முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
சிற்றில்பருவம்9 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

சிற்றில்பருவம்

✓
மன்பே ருலகில் மக்களென
வந்தோ ரெவரும் வனப்புநிறை
மன்னா வுன்றன் பேரருளை
மனத்தே யுணர்ந்து மகிழ்ந்திடுவர்
✓
துன்பே சிலரைத் தொடர்ந்திடினும்
தொல்லை வினையின் பயனெனவே
துய்யா வுன்றன் திருவடியைத்
துதித்தே துயரம் நீங்கிடுவர்
✓
வன்பே யறியார் உள்ளமதில்
வதிந்தே யவரை வாழ்விக்கும்
வள்ளா லுன்றன் திருவருளை
மறவா தென்றும் வணங்கிடுவோர்
✓
அன்பே தணிகைப் பதிமுருகா
அடியேம் சிற்றில் சிதையேலே
அழகா தமிழைப் பயில்கின்றோம்
அடியேம் சிற்றில் சிதையேலே.