முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
சிறுதேர்ப்பருவம்11 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

சிறுதேர்ப்பருவம்

✓
நல்வாழ்வு வாழ்ந்திடுவர் நந்தாவி ளக்கனைய
நம்பீ நின் தாளை மறவார்
நணுகிவரு வல்வினை தம் பாலணுகா தேகச்செய்
நன்னெறியை என்றும் அகலார்
✓
கல்லாத பேரெனினும் கற்றபெரி யோருரையைக்
கருத்தோடு கேட்டு நடப்பர்
கடலலைக ளெனத்தொடருங் கடத்தலரி தாம்பெரிய
கடலெனுமிப் பிறவி நீந்தி
✓
நல்லாயுன் நற்றாளெ னுங்கரையி லேறிடுவர்
நாயனையேன் செய்வதறியேன்
நல்லவரின் திருவடியைச் சிக்கெனவே பற்றிடுவேன்
நாடவொரு வழியு மறியேன்
✓
செல்வா திருத்தணிகை மைந்தாவென் வினைகளிறச்
சிறுதே ருருட்டி யருளே
செந்தமிழை ஓதிடுவர் சிந்தாகு லந்தீரச்
சிறுதே ருருட்டி யருளே.
✓