முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
காப்புப்பருவம்2 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

காப்புப்பருவம்

2திருமால்✓
உலகின்வரு தூயரைத் தீயரை யடர்த்திங்
கொருங்குகாத் திடுவனென்ப
துடையாற்ற லாலன்று படையாற்ற லாலென
வுரைப்பினு முரைப்பரென்றே
யிலகுதன் மெய்யாற்றல் காட்டுவான் கடவுளர்த
மிறைபகைமை கொளுமாறிழைத்
தேந்தருங் குன்றெடுத் தாயரொடு மானிரைமு
னினிதுகாத் தோன்புரக்க
விலகறும் பகலொளி புகாமையாற் றென்றனனி
வீசலா லூசலாட்டின்
மேவலான் மண்மகளிர் விண்மகளி ரெனுமயல்
விடாதுமெய்ந் நிழல்படாது
திலகநுதல் வெயர்வரும் பாதுமெல் லடிநிலஞ்
சேராது சோராதுவான்
றெரிவையரொ டாடிமன மகிழ்சார லம்பொழிற்
றிருவருணை வாழ்குகனையே.
3அண்ணாமலைப் பெருமான்✓
வேறு சந்த விருத்தம்
மருவிட மெவையு மகிழ்ந்துதன் புகழைத் துதித்திடு
மலர்மகள் கடிது மருண்டுகண் டுளனிற் றிகைத்திட
வருகர ரெவரு மருந்துகொண் டுறுநற் கிடக்கையும்
வனசநன் மனையு மொருங்குமங் குபுவெற் றிடப்படத்
தருநில னகழ்பு விலங்கின்வென் றிகொளச்சக் கரத்தவன்
றகுபற வையின்வி ணுயர்ந்துசென் றயன்மட் டலர்ப் பதந்
தடமுடி துருவ நிரந்துதுன் றுலகுட் படச்செலுந்
தழன்மலை யெனமு னெழுந்துநின் றவரைப் பழிச் சுதுங்
கருமுகில் படிய வணைந்துபன் மலர்தூற் றிருப்பமென்
கடிகமழ் கொடிகள் வலந்துநன் சினையிற் செருக்குபு
கவின்மட மகளி ருதைந்துகொண் டுரனிற் சிறத்தல் பைங்
கதிர்வட மதனை யிலங்குபொன் னணியுத் திரத்துறுத்
தருகலி லொளிகை பரந்தபன் மணிவைத் தியற்றிரு
வவிர்துகின் மிசையின் விரிந்தமண் டபமுற் றசைத்தது
வயர்தரல் பொருவ நெருங்கிவிண் டொடுநற் பொழிற்றிரு
வருணைந னகரி னமர்ந்தநங் குகனைப் புரக்கவே.
4உண்ணாமுலையம்மை வேறு சந்த விருத்தம்✓
மறைகண்முன் னானவை யறையுமன் னாவினின்
மருவும்வெண் ணீள்கலை யன்னநற் பேட்டொடு
வனமுகண் மார்பினின் மணிகொளந் நீண்முகின்
மகிழுமின் னாயுறை பொன்னுமுற் பார்த்தெதி
ரிறைவியென் னாதிவ டனையெனின் னேசொல
லெனமுனெண் ணாவவர் சென்னிகைக் கூப்பிட
விருமையுன் னாமன்மெய் யொருமையண் ணாமலை
யியையுமுண் ணாமுலை யம்மையைப் போற்றுதுஞ்
சிறைசெய்நன் னீரிடை நிறையுமொண் ணீலம்வண்
டிருவின்வண் மாமலர் தம்மையுட் கோட்டுபு
திருகுமம் மேதிசெய் யருகுநன் மாநிழ
றெரிபுகண் ணோர்துயி றண்ணடைப் பாற்கொள
வறைகண்மன் மால்வரை யதனினின் றூர்திரை
யருவிதெண் ணீரிசை யின்னொலிப் பாட்டுறு
மருணைநன் மாநக ரமருமுந் நால்விழி
யமரர்தம் மான்விழை செம்மலைக் காக்கவே.
5யானை திறைகொண்ட விநாயகர் வேறு✓
உம்பர் தொகையு மானுடரு
முளத்து நினையு மவைமுற்ற
வொருதந் தலையி னிருதலையு
முட்கு வரக்குட் டுபுதாழக்
கொம்பொன் றிருதாண் முன்றுவிழி
குலவு நாற்றோ ளைங்கைநனி
கொண்டங் கமரும் யானைதிறை
கொண்ட களிற்றை வழுத்துவா
மிம்பர்த் தலத்தின் றவம்வானுக்
கெங்ங னுறுவ தெனவிசைப்ப
வெந்தை மலையா யெழுந்தருளி
யிருக்கு மதனுக்குக் கியையவுய
ரம்பொற் றிருக்கோ புரத்துவட
வருகி னரியேற் றிளங் குருளை
யாகி நிலவு மருணையம
ரறுமா முகனைப் புரக்கவே.
