முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
சிறு தேர்ப்பருவம்11 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

சிறு தேர்ப்பருவம்

92✓
இலகுற்ற வயிரத் தியற்றியமை வண்டிலு
மெழின்மர கதத்தச்சுநீ
டினியகோ மேதகத் தட்டுமேற் பவளத்
திருத்திய நிரைக்கால்களு
நிலவுற்ற நீலத்து மேன்முகடு மாடக
நிறக்கலச மும்பொலிந்து
நிழல்விதா னத்தினொடு குடைவடமு நித்தில
நிறைந்துற வலங்கரித்து
வலனுற்ற நம்பரன் வைதிகத் தேருமிதன்
வளனுற்ற தில்லையெனவே
வானுற்ற விந்திரன் மான்முதலி யோர்குழ
மண்ணினொடு விண்ணுமெங்குஞ்
செலவுற்று வருகொற்ற மலர்வுற்ற நலனுற்ற
சிறுதே ருருட்டியருளே
திருமா றனக்கரிய வருணா சலக்குமர
சிறுதே ருருட்டியருளே.
93✓
வெங்களப் பட்டவ ருடற்குவைக் குன்றேறி
விளையாடு குட்டிவன்பேய்
மிதந்தோடு குடர்மாலே கொள்வலென் றறியாது
வீழ்ந்திடக் கைவிதிர்த்துப்
பொங்களக் கர்க்குநிக ராமுமும் வேகமும்
போற்றுபு பிடித்தீர்க்குமப்
புலவுவாய்க் கழிகட் டிரங்குகொங் கைப்பெண்ணை
பொருவுடற் றாய்ப்பேயையு
மங்களற் றுப்பட வலைத்துப் புரட்டியீர்த்
தடுகரியொ டரிபரியையே
ரவுணர்பல் றலைகவந் தங்களொடு செங்குருதி
யாறவை யுருட்டியோடச்
செங்களத் தெங்கும் பெருந்தே ருருட்டினோன்
சிறுதே ருருட்டியருளே
திருமா றனக்கரிய வருணா சலக்குமர
சிறுதே ருருட்டியருளே.
94✓
@todo add the missing 4 lines
ரகமுற்ற கடலதிர நிலனதிர வேகவூர்ந்
ததினுற் றிருக்குமவரிவ்
வகிலாண்ட கோடிபிர மாண்டமும் வணங்குமென்
னத்தரா யினமென்வர
மிகமுற் றகன்றிடற் கெண்ணலொண் ணாதென்ன
விடையச்சு முரிவித்தவவ்
விபுமுகத் தண்ணறன திதயங் களித்தெழு
மிளங்கிளைப் பேரன்பினாற்
றிகழுற்று நன்குசெல மகிழ்வுற்று நோக்கநின்
சிறுதே ருருட்டியருளே
திருமா றனக்கரிய வருணா சலக்குமர
சிறுதே ருருட்டியருளே.
95✓
மறுதே ரிதற்கெதிர்வ தில்லையென வரமதின்
மன்னுமிந் திரஞாலமா
மாத்தே ரினைச்சூர வன்மனொடு நில்லாது
வருகென நிறுத்தினால
மிறுதேர்கொ லிதுவென வரன்றிரு வுளத்தா
லியற்றிமு னளிப்பவளிதா
னிசைவலவ னாகிமுன் றாண்டவண் பரியோ
ரிலக்கமவை யீர்ப்பவிருளைத்
தெறுதே ரவன்றனைச் சிறைசெய்மைந் தற்றந்த
திண்டிறலவ் வவுணர்தலைவன்
சிங்கமொடு பேய்பரிக ளெவ்வெழுப தாயிரஞ்
சேர்ந்திழுத் திடுபெருந்தேர்
சிறுதே ரெனப் பெருந் தேரூர்ந்து நின்றவன்
சிறுதே ருருட்டியருளே
திருமா றனக்கரிய வருணா சலக்குமர
சிறுதே ருருட்டியருளே.
96✓
எறியொளிக் குலிசத்தன் வான்முழுது மின்பமுட
னெழிலியந் தேரூரவு
மீரிரு முகத்தவனு மிச்சைவழி யெங்குந்த
னெகினவந் தேரூரவு
மறியுயிற் பாற்கடற் கண்ணனு மகிழ்ந்துபுள்
ளரசவந் தேரூரவு
மாயிரத் தெட்டென்னு மண்டமுழு தும்போகி
யமர்விளைத் தெய்த்தசூரன்
மறிநெடுங் கடலினொரு மாவாகி யெழுவேலின்
மற்றதனை யிருகூறிடா
மயிலினொடு சேவலுரு வாயெதிர்ந் திடவருளி
மலிபுவன முழுதும்வலமாய்ச்
செறிகலவ வம்மயிற் றேரூர்ந்து நின்றவன்
சிறுதே ருருட்டியருளே
திருமா றனக்கரிய வருணா சலக்குமர
சிறுதே ருருட்டியருளே.
