முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
காப்பு1 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

காப்பு

1ஆசிரியவிருத்தம்✓
பூமன்னு நான்முகப் புத்தேளு மாயனும்
புந்திவெரு வச்செந்தழற்
பொருப்புருவ மாயவவ் வண்ணா மலைப்பிரான்
புதல்வனென றேற்றமெனவே
தேமன்னு மணிமுடிக் கொடுமுடியொ டிருமதத்
திகழருவி பாயமலைபோற்
றிருமேனி யெழில்செய்செங் கழுநீர் விநாயகன்
சேவடிக ளேத்தெடுப்பாம்
தூமன்னு கங்கைநம் பன்சடைக் காட்டுடு
துன்னிநோக்குறவும்விண்மீன்
றொகையிடை யிருந்து கார்த் திகையர்நோக் குறவு முமை
சொல்லரன் பாங்கிருந்து
மாமன்னு மடியின்மிசை வைத்துமுத் தாடிமன
மகிழநாப் பட்டவழ்ந்து
மழலைமொழி தருமதலை யருணைநகர் முருகனுயர்
மகவின்வண் டமிழ்தழையவே.