முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
அம்புலிப்பருவம்8 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

அம்புலிப்பருவம்

62✓
உலகமுழு துங்குளிர்செ யொள்ளொளி பரப்பிநின்
றுவகைமிகு வித்தியென்றோ
வுன்னரிய நின்கிரண நன்னர்வைத் திந்நிலத்
துறுபயிர் வளர்த்தியென்றோ
குலவமரர் பலருங் குலாய்க்கொண்டு நாடொறுங்
கொளவமு தளித்தியென்றோ
குறையினுந் திரியாது நிறைபுகழ்த் தந்தைதன்
கோடீர மணிதியென்றோ
நிலவுபாற் கடலிடைத் தன்மாமி யோடன்று
நேர்வந் திருத்தியென்றோ
நேயமுறு தன்றமிழை யாயும்வழு தியர்குடியி
னெடுமுதல்வ னாதியென்றோ
வலகிலಿವ னொருதனுட னருகுற வழைத்தனன்மெய்
யம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
63✓
ஏயுமொரு கடைநிலை யிகந்துமுற் பக்கம்வரி
னிரவுகாய் பவனாகுவா
யியலுமொரு பருவத் தியைந்தவெவ ருக்குமெதி
ரெழின்மயி லிவர்ந்துவருவாய்
காயுநிலை போயவல் லாதவற் புல்லாத
கலைமதிய னாய்த்திகழுவாய்
கருதுறு முரோகிணிக் கொருதின முதற்கண்வரு
கார்த்திகையை யுளமுவப்பாய்
பாயும்விடை மேன்மலைப் பாவையொடு மேவும்
பரன்கண்ணின் மணியின்வளர்வாய்
பகர்ச்சியி னாகിവள ராம்பல்வன வல்லையொடு
பரிவின்மகிழ் கொளமருவுவா
யாயுமறை போற்றிவனை நீயுமொவ் வாதிரா
யம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
64✓
விண்ணிரு டுடைத்தொளி விளைத்தலால் விரவலரின்
வேலைமுன் விடுத்துவரலால்
வெந்தக ரடுத்துச்ச மேவலால் விளிசெயளி
மிகுமிர வலர்க்கருளலாற்
பண்ணொளியி னாவியிடை யகலாது நிற்குமொரு
பாதகம லம்வாட்டலாற்
பாசொளிய மான்மருக னாகவர லாற்றேவர்
பரவியுடு பதியென்னலா
னண்ணொளிச் செக்கர்வாய் நகையரும் பிறையென்ன
நல்லார் தொழத் தோன்றலா
னம்பனொண் முடியினிடை நண்ணலாற் கங்கைபா
னவில்குழவி யாய்த்தவழ்தலா
லண்ணவிவ னுக்குநீ யொப்பெனுஞ் சொற்பெறுதி
யம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
65✓
உடுக்கள்சில வற்றொர்பதி நீயிவன் றானகில
வுலகிற்கு மொருமாபதி
யொருநாளீ னிறைவுடையை யாதீநீ யிவனென்று
மொருகுறை விலாநிறைவினான்
வடுத்தரு களங்கமும் பெறுதிநீ யிவனென்று
மன்னுமக ளங்கனாவான்
வருசில விராவினிற் சிற்றொளியை நீயிவன்
வரைவிலொளி யுடையனென்றும்
கடுத்தருங் கண்டன்முடி நிற்றிநீ யிவனவன்
கவின்மேனி முழுதுலவுவான்
கருதுமிரு குன்றிடைப் படுதிநீ யிவனெலாக்
கனமலையும் விளையாடுவா
னடுக்குமிவன் முன்னர்நீ மேருமுன் னணுவுமலை
யம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
66✓
மண்டல னொளிக்குநீ யஞ்சுவா யவனிவன்
வடிவே லொளிக்கஞ்சுவான்
வாளர வினுக்கென்று நீயஞ்சு வாயிவன்
மயிற்குமவை போதுங்கொலோ
விண்டலத் தவருன்னை யுண்டுறைவ ரவரையிவன்
விடுபூத மொன்றுண்ணுமால்
வேலையிடை வருதிநீ யதுவிவற் பணிமுனிவன்
மென்கையி னோருழுந்தாந்
தண்டலறு சிலாசாப முனைவாட்டு மவரிவன்
றண்ணளிக் கேங்கிநிற்பார்
தையலார் மையலிடை யாழ்திநீ யதுவிவன்
றன்னடியர் திசையு மெய்தா
தண்டமுற் றுதவிவற் கெண்டகுமொர் பொருள்கொனீ
