முருகன் App
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ்
நா.ப. தணிகை அரசு
முத்தப்பருவம்6 / 11
திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் · நா.ப. தணிகை அரசு

முத்தப்பருவம்

✓
கத்துந் தரங்கக் கருங்கடலில்
கருத்தோ டெடுக்கும் நன்முத்தும்
கலைகள் வல்லார் செயற்கையினால்
கனிவோ டாக்கும் வெண்முத்தும்
✓
பத்திக் கடலிற் படுவோரைக்
பாரிற் கலைகள் பயில்வோரைப்
பரமா னந்தம் அளித்திடு முன்
பசிய முத்துக் கீடாமோ?
✓
சித்த மகிழ்ந்தே சிறுகுழவி
சேர அமுதம் உண்டதன்பின்
சிறந்த அன்பால் அன்னைதரும்
செழுமுத் தமும்தான் நிகராமோ?
✓
முத்தி யளிக்கும் தணிகைமலை
முருகா முத்தந் தருகவே!
முத்தமிழ் நாளும் பயிலுமவர்
முதல்வா முத்தந் தருகவே.