திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
செங்கீரைப்பருவம்3 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்
செங்கீரைப்பருவம்
12✓
அருணிலை படைத்தவுமை யம்மைநீ ராட்டிநீ
றள்ளியிட் டார்ந்தசுண்ண
மட்டிநற் றிலகமிட் டணிபல திருத்திமெய்க்
காலத்தி சுற்றியார்த்து
மிருணிலை படைத்தமல மகலவரு ஞானவமு
தேற்றுப் புகட்டநின்வா
யினிதூறு தேற்றன் மடிநனைப் பக்கொண்
டிருத்திமுத் தாடியியல்சொற்
பொருணிலை படைப்பநன் மரகதத் தொட்டிலொளி
பொங்கக் கிடத்தியம்பொற்
புரிவட மசைத்துநின் றரிதுதா லாட்டவப்
பொருவிலிசை கேட்டுமகிழ்கூர்
தெருணிலை படைத்தொளிரு மருணைவளர் முருகவேள்
செங்கீரை யாடியருளே
திங்களுக் குதவுசடை யங்கணற் கொருபுதல்வ
செங்கீரை யாடியருளே 12
13✓
பார்கொண்ட வெள்ளப் பரப்பிடை மிதந்தவப்
பணிமாமன் மார்பின்மணியும்
பருவர லகற்றன்னை சிறுவிரலி னாழியும்
பற்றா தெறிந்துநுந்தை
கார்கொண்ட கண்டக் கறைத்திரு மணிக்குளங்
காவா துடன்வலித்துக்
கைம்மலர்கள் கொண்டுகலுழ் கண்மலர் பிசைந்து சிறு
காலுதைந் தழுதல் கண்டங்
கேர்கொண்ட நும்முன்வர வாங்கவன திருசெவியு
மீர்ம்புழைக் கையுநால்வா
யெழிலுறும் பேழைவயி றும்பிடித் தழுகைதீர்த்
திளநகை புரிந்துமகிழுஞ்
சீர்கொண்ட தென்னருணை நேர்கொண்ட கந்தவேள்
செங்கீரை யாடியருளே
திங்களுக் குதவுசடை யங்கணற் கொருபுதல்வ
செங்கீரை யாடியருளே. 13
14✓
மருவுருவு மவைநிலவு தலமுமிவை யிவையென
வகுத்தெவர்க் குந்தருமொரு
மலரா தனத்தனெண் கண்ணினுமு னண்ணினரை
மாத்திரைப் பொழுதுமீயாக்
கருவரை யெனும்பகட் டூர்தியான் துர்செயெரி
கால்விழியி னும்பெருத்த
கலியினுநு மிடியினினை காரியந் தகையுமக்
கரியவ னொடுஞ்சுற்றமா
மொருவரிய கூட்டத்தர் நாட்டத்து மண்டு
யுதித்தவ ரடைந்திறந்தோ
ருற்றுமுன் கண்டவர்க் கருள்செயுந் தலமெனா
துன்னினர்க் குதவுதலமாந்
திருவருணை நகர்பெருக வருகருணை யுருமுருக
செங்கீரை யாடியருளே
திங்களுக் குதவுசடை யங்கணற் கொருபுதல்வ
செங்கீரை யாடியருளே. 14
15✓
மாசகலு மணியணிந் தவரிடத் துறவதன்
மன்னுபே ரொளிபரந்து
வயின்வயி னிமைப்பதென மகிழுமைம் பொறியி னொடு
மனவாக் கினுக்குறாநம்
மீசனந் நிலையினி லிருப்பவவ னடிமலர்க
ளெண்ணியேத் திப்பணியுமவ்
விணையிலன் பாளர்தமிடந்தொறு மெதிர்ந் தருள்செ
யேந்தனீ யென்பதுணர
நேசமலி வானவ ரிறைஞ்சவறு பொறியினர
னெற்றிவிழி யிற்போந்துவா
னின்றுபுவி துன்றிருஞ் சரவணத் துற்றவர்த
நீள்குறை முடித்தருள் செயுந்
தேசமலி தருபுகழ்த் தென்னருணை வாழ்குகன்
செங்கீரை யாடியருளே
திங்களுக் குதவுசடை யங்கணற் கொருபுதல்வ
செங்கீரை யாடியருளே. 15
16✓
துத்திப் படத்தரவு வேணிமுடி யும்பிறை
துளங்குநுத லுங்கொண்டவத்
தொல்லோ னிருங்குமர னெனநினைப் பிக்குமச்
சூழியுஞ் சூழியார்ந்த
பத்திப் பகட்டுவயி ரச்சுட்டி யுஞ்சுடர்
