முருகன் App
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
தாலப்பருவம்4 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்

தாலப்பருவம்

22✓
பாயாவேங்கை நிழற் பிணைமேல்
பாயும் வேங்கை அதிர்ப்பு ஒலியால்
பறவாக்குளவி நிழல் இருந்து,
பறக்கும் சிறை எண்காற்பறவை
காயா-அத்திக் கொம்பு ஒடித்து,
கடுகும் வயமாவினைக் கவர்ந்து,
காய்க்கும் அத்திமிசை இறங்க
கனி தேர் கடுவன் கற்பகத்தில்
தாய் வான் அரம்பைக்கு எதிர் நடிப்ப,
தனி வானவர் ஆன் பால் ஊட்டும்
தணியா வளம் கூர் இறும்பூது
தழைக்கும் தணிகாசலத்தில் இருந்து
ஆயாய் உயிரைப் புரந்து அளிக்கும்
அரசே! தாலோ தாலேலோ!
அழகு ஆர் மயில்வாகனம் ஏறும்
அமுதே! தாலோ தாலேலோ!
23✓
ஏலமரம், தக்கோலம், அகில்
இலவங்கம், பச்சிலைமரம், தேக்கு,
எழில் சந்தனம், குங்குமமரம்
எறிந்து கொளுவி வனசரர்கள்
சால வெறுத்து வனம் புகுந்து
தவம் செய் முனிவர் உதிர் சருகு
தண்ணீர் கிழங்கு ஆதிகள் உண்ணும்
தகைமை காட்டு மலைச் சாரல்
கோலம் அகழும் அளையில் அராக்
கொழுஞ்சூட்டு எரியும் மணி வெயிலால்
குளிர் பூம் பொழிலின் இருள் நீங்க,
குற மா மகளிர் விழைந்து ஆடும்
ஆலம் பெருகும் சுனைத் தணிகைக்கு
அரசே! தாலோ தாலேலோ!
அழகு ஆர் மயில் வாகனம் ஏறும்
அமுதே! தாலோ தாலேலோ!
24✓
வெள்ளில் கனியால் அடுப்பு அமைத்து,
வேரல்உகு முத்து-அரிசிதனை
வேடர் அரிந்து கொணர்ந்து அளித்த
வேழச் செவி ஆம் முறத்து ஏற்றும்
புள்ளி படு மான் தோல்-பாய் மேல்
புடைத்துக் கொழித்துத் தறித்து எடுத்தும்
பொன்னம் துடிக்கண் தாழியுறும்
புதுத் தேனொடும் பெய்து, உலை ஏற்றி,
சுள்ளி அகில் சந்தன விறகில்
சுடர் மாணிக்கத் தீ மூட்டி,
துடுப்பா மருப்பில் துழாவு சிறு
சோறு அட்டு, எயினப் பேதையர் கை
அள்ளி விளையாட்டு அயர் தணிகைக்கு
அரசே! தாலோ தாலேலோ!
அழகு ஆர் மயில்வாகனம் ஏறும்
அமுதே! தாலோ தாலேலோ!
25✓
கல்ஆர் சுனையில் சுரபியினம்
கறந்த பாலில் செவ் அரம்பைக்
கனிகள் நழுவி விழ, அதனை—
கணியின் பணை வாழ் கிளியினமும்
வில் ஆர் வேடப் பாவையரும்
விளரி இசை யாழ் விஞ்சையரும்
வெற்பில் தவம் செய் முனிவரரும்
வேழப் பிடியின் கரிணிகளும்
செல் ஆர் பொழில் சேர் கோடரமும்
சிறக்கும் தெய்வ மடந்தையரும்—
தின்று, களிப்புற்று, அனுதினமும்
தீரா இறும்பூதுடன் உறையும்
அல் ஆர் நீலம் அலர்தணிகைக்கு
அரசே! தாலோ தாலேலோ!
அழகு ஆர் மயில் வாகனம் ஏறும்
அமுதே! தாலோ தாலேலோ.
26✓
வேரல் மணியின் குவை ஒருபால்,
வேழமருப்பின் குவை ஒருபால்,
விளங்கும் வயிரக் குவை ஒருபால்,
விழையும் வெடூரியம் ஒருபால்,
நேர் இல் அரவ மணி ஒருபால்,
நீல மணியின் குவை ஒருபால்,
நிழல் சேர் பச்சைக் குவை ஒருபால்,
நிறம் ஆர் கனகக் குவை ஒருபால்,
தேரும் புகழ்க் கல்லார கிரிச்
செட்டி எனப் பேர் படைத்ததனால்,
தெரிந்து விலை ஆக்குறக் குவித்த
சீர்மை பொருவும் திருத்தணிகை,
ஆரல் உதவும் பன்னிரு கை
அரசே! தாலோ தாலேலோ!
