முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
சிறுபறைப்பருவம்10 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

சிறுபறைப்பருவம்

✓
தனிவில் பிடித்திடு வேனெதிர் ஏதிலர்
தமையான் வரவொட்டேன்
தணிகை விரும்பித் தரணியில் பகையைத்
தன்னுளங் கொள்ளாரைப்
✓
பனியில் நனைந்திடு மூப்பினர் கனலின்
பக்கத் துற்றனர் போல்
பண்டை வினைப்பய னும்விட் டோடிடப்
பண்ணுவன் வந்திடுவீர்
✓
கனிவிலிவ் வண்ணம் உரைத்திடுங் கருணைக்
கடலே யுனையடைந்தேன்
கருத்தே என்றன் கண்ணே எங்குங்
காட்சி யளிப்பவனே
✓
முனிவில் திருத்தணி கைப்பதி முருகா
முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்வோர் நித்த முயர்ந்திட
முழக்குக சிறுபறையே.