முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
வருகைப்பருவம்7 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

வருகைப்பருவம்

52✓
தஞ்செனு மவர்க்குதவு செஞ்சரண கஞ்சமேற்
றண்டைகிண் கிணியொலிப்பத்
தமனிய வடஞ்சுற்றி நிரையினிடு மரையின்மணி
சற்றொர்சிற் றொலியெழுப்ப
விஞ்சொளி பரந்தமார் பிற்சன்ன வீரமும்
விலையிலா ரமும்வில்வீச
மேருமண் டலமெனச் செவிமகர குண்டலம்
வியன்றோளின் வெயிலெறிப்ப
வெஞ்சலில் பட்டமுஞ் சுட்டியும் விட்டிலக
வீராறு கண்மலரொடே
யெழுமதியொ ராறெனு முகந்தொறுஞ் செவ்வாயி
னிளநகை நிலாமுகிழ்ப்ப
வஞ்சொன்மலை மங்கையொடு சங்கரன் கண்வரு
மருட்குமா ரன்வருகவே
யமரர்பதி பணியவரு குமரகுரு பரனெங்க
ளருணைவாழ் குகன்வருகவே.
53✓
@todo add the missing 8 lines
செங்கைமழு வோன்றனது பங்கிலுறை மங்கையொடு
சீர்த்தவிடை மேலணுகும்வாய்த்
தேவிமகிழ் வோடெனது சேய்வரு கெனாவாறு
சீருருவு மோருருவமா
வங்கையி னெடுக்கவவள் கொங்கைபொழி பாற்குவரு
மாறுமா முகன்வருகவே
யமரர்பதி பணியவரு குமரகுரு பரனெங்க
ளருணைவாழ் குகன்வருகவே.
54✓
பண்டருந் திவ்வியாழ்ப் பாண்முனிவ னொருபகற்
பண்ணுமொரு வேள்வியின்கட்
படுபிழையி னாலுலக மடுவதென வேயெழீஇப்
பாய்ந்தவெந் தகரொன்றுதன்
கண்டருஞ் சூரருயிர் குடித்தல கிடித்துமைக்
ககனமுற் றுங்குலாவக்
காவென விறைஞ்சிமுறை யோவெனுஞ் சுரர்களிடற்
கண்டருகு நின்றுபோற்றுந்
திண்டிறல்கொ ளிளவன்முன் கொண்டணைய மண்டதன்
செம்புற மிவர்ந்துபற்றித்
திசாதிசை நடுங்கமு னிசாசர ரொடுங்கவெவர்
திட்டிக்கு மெட்டவரிதா
வண்டரண் டங்களு மடங்கவூர்ந் தேவரு
மடற்கந்த வேள்வருகவே
யமரர்பதி பணியவரு குமரகுரு பரனெங்க
ளருணைவாழ் குகன்வருகவே.
55✓
தருஞ்செயல் புரிந்திடத் தந்தைதாய் விடைதரத்
தண்கயிலை விட்டணைந்து
தஞ்சமென நஞ்சருறை வஞ்சகிர வுஞ்சமொடு
தாரகன் றன்னையட்டு
வருஞ்சுரரொ டெண்ணிறலம் வழிபடுஉத் தெற்கணலை
வாய்வந் திருந்துமுதுசூர்
மனமது தெரிந்தினிது வருதியென வேவீர
வாகுவை விடுத்தஞான்று
பெருஞ்சுர பதிக்குமக னுற்றிடு கனாவினிற்
பெரிதவ னிறும்புதூறப்
பெட்குமுக மோராறு மீரறு கரத்திற்
பிறங்குபடை களும்விளங்க
அருஞ்சிறை யிருந்தவன் வருந்துதல் திருந்தவரு
மருண்முகுக வேள்வருகவே
யமரர்பதி பணியவரு குமரகுரு பரனெங்க
ளருணைவாழ் குகன்வருகவே.