அழகு ஆர் மயில்வாகனம் ஏறும்
அமுதே! தாலோ தாலேலோ!
27(வேறு)✓
துணிபடு வெண்பிறை தவழ் முடியின் புடை
சொரி முகிலின் புனல் வார்
சுனையில் விழுந்து, அதின் உறு புனலும் கொடு
தொடர் மதம் உந்தியிடா;
திணி அகில் சந்தன மரம், முதிர் குங்குமம்,
திகழ் துடியும் பெயரா;
செறி பனசம், கணி, மலர்வாழை, பைங்கழை
சிறு மிளகும் கொணரா;
மணி வயிரம், கதிர் மரகதம், அஞ்சன
மணியினொடும் புணரா;
மருவு புலன் கெழும் அருவி இழிந்திடு
வளமை தழைந்து, எழில் கூர்
தணிகை நெடுங்கிரி அமரும் நெடுந்தகை!
தாலோ தாலேலோ!
சந்தனமும் புழுகும் புனை சுந்தர!
தாலோ தாலேலோ!
28✓
வானதியும், குளிர் தேனடை விண்டு இழி
வார் மதுவும், கரியின்
மா மதமும், புடை சூழ் சுனையின் புனல்
மண்டிக் கொண்டு இழியா;
ஏனல், கருந்தினை, சாமை, இறுங்கு உறும்
இதையில் மிகப் பெருகி;
இறவுளர் முன்பুরি மடைகள் அழிந்திட,
எல்லை கடந்து ஓடி;
கானம் அருந்தி, தவழ்ந்து, நிறைந்து, இரு
கரைகள் அழித்து ஏகும்
கம்பலை அம்பரர் கம்பம் உறும்படி
கார் ஒலியைச் சினவா;
தானம் எழும் தணிகாசல வேலவ!
தாலோ தாலேலோ!
சந்தனமும் புழுகும் புனை சுந்தர!
தாலோ தாலேலோ!
✓
சூதக் கனியொடு பனசக் கனி, பொழில்
சோர் கதலிக் கனியும்,
துதை வயலில் படும் எருவின் முளைத்து, எழில்
துன்னிய செந்நெல் எலாம்—
வேதக்கிழவர் உளத்துறு காதல்
விட, கனகத்தினொடு,
மேதினி மன்னர் விடுத்திடு தான
விழுப்புனல், பூஞ்சுனை நீர்,
29✓
காதல் குறவர்கள் நாணத்தொடு குடை
கல் அருவிப் புதுநீர்,
காலின் விழுந்து எதிர் பாய,-வளர்ந்து,ஒளிர்
கதிரவன் மிசை ஓங்கும்
தாதின் பொலிதரு காவிக்கிளி இறை!
தாலோ தாலேலோ!
சந்தனமும் புழுகும் புனை சுந்தர!
தாலோ தாலேலோ!
30✓
மரு அலர் கற்பகம் முடி அணி பொற்சசி
வாழ் விண் ஆகாதே,
மகபதி வச்சிரதரனும் உவப்புறும்
ஊர் பாழ் ஆகாதே,
இருடிகள் சித்தர்கள் உரகர் இயக்கர்கள்
வாணாள் போகாதே,
எழுகடல் சுற்றிய புடவி இடத்துறு-
வார் நோய் ஆழாதே,
பொரு கரி பற்பல பரவி மிடுக்கு உறு
காலாள் தேரோடும்
பொருத தயித்தியர் சிரமலை அற்றிட,
வாள் கோல் வேல்ஏவும்
தரு மலர் மொய்த்திடு பரகிரியில் குக!
தாலோ, தாலேலோ!
தணிகை மலைக்கு இறை என வரு சிற்பர!
தாலோ தாலேலோ!
31✓
நாலு முகத்தவன் மாலை அழித்திடு
நாதா! வாதாபி
நாசம் உறச் செயும் ஞானமுனிக்கு அருள்
போதா! நீள் பாதா!
பாலின் மொழிக் கனிவாய் உமை, தற்பரை
பாலா! மா சீலா!
பாவை எழில் தெய்வயானை அணைத்திடு
மார்பா! கூதாளா!
கோல வனத்து உறு வேடர் மகட்கு இசை
கோவே! கூர்வேலா!
கூடலரைத் தெறும் கோழி மயிற் கொடி
வீரா! தேன்ஆர் பூச்
சாலை மிகுத்துள சோலை மலைக்கு இறை!
தாலோ! தாலேலோ!
தா இல் செருத்தணி மேவிய சிற்பர!
தாலோ தாலேலோ!