சத்தினி பதிந்து வினை ஒத்த மல பரிபாகர்
தமது இதயகூடம் அதனில்
தங்கு வயிராகம் ஆம் தறி நாட்டி, அன்பு எனும்
தளையை இரு காலின் மாட்டி,
மெத்து இனிய ஞானநீர் ஆட்டி, நிறை சாந்தம் ஆம்
மென் மலர் அணிந்து, உயிர் எனும்
வீயாத கவளம் கொடுத்திட, மகிழ்ந்து, உண்டு,
விளையாடு கரியை நினைவாம்—
சித்து இனிய யோகியர் நெடுங்கு குகை எங்கணும்
செறி திருத்தணிகை மருவும்
செவ்வேள்தனக்கு அருணகிரிநாதர் நல் நயம்
தேர்ந்து, மகிழ் கூர்ந்து, நுவலும்
பத்தினுடன் ஆறாயிரம் திருப்புகழ்-அமுது
பருகு பன்னிரு செவியினும்
பரவு நவ ரசம் ஒன்றும் அறியாத சிறியனேன்
பன்னு பைந்தமிழ் தழையவே.