முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
தாலப்பருவம்4 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

தாலப்பருவம்

✓
பணியெனக் கருளுக எனவேண் டிடுமவர்
பக்கத் திருப்பவனே
பண்ணிய புண்ணிய பாவ மவைக்குறு
பயனை யளிப்பவனே
✓
நணியுனை வழிபடு மவரிடர் களைந்தடி
நண்ணா தவர்களையும்
நணியுன தருள்கொடு நன்கு திருத்தி
நன்னெறி சேர்ப்பவனே
✓
மணியத னொடுவெம் பரலு நிறைந்திடு
மலையி லிருப்பவனே
மனத்தினில் தூயோர் வந்து வணங்கிடு
மாட்சி நிறைந்திலங்கும்
✓
தணிகையம் பதியில் அடியனை ஆண்டவ
தாலோ தாலேலோ!
தண்டமிழ் பயில்வோர் தமைவாழ் விப்போய்
தாலோ தாலேலோ!