6திருநீறு கண்டிகை திருவைந்தெழுத்து வேறு✓
மறிதிரை சுருட்டுநெடு வேலைசூ ழும்புவியின்
மன்னுமா ருயிர்களெல்லா
மயறுளைந் துயர்வினின் றுயர்வொழிந் தொழியாது
வலனொடு நலன்கடுய்க்கு
நெறிபெற வகுத்தெந்தை தன்னருளி னுருவாய்மு
னிலவிட வளித்தருளும்வெண்
ணீற்றினைக் கண்டிகையை யஞ்செழுத் தைத்துதி
நிகழ்த்தியஞ் சலிசெய்குவாங்
குறியவுரு நெடியமெய்த் தவமா முனிக்குமெண்
குணநம்ப னார்க்குமரிய
குருமொழியு மகரருக் குறுபகலி னவதியுங்
குதிகொள்வா னோர்க்குவிண்ணி
னுறுவாழ்க்கை யுஞ்சுர மகட்குங் குறத்திக்கு
மொண்புயமு மடியார்தமக்
கொளிர்கமல பதமுமுன் வாய்ப்பவரு ணைக்குள்வரு
மொருமுருகை யருள் புரியவே.
7பிரமதேவன் வேறு✓
புலக்குறும் பெறிந்து பவத்தகழ் கடந்து
பொருவின்மெய் யுணர்வெனு மெயிலே
போதரக் கொண்டு மேவிவாழ் கின்ற
புனிதமா தவர்களெண் ணிலார்க
ளலக்கணாற்றினைப்ப நெறிமயக் குறுத்தி
யலைத்தல்செய் துறுகுரு கியற்பே
ரருவரை சிறுநுண் டுகளசெயெம் மருணை
யயிலனை மயிலனைப் புரக்க
கலக்கமற் றுயிர்க ளுடல்பொறி கரணங்
கைக்கொடு புவனகோ டிகளிற்
கடிதுசென் றுலவி யவட்படு நுகர்ச்சி
கருத்தொடு நுகர்ந்துபே ரறிவி
னலக்கமற் றவைக ளவ்வவை தமக்கு
நண்ணுபன் முகங்களா னாளு
நனிபடைத் துதவித் துனிதுடைத் திடுமந்
நான்முகம் படைத்தபுத் தேளே.
8தேவேந்திரன் வேறு✓
இரைத்துமிசை யருவிவிழு மறையி னெல்லா
மிளந்தென்றல் சந்தனத்தி னிருங்கோ டேற்றி
யரைத்துநறு நாவியொடுங் கலந்து வீசு
மருணைவளம் பதியறுமா முகவற் காக்க
தரைக்குலவு மகளிந்நகி லன்றித் தன்னூர்த்
தகையர்நகில் பொறவெழுதல் தகாதென் றுற்று
வரைக்குலத்தைச் சிறகிறுத்து மண்ணினாக்கும்
வச்சிரநற் படைபொறுத்த வானோர் கோனே.
திக்குப் பாலகர் வேறு✓
கொம்பன நுண்ணிடை மங்கையர் நுண்டுகில்
கொண்டவ ணீந்திடுவான்
கொண்டல் வண்ணபல கண்கொடு நின்று
குறும்ப்பொடு பார்த்திடல்போ
லம்புய மலரு மருந்தட மெங்கணு
மங்கனை மார்குடைய
மந்தண மருணையின் வந்தருள் கந்தனை
யன்பொடு காத்திடுவார்
பம்புறு செங்கதி ரங்கி ஞமன்னிரு
தன்பகர் தெண்கடலோன்
பங்கமி றண்வளி சந்திர னெந்தை
பதம்பெறு புங்கவனென்
றிம்பரொ டும்ப ரிருந்தவர் நெஞ்சி
னியைந்து பணிந்திடவே
யெங்கணு நின்றவர் நன்கு புரந்திடு
மெண்டிசைக் காவலரே.
10திருமகள் கலைமகள் எழுவர் வல்லியர் வேறு✓
செல்லாத சொல்லையுஞ் செல்லச் செலுத்தியச்
சிறியரைப் பெரியராக்குந்
திருமகளை யுங்கல்வி தருமகளை யுந்திரி
புரம்பொடி படுத்தவன்கடல்
கல்லா லுடைத்தவள் வடிவேல் விடுத்தவள்
கற்பகா டவியிருந்தாள்
கபாலத்த னூலின் னெயிற்றினுமு தாளெழுவர்
கன்னியரை யும்பன்னுவா
மொல்லாது செங்கதி ரொளிப்பவுயர் வுற்றிரு
ளொருங்குவாள் விழிபுதைப்ப
வூடலின் மடவார் பரிந்தசெம் மணிபரிதி
யொள்ளொளியின் மீக்கூர்தலா
லல்லார் கரும்பொழுது மெல்லார் பெரும்பொழுது
மணிமாட வீதிநிகழு
மருணை நகர் தழையவரு தருணவறு முகமகவை
யண்மியன் பொடுகாக்கவே.
11முப்பத்து முக்கோடி தேவர் வேறு✓
விசிக்கும் வள் ளுறுவார் முழவினைக் கூத்தர்
விறலியர் நடிப்பமுன் னேந்தும்
விதியினின் வடுக்கைப் பருங்கனி கரிய
விரல்ப்படு கைகளாள் மிசைத்தாய்
முசுக்கலை பறிப்பப் பிணாமகிழ் கொண்டு
முன்னுறக் குதிக்கும்வண் பொழில்சூழ்
மொழிபுக ழருணைக் கொழிதமிழ்க் கடவுண்
முருகனை யினிதளித் திடுவார்
பசுக்களி னெய்பா லவிசொரிந் தவனிப்
பண்ணவர் பண்ணுறும் வேள்வி
பலவுடன் மகிழ்ந்து நலனருள் விண்ணிற்
பண்ணவ ராகிநண் ணுநராம்
வசுக்களோ ரெண்மர் மருத்துவ ரிருவர்
மன்னுருத் திரர்பதி னொருவர்
வளரொளி யருக்கர் பன்னிரு வர்களா
வைத்தமுப் பத்துமூ வருமே.