56✓
மாகண்ட கத்தவுணர் பேய்கண் டெனக்கண்ட
வளநகர்க் கேயணித்தாய்
வளரேம கூடத் திலக்கரொடு நவவீரர்
மலிபூத ரோடும் வைகி
சேகண்ட ரகலவரு சிங்கமுக னாதியர்ச்
செற்றபிற் சூரபன்மன்
செய்மாயை யாவுந் தெரிந்தவன் றேரொடு
திரிந்துலா விடவெழுந்து
போகண்ட மெங்கணும் போயமர் விளைத்தவன்
புணரியிடை மாவாய்வரப்
போழ்தலுஞ் சேவலொடு மயிலா யிடக்கொண்டு
புகலமரர் தஞ்சிறைவிடுத்
தாகண்ட லன்நகர் நேர்கண் டிறைஞ்சவரு
மயில்வேற் பிரான்வருகவே
யமரர்பதி பணியவரு குமரகுரு பரனெங்க
ளருணைவாழ் குகன்வருகவே.
57வேறு✓
அலையார் புனலின் நன்குமலரந்
ததன்பிற் கூம்பாத் தாமரைபோ
லங்கை யிரண்டும் நீட்டிவிரித்
தையா வருக வெனவழைத்தே
நிலையா ரன்பொன் றிலரெனவே
நினைந்தாய் போலப் புறநோக்கி
நீட்டித் தின்னும் வாராது
நிற்பா யெனில்யா மென்புகல்வே
மிலையார் கொடிகொம் பிலதெனவே
யிடருற் றிருக்கு மதுவன்றி
யெண்ணம் விடுத்து நினக்கயலா
வெங்கும் பெயர மாட்டேமால்
மலையான் மடந்தை தருமருமை
மைந்தா வருக வருகவே
வளமா ரருணை யாறுமுக
வள்ளால் வருக வருகவே.
58✓
முருகா வருக வருடருசண்
முகனே வருக வமரர்தொழு
முதல்வா வருக வெனப்பலகான்
மொழிந்து மெம்பால் வாராயேல்
ஒருகா னினைக்கி னிருகாலு
முடன்வந் தருளுமெனவுரைத்தோ
ருரையும் பொய்யாங் கண்கண்ட
வொருதெய் வமதா வுற்றவருக்
கருகா வருள்செ யமலனெனு
மதுவும் பழுதா மென்றென்று
மகலா விளமை யவனெனலு
மாகா தம்ம வம்மாயோன்
மருகா மறவர் குலவள்ளி
மணவா வருக வருகவே
வளமா ரருணை யாறுமுக
வள்ளால் வருக வருகவே.
59✓
விதியே புகலும் பழமறையின்
வித்தே வருக மெய்த்தசுவை
விசும்பும் விரும்பும் பசுந்தமிழின்
விளைவே வருக வணையன்பர்
கதியே வருக வெவ்வுயிர்க்குங்
கண்ணே வருக வெண்ணுசுவைக்
கரும்பே வருக நிரம்புமருட்
கதிரே வருக துதியறிஞர்
நிதியே வருக நீடுவத
நெறியே வருக நெறிநின்றோர்
நிலையே வருக நிலையின்ப
நிறைவே வருக நிறைஞான
மதியே வருக வமரர்சிகா
மணியே வருக வருகவே
வளமா ரருணை யாறுமுக
வள்ளால் வருக வருகவே.
60வேறு✓
தமையு முடைய தனையு முணர்நற்
றகுநன் மதியன் வருகவே
சதுநன் முகனுமரிய பொருண்மை
தருமொர் முதியன் வருகவே
சமைய மெவையு மறிய வரிய
சரத நிலையன் வருகவே
தனைமு னெவரு நணிய வருமொர்
தணிகை மலையன் வருகவே
இமையி லவரு மடிகள் பரவ
விகலு மிறைவன் வருகவே
எனைய பொருளு மொழிவி னுழைவி
னியலி னிறைவன் வருகவே
யுமையு மரனு மமைய நடுவ
ணொளிரு மமரன் வருகவே
யுயரு மருணை யயர்வில் கருணை
யுதவு குமரன் வருகவே.
61✓
வடிவு கடலி னெழுமோர் பரிதி
மயிலன் வருக வருகவே
வலனு மிடனு மருவு மகளிர்
மகிழ்நன் வருக வருகவே
அடியர் வினைகள் கெடமுன் விடுமொ
ரயிலன் வருக வருகவே
யமல கமல பதமு ளருளு
மமுதன் வருக வருகவே
படியி னினைய விடர்க ளடுமோர்
பகவன் வருக வருகவே
பகலு மிரவு மகலு நிலைகொள்
பரமன் வருக வருகவே
முடியு முதலு மறிய வரிய
முதல்வன் வருக வருகவே
முகில்கொ ளருணை நிகரில் கருணை
முருகன் வருக வருகவே.