முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
விநாயகர் துதி1 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

விநாயகர் துதி

✓
செந்தமிழ்நாட் டுத்தணிகைத் தேவன் திருவடிக்குப்
பைந்தமிழ்ப்பிள் ளைத்தமிழைப் பாடுதற்குச்—சந்ததமும்
ஞானத் திருவுருவாய் ஞாலமெலாம் காத்தருளும்
ஆனைமுகத் தண்ணால் அருள்.