யம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
67✓
முருகுவிரி கமலத் திருந்துல களிக்குமம்
முன்னவனு முகில்வண்ணனு
முப்பத்து முக்கோடி வானவரு மவர்பரவு
முதல்வனாம் புருகுதனும்
பெருகுதவ முனிவருஞ் சித்தரரு மிவன்காட்சி
பெற்றிட வடைந்தணைவுறப்
பெறுசெவ்வி யிலராகி மறுகுளத் தொடுவரிசை
பின்முனவ ரிவரென்னவே
யுருகுதுதி பாடியரு ணாடியெதிர் கூடிமு
னொருங்குட னெருங்கிநிற்ப
வுற்றவரு ளொருவரையு மழையாது தன்செங்கை
யொருவிரற் சுட்டியுனையே
யருகுவரு கெனவழைத் தனனுன ததிட்டமென்
னம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
68✓
கதிரயிலி னொளிகொண் டுடற்களங் கத்தினொடு
கருதுமக விருள்போக்கலாங்
கலவமயில் கொண்டர வெனும்பகையொ டம்புலக்
கள்ளவெம் பகைநீக்கலா
மெதிரிலிவன் வெற்புகொடு கயரோக முடனுளத்
தேய்கவலை யுந்தீரலா
மிணையிலிவன் மொழிகொண்டு மெய்க்கூனு முள்ளத்
திருங்கோட்ட முந்தவிரலாஞ்
சதிர்பெறு மிவன்கடைக் கண்ணோக்கி னிற்றேய்தல்
தகவளர்த லின்றிநிற்குந்
தகையன்றி நன்றழிவி னிலையொன்ற லாமிவன்
றனிநாம வாறெழுத்தா
லதிர்கட லொடும்பிறவி யகலலாஞ் சமையமீ
தம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
69✓
தன்றாதை பூசைதனி லொன்றாத பிழைகண்டு
தணியாத பசியொர்பூதன்
தானிட்ட சிறைவிடத் தமிழிட்ட கீரனைத்
தண்ணளி சுரந்தளித்தான்
குன்றாத தன்கோ புரத்துமிசை நின்றுவீழ்
குணவருண கிரியையேற்றுக்
கலையாத செந்தமிழ்க் கலையாய வாக்கினொடு
குறைவிலனு பூதிதந்தான்
பொன்றாத நின்பெரும் பாபமுஞ் சாபமும்
போக்கியுய்ந் திடவெண்ணினாற்
புகலுமெங் குமரனும் வருகென வழைத்தனன்
பொழுதுமிது போலுண்டுகொ
லன்றாத வன்பகையை வென்றான்றன் முன்னிவனொ
டம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
70✓
தேவரொடு மூவர்க்கும் யாவர்க்கு மறிவருஞ்
செவ்வேற் குமாரனிவனீ
செப்பருங் குரவற்கு மிழைபிழைக் கஞ்சாத
தீவினைய னென்றறிந்தும்
வாவென வழைத்திடவும் வாரா திருத்தியேன்
மற்றிவன் றிறல்கிடக்க
வன்பகையை வானட்ட மொயம்புடைத் தம்பியிவண்
மாறா துடிக்கணின்றான்
றாவெனவும் வேண்டாது தாவிநின் றன்னையொரு
தாளா லுதைத்துவீழ்த்தித்
தரணியிடை யொருசகட் டினிலுருட் டிக்கொடிரு
தாணிழற் கீழ்ப்படுப்பா
னாவதறி மதியென்னி னீயினித் தாழாம
லம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.
71✓
தருக்குமிகு நான்முகனை முன்றலை புடைத்துவன்
றளையொடு சிறைப்படுத்தான்
தஞ்சென வடைந்துபணி விஞ்சமரர் மகிழவவர்
தமதிருஞ் சிறைவிடுத்தா
னுருக்கொடுயர் கனகவரை யுறுபொழுதி னமரேற்ற
வும்பரனை வரையுமட்டா
னொண்குரு வடைந்தநனி பண்டுதிக் கவரெலா
முயிர்பெற வெழுப்பிவிட்டான்
செருக்கினொடு நீயிவன் றன்மையறி யாதெதிர்
சினப்பிப்பி னென்னாதிரோ
சென்றொருவன் வேள்விதனி லன்றொருவ னாற்பட்ட
செய்தியு மறத்திபோலா
மருக்கனென வினிதொளி பெருக்கிவாழ் வுறவெண்ணி
னம்புலீ யாடவாவே
யருணைநகர் நின்றுபொலி கருணைமுரு கன்றனுட
னம்புலீ யாடவாவே.