பதிந்தாட நெற்றியம்பொற்
பட்டமா டத்திரு விளங்குகுழை பெறுசெவிப்
பானிலை குதம்பையாட
வெத்திக்கு மொளிவீசு மார்பிணணி யாரமு
னிசைந்தசைந் தாடமேரு
விகலிவளை யரவெனும வகலிலரை வடமாட
வெண்ணினோ ரெண்ணியவெலாஞ்
சித்திக்க வருளுமொரு திருவருணை முருகவேள்
செங்கீரை யாடியருளே
திங்களுக் குதவுசடை யங்கணற் கொருபுதல்வ
செங்கீரை யாடியருளே 16
17வேறு✓
திருமா முகமென வருமா சறுநிறை
திங்க ளசைந்தாடத்
திகழ்கா தெனும்வளை நிகழ்வார் குழையொடு
திவளுபு நின்றாடப்
பொருமா றடுபுய வருமால் வரைபல
பூணொ டொளிர்ந்தாடப்
புகழ்மார் பணிபணி புதுமா நிலவு
பொருந்தி விரிந்தாடப்
பருமா நிலமொடு பெருவா னுலகுறு
பண்டி சரிந்தாடப்
பகல்கா லரைவட மிகவோர் திருவரை
பந்தனை கொண்டாட
வருமா தவர்புனை குருமா மணியவ
னாடுக செங்கீரை
யருணா புரக்க கருணா கரகுக
னாடுக செங்கீரை. 17
18வேறு✓
ஒருபொற் பொதுவினி லிருநற் றிருநட
முயிரிடர் பொன்றிடமே
லுயர்வுற் றருணல மதுபெற் றிடநினை
யுளனொடு நுந்தைதனோர்
மருவைத் திடுமடி யலகைப் புறமதின்
மதனிற வூன்றியிடா
மலர்மற் றொருதிருவடிமிக் குயர்தர
மகிழ்வி னெடுத்திடல்போ
லிருண்மொய்த் திடுமல மிரிவுற் றிடநில
னிருகை பதித்தொருதா
ளிருவிக் கதிநல முறமற் றொருபத
மெழிலொ டெடுத்துநிமிர்ந்
தருண்மெய்த் திருமுக மலர்வுற் றசைதர
வாடுக செங்கீரை
யருணைப் பதிவரு கருணைக் குருபர
னாடுக செங்கீரை. 18
19வேறு✓
பண்ணுறு வானெனு நீல விதானப்
பந்தர் பொறுப்பமதன்
பவளப் போதிகை மரகத மியல்கால்
பல்க நிறுத்தியென
விண்ணுற விடுசெம் பாளையி னீளுபு
மிளிர்பல பைங்கமுகின்
விரிமட லிடையிடை மதுகரம் வைத்த
வியன்றே னடையருக்கர்
நண்ணுறு திரையெறி வெண்ணில வுமிழ்தரு
நந்து தவழ்ந்தவைதா
ஞால மளப்ப நிமிர்ந்தொளிர் சக்கர
நத்திரு கைத்தலமா
ரண்ண லெனப்பொலி பெண்ணைநன் னாடா
வாடுக செங்கீரை
யாரரு ணாபுரி யூர்கொண் மயுரா
வாடுக செங்கீரை. 19
20✓
நளிகட லிற்றுயில் பவன்முத னத்தி
நலஞ்சா ருங்கோவே
நலிவினை வெப்புறு மெலிவு தவிர்ப்ப
நயந்தா ருங்காவே
யொளிபெறு நற்றவ ரெனுமளி சுற்றி
யுவந்தே றும்பூவே
யொருவில் கொடிச்சிமுன் மருவு புனத்தி
னுழன்றோ டுஞ்சேவே
துளிமுகி லொத்திரு விழிபுனல் வைத்தவர்
துன்பீ ருந்தூவே
தொழுவு ணிணைக்குமுன் முழுதருள் வைத்துறு
தொண்டோ ருந்தேவே
தெளிதமி ழூக்கொரு கனிவரு மற்புத
செங்கோ செங்கீரை
திகழுரு ணைப்பதி மகிழுறு மெய்க்குக
செங்கோ செங்கீரை. 20
21வேறு✓
வென்றே றுஞ்சீர் குன்றா விண்சேர் கின்றாரும்
வெம்பா சந்தீர் கென்றே யொன்றோர் நன்றாரு
மின்றே நன்றா நின்றா டந்தா ளெந்தாய்நீ
யென்றே நின்பா லன்பாய் முன்பே நின்றோதக்
குன்றே யுங்கா னின்பால் வந்தா டன்பான்மால்
கொண்டே தண்டே னுண்டே வண்டா ருஞ்சாரல்
சென்றே யந்தா டந்தாய் செங்கோ செங்கீரை
செங்கேழ் குன்றார் கந்தா செங்கோ செங்கீரை. 21