97வேறு✓
நாடி யிறையே நீயதிர்ப்பின்
ஞால மதிரு நளிகடலு
நரன்று துளும்புந் திசைக்களிறு
நடுங்கிப் பிளிறுங் குலமலைகள்
வீடிக் குலுங்கு மளவில்படம்
விரிக்கு மரவுந் தலைபனிக்கும்
விண்ணு மதிரு மிருசுடரும்
வீழு முடுக்கண் மிகவுதிரும்
கோடி கோடி யளவின்மிகக்
குறிக்கு மண்ட மவையடுக்குக்
குலையு மவைகள் குலையாமே
கோக னகக்கை வருந்தாமே
ஓடி மெலியா மேமெல்ல
வுருட்டி யருள்க சிறுதேரே
உண்ணா முலையாண் மகிழ்மைந்தா
வுருட்டி யருள்க சிறுதேரே.
98✓
அரிய தவமாங் கோயிலினு
ளாசின் ஞான மண்டபத்தி
னலகில் கலையா மமைச்சர்குழா
மருகு சூழ வாறாறாய்த்
தெரியுங் கருவி யென்னுமணிச்
சிங்கா தனத்தின் மிசையேறித்
திருவா ரருளா நெறிசேரச்
செங்கோல் பிடித்து முத்தியெனும்
பெரிய நாடாள் பவர்தலைக்கொள்
பேரா னந்த மாமுடியே
பிறங்கு மருள்வா னெழுமதியே
பிழைதீ ரன்பாற் பேணுமவர்க்
குரிய நிதியே யொண்சுடரே
யுருட்டி யருள்க சிறுதேரே
உண்ணா முலையாண் மகிழ்மைந்தா
யுருட்டி யருள்க சிறுதேரே.
99✓
ஆறு சமயங் களும்வணங்கு
மறுமா முகத்தெம் மருட்டேவே
யழகா வாடு மயிலின்வரு
மரிய மணியே வருணிதியே
மாறு படுசூர் மாளவிடு
வடிவே லரசே சீரலைவாய்
வருமோர் திருவே மலைகளொறு
மன்னு மருந்தே மதிஞருளந்
தேறுங் கதியே தெளிபவர்க்குச்
சிந்தா மணியே கற்பகமே
சிந்தைக் கினிக்குந் தீங்கனியே
தேனே கண்டே செறிந்துசுவை
யுறு மமுதே யுயிர்க்குயிரே
யுருட்டி யருள்க சிறுதேரே
உண்ணா முலையாண் மகிழ்மைந்தா
யுருட்டி யருள்க சிறுதேரே
100வேறு✓
காமர் சகத்திர ராயினு மொப்பறு
கட்டழ காவானார்
கடவுட் பிடியொடு குறவர்க் கோர்கொடி
கட்கிசை காதலனே
தீமன முற்றவர் பாலணு காத
திருத்தகு மெய்த்தாளா
திகழ்தரு நீபநன் மகிழ்தொடை யாறிரு
திண்வரை பெறுதோளா
தூமதி வைத்த சடைப்பெரு மான்சொற்
சுவைபெறு திருவாயாய்
தொழுத்தொகு தேவர் படைக்கொரு காவ
றுறப்பறு முதல்வோனே
ஓமெனு மெய்ப்பொரு ளேயரு ணைக்க
ணுருட்டுக சிறுதேரே
யுமைக்கொரு பால னெமக்கருள் சீல
னுருட்டுக சிறுதேரே.
101✓
அருட்கட லான கறைக்கள நாத
னளித்தருள் மகன்வாழ்க
வகத்திருள் போக மிகுத்துறை மூவி
ரருட்டிரு முகன்வாழ்க
விருட்டகல் போலு மறக்குலர் வீட
விறுத்தருள் குகன்வாழ்க
வினித்திடு தேவ ரிடர்க்கட லேறி
யிடத்தரு சுகன்வாழ்க
திருத்தணி யாதி மலைச்சுடர் வாழ்க
வெனத்திகழ் தமிழாலோர்த்
திருப்புக ழோதி யிருப்பவர் பார்மெய்
செழித்திட வதன்மேலோ
ருரைப்பரு வாழ்வி னிருத்திடு வேல
னுருட்டுக சிறுதேரே
யுனற்கமை சோண கிரிக்கும ரேச
னுருட்டுக சிறுதேரே.