முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
அம்புலிப்பருவம்8 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

அம்புலிப்பருவம்

✓
செந்தண்மை பூண்டொழுகும் செம்மலிவன் சீர்பாதம்
சேரவரும் எவ்வெ வரையும்
சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யாண்டிடுவன்
சேவடியின் பெருமை யோர்ந்து
✓
நொந்தன்மை வந்துறினும் நோய்நீக்கிக் காத்திடுவன்
நூற்றுப்பத் தடுக்கு கோடி
நுகர்பொருளை யிவ்வுலகில் வைத்திடுவன் அவற்றின்பின்
நோகாமல் வீடும் அருள்வான்
✓
வந்துண்மை யடியவரா யழுக்காற வாவெகுளி
வன்சொல்பயி லாமல் நின்றே
வரையுச்சி வாழுமவன் அறநெறி படிந்தொழுகின்
வளமையுடன் ஓங்க அருள்வான்
✓
அந்தண்மை மிகுத்தணிகை மலைமேவு தேவனுடன்
அம்புலீ ஆட வாவே
அருந் தமிழ் பயில்பவரின் உளமேவு முருகனுடன்
அம்புலீ ஆட வாவே.