவினி லெதிர்பொரு நிசிசரர் தினகர
செங்கோ செங்கீரை.
19வேறு✓
உரைசெய் வரையர மகளிர் முறைமுறை
யுன்பேர் கொண்டாட
விலகு மிவையவ ருலகு மரகர
வுய்ந்தோ மென்றாட
வரைசெய் வனமுலை மகளி ரெழுவரும்
வந்தே பண்பாட
மலய முனியொடு பிரம முனிதொழ
வந்தார் கண்டாயே
கரையின மணலிடு கழியி னெடியக
வஞ்சே ருஞ்சார்பிற்
கரிய முதுபனை யடியில் வலைஞர்க
ணஞ்சூழ் மென்கானிற்
றிரையில் வளைதவழ் நகரில் வருகுக
செங்கோ செங்கீரை
செருவி னிசிசர திமிர தினகர
செங்கோ செங்கீரை.
20வேறு✓
குறுமுகை விண்ட நெட்டிலைத் தாழை
யடியில்வி ளைந்த முட்குடக் காயி
லினிய குவளை யோடையில் விண்டோ யுந்தேவர்
குணலைபு ரிந்த கற்பகச் சோலை
நிழலிடு பந்த ரிட்ட பொற்றூணி
லளவர் குடிலில் வாசலி னின்றோடுந் தோணி
குழுவொடு வந்து விட்டிலைப் பாறு
துறைமணல் வண்ட லிட்டுவற் றாத
பழைய குமிழி வாவியில் வண்டா னந்தாவுங்
குரவுநெ ருங்கு மெக்கரிற் கான
லுழுநர்ப ரம்பி னெற்குலைத் தாளி
லிளைய குமர ரூர்சிறு திண்டேர் மென்காவி
லிறுகுகு ரும்பை யொத்தபொற் பார
நகிலரி ருந்து வைத்தவைப் பூச
லருகி லிளைஞ ருடலில் வண்டார் தண்டாரி
லெவரும கிழ்ந்த சித்திரச் சாலை
நிழன்மணி துன்று தெற்றியிற் றேவர்
மகுட மிடறு பூமியில் வங்கா ளஞ்சீன
மெனமொழி தங்கு மற்புதத் தீவில்
வணிகரின் வந்த மிக்கபட் டாடை
வகையி லெறியு மாரவ டம்பூ ணும்பூணி
லிரைகவர் ஞெண்டு முக்குளித் தூறு
மளறுகி டங்கில் வித்துவித் தாரத்
துரவி விடுமுள் வேயிலில் வெங்கா மன்காண
முறுகவி ளைந்து முற்றி முத்தேறு
கரியக ரும்பு சுற்றுசிற் றாலை
நிலையின் முதிய தாழியில் வெந்தா றும் பாகின்
முடியை விளம்பி வைத்துமுட் டாது
கடைசித ருகின்ற கட்குடப் பானை
முதுகின் முளைகொள் சாலியின் மென்பூ கந்தோறு
முருகுது ளும்பு கொத்துடைப் பாளை
சிதறியு திர்ந்த பித்திகைப் பீட
மறுகின் முதல்வர் தேவியர் பந்தாடுங் காவின்
முனிவர்வி ரும்பு கற்புடைப் பான்மை
மகளிர்கள் மொண்டெ டுத்தகைச் சாலின்
மடுவின் முழுகு மேதியில் வம்பே செஞ்சேல்பாய்
செறுவில்வி ளைந்த நெற்குலைக் காயி
லுழவிலு டைந்த கட்டியிற் பார
மதகு செறியு மேரியின் மண்டு கம்பானல்
செருமிமு ழங்கு கற்பிளப் பான
புடையின்வி ழும்பு னற்பெருக் கான
தமர திமிர வாவியி லெங்கே யுந்தாவுந்
திரையில் வலம்பு ரிக்கணத் தோடு
பணிலமு ழங்கு பட்டினக் காவற்
றிகிரி முருக வேலவ செங்கோ செங்கீரை
தினகர ரஞ்ச விட்டுலத் தேவர்
மகபதி முன்கு வித்த வித்தார
மவுலி திறைகொள் சேவக செங்கோ செங்கீரை.