முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
வருகைப்பருவம்7 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

வருகைப்பருவம்

✓
வானாய் வானி லுறுமதியாய்
வளரும் மதியின் தண் நிலவாய்
வயங்கு கருணை யுடன்கூடி
வழங்கு கதிரின் பகலவனுந்
✓
தானாய் இயங்கும் வளியாகித்
தன்போல் எவையும் தூய்தாக்கும்
தணலாய் நீராய் மண்ணாகித்
தனுவே கரணம் போகமுடன்
✓
யானாய் என்னை எஞ்ஞான்றும்
எந்த நிலையும் நீங்காமல்
என்பும் ஊனும் உருகியிட
என்றும் ஓவா இன்ப நல்கும்
✓
தேனாய்த் தணிகை மலைவளரும்
தேவே வருக வருகவே!
தெய்வத் தமிழால் அழைப்பவர்முன்
தினமும் வருக வருகவே!