முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
காப்புப்பருவம்2 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

காப்புப்பருவம்

✓
பண்ணிய மேந்தும் கரத்தினில் அப்பம்
பயறொடும் எள்ளுருண்டை
பரிவுட னடியர்கள் அளிப்பன ஏற்றுப்
பசிதீர்த் தருள்பவனே
✓
விண்ணவர் வேதமென் றேத்திடு பாரதம்
வியாதனன் றுரைத்திட நின்
வியன்கரம் ஒருமருப் பேந்தி வரைந்தருள்
வித்தகப் பெருமானே
✓
எண்ணியிவ் வணமுனை இவ்வுல கேத்துநர்
என்றும் வாழ்ந்திடவும்
இன்பமெய்ஞ் ஞானநல் வடிவுகொண் டண்டம்
எல்லாம் புரப்பவனே
✓
தண்ணிழல் தமிழ்பயி லடியவர்க் காபத்
சகாயப் பெருமானே
தணிகைப் பதியினி லெமக்கருள் மணியைச்
சந்ததம் காப்பாயே.