முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
செங்கீரைப்பருவம்3 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

செங்கீரைப்பருவம்

✓
கருத்ததனி லுனை யெண்ணாக் காலத்தே மூலமலக்
காரிருளில் அத்துவிதமாய்க்
கண்ணிலாக் குழவிபோற் கிடந்திட்ட உயிருக்குக்
கடைத்தேறும் வாய்ப்பளிக்கப்
✓
பொருத்தமுறு தனுகரண புவனநிறை போகமொடு
போக்குவர வுங் கொடுத்துப்
புவியிலுறு மின்பங்கள் நுகர்கின்ற போதத்துப்
புரிந்துனை யுணர வைத்து
✓
வருத்தமிகு நிலைமாறி வளமைநிறை திருவடியில்
மனமுருகி இனிது வாழ்ந்துன்
வாடாத பெருவாழ்வில் வைத்தருளும் வள்ளால்நின்
மலரடியை என்றும் மறவாத்
✓
திருத்தணிகை தொழுமடியர் திருவடையச் செய்தேவ
செங்கீரை யாடியருளே
செந்தமிழின் இன்பநுகர் செழும்புலவர் உளமுறைவ
செங்கீரை யாடியருளே.