முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
சப்பாணிப்பருவம்5 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

சப்பாணிப்பருவம்

✓
பண்ணாரின் தமிழ்ப்பாடல் பாடவிலக் கணமறியேன்
பாடுமுறை தானு மறியேன்
பக்திநிறைந் துனதுதிரு மலரடியை நீங்காது
பரவிவழி படவு மறியேன்
✓
கண்ணாரக் காணகிலேன் கருத்தாலும் நினைக்ககிலேன்
கடையனுயு நெறியு மறியேன்
கருணையுரு வேயுன்றன் கழலடியின் பெருமையினைக்
கற்றவர்கள் கூற அறிந்தேன்
✓
மண்ணாகிப் போகாதிப் பிறவியளித் ததன்பயனா
மன்னாவுன் முகமலர்ந்து
மைந்தனெனை வாவென்று னருகிலழைத் தினியமொழி
மகிழ்ச்சியுடன் கூறியருளித்
✓
தண்ணார்தி ருத்தணிகை அரசேநின் னிருகைகொடு
சப்பாணி கொட்டியருளே!
தமிழே நிதம்பயிலும் எல்லோரும் இன்பமுறச்
சப்பாணி கொட்டியருளே!