முருகன் App
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
அம்புலிப்பருவம்8 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

அம்புலிப்பருவம்

63✓
எண்இரண் டேந்துகலை வாய்ந்தும்ஒரு கார்த்திகை
இளம்பயோ தரம்உகந்தும்
எம்பிரான் சடிலகோ டீரப் பெருங்கங்கை
ஆற்றிடை வளர்ந்தும்எங் கோன்
திண்ணலம் பெருகும்ஒரு கண்ணனைத் தந்தும்இந்
தீவரச் சுனைவியந் தும்
சிகரவரை இடறியும் பூச்சக்கர வாளச்
சிலம்புசுற் றித்திரிந்தும்
விண்ணலம் தருமமலை வேலைநின் றோங்கமர்
வேட் கவிகை தந்தும் இவைஓர்
விகடதட மணிமகுட நிரைபழகு சரணார
விந்தனை நிகர்த்தி அந்தோ
அண்ணல்அம் சேவற் பதாகைப் பிரதாபனுடன்
அம்புலீ ஆட வாருவே
அந்தண்மரு தஞ்செறி இலஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
64✓
ஓராயி ரங்கோடி தோட்டுநெட் டோடைமட்
டுமிழ்பூண்ட ரீகம்என் றோ
உம்பர்கடை யுந்திருப் பாற்கடல் தாழியின்
உருட்டுதெள் அமுதம்என் றோ
கார்ஆழி விடம்உண்ட கண்டன் சடாடவி
கட்டுமலர் இண்டைஎன் றோ
கற்பகா டவிமகளிர் கத்தூரி தீட்டுகைக்
கண்ணாடி என்றெண்ணி யோ
தாரா கணக்கயலின் இரைதேர் தரப்புக்க
சக்ரவா கப்புள்ளன் றோ
தன்அன்னை தந்தபாற் கிண்ணம்என் றோ கொண்டு
தம்மின்கள் தம்மின்கள் என்
றாராயும் மறைமுடிவில் ஆடும்இவன் ஆடுமால்
அம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தம்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
65✓
தேனும் துவர்ந்திடத் தித்திக்கும் மதுரவாய்த்
தெய்வப் பிணாக்கள் கும்பச்
செம்பொற் படாமுலை ததும்பத் ததும்பச்
செழுந்துணர்ப் பாரி சாதக்
கான்உந்து பூந்தொடை கவின்பெறச் சூட்டிக்
கலந்தணைத் தாங்கிருப்பார்
காதற்ப்ர பாகம்வந் தலைமோத வந்தநின்
காட்சிஒரு காட்சிஅன் றோ
மோனம் தரும்பெரிய பரமாநு பூதிஇள
முலைமுகை ததும்ப ஞான
மொய்ம்மணத் தார்சூட்டு முத்திப் பெருந்திரு
மோகம்உறு சரச மான
ஆனந்த வெள்ளம்எனும் ஆறுமுக நாதனுடன்
அம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தஞ்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
66✓
வீரம் கடந்தவாட் சூரபன் மன்ஆதி
மேவார் தமக்குமைக்கும்
மிக்கான வேள்விகள் அனைத்தினும் தலைமைபெற்
றான்வித்யா பாண்டித் திய
பாரங் கதப்பட்டம் உள்ளவன் கடவுளர்
பழஞ்சிறை விடுத்திறைவனை
பட்டா ரகப்பெறும் பட்டணம் கைக்கொள்ளப்
பட்டாபி டேகம்வைத் தான்
வாரம் கடந்தகுற வள்ளிநா யகிஇட்ட
மட்டவிழ் குராந்தொடைக்கு
மாதரசி சேர்த்திய மடற்பாரி சாதமா
லைக்கும் இடையேம தாணி
ஆரம் கிடந்துலவு பன்னிரு புயாசலனோ
டம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தஞ்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
67✓
நாடகப் புரவிப் பசுந்தேர் உருட்டும்இள
ஞாயிறுத யம்புரிந்து
நாட்கொண்டு படரிய கதிர்க்கெதிர் எறிந்தவயி
ரப்பொடி நகைப் பதேய்ப் பப்
பாடகத் துறைமிடற் றுக்கருவி மாக்கள்இசை
பயில்மகதி யாழ்மொழியுடன்
பதினெண் பெரும்பண்ணும் ஏழிசை வடித்திசைப்
பஃறுளைப் பத்திசான்ற
மாடகம் முறுக்கிமணி வார்த்திவவு தைவந்து
வள்உகிர் வடிம்புவரு டி
மகரயாழ் வாசிக்கும் இன்னிசை உடன்பழகி
மழகதிர் எறிக்குமணி வாய்த்
தாடகக் குழைகிடந் தாடுவடி காதனுடன்
அம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தம்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
68✓
மேவு துங்க மயூரம் உண்டுநின்
வீர வெம்பகை களைய லாம்
வேரி தங்குதிரி கூடம் உண்டுடு
மீனுடன்தனி தவழ லாம்
பாவி என்றொரு பேரொழிந் துசெய்
பாதகங்களும் ஒழியலாம்
பானலங்கிரி வாவி தங்கிய
பாய்த டம்புனல் படிய லாம்
மூவி ரண்டுச ரோருகங்களின்
மூரல் கண்டுளம் மகிழலாம்
மோனம் ஒன்றுப தேச முன்செயும்
மூலமந்திரம் அறியலாம்
ஆவி என்குடி மேவு கந்தனோ
டாட அம்புலி வருக வே
ஆழ் இலஞ்சியில்வேளொ டின்றினி
தாட அம்புலி வருகவே.
69✓
கோடகப் படாமும் கொய்உளைப் புரவிக்
கொடிஞ்சித் தடந் தேரின் மேல்
குலவிவலம் வரும்ஒருபன் னிருபரிதி மண்டல
கோடிகம் எழுந்ததே போல்
பாடலைக் குங்கதிர்க் கோமே தகத்திரள்
பதித்துவயி ரந்துறுத் திப்
பத்மரா கக்கோடி கோடான கோடிநிரை
படஅழுத் திக்கொழுங் கால்
மாடெழு சுடர்க்கற்றை வயிறுரி யத்தகடு
வாரித் துவன்றிவிர வும்
மரகதம் அமைத்துரக மணிகள்பதி தந்துபுய
வரைமுகம் மொய்ப்பவலம் வந்
தாடகக் குழைகிடந் தாடும்வடி காதனுடன்
அம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தஞ்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
70✓
குறுமுய லகன்பிடித் தாட்டாது தீர்ப்பன்உன்
கொடியகய நோய்தணிப் பன்
கோள் அராப் பகையுமுன் குரவனிலி டநிதநல்
குரவும்இர வுந்தவிர்ப் பன்
செறிபுனற் கடலில் தடந்தேர் மிசைத்தோன்று
சேட்டிளம் பரிதி போலச்
சித்தம் தழைக்குமற் றுனையும்ஒரு தன்மையில்
தீராது செல்லவைப் பன்
புறவும்இப் படியுள்ள நன்மைகள் எலாம்தரும்
புன்மைகள் எலாம் தவிர்க்கும்
பொன்அடித் தாமரை அளிக்கும்நலம் ஒன்றன்று
போந்தவர்க் கேந்திழைந லார்
அறுவர்முலை உண்டபால் மணம்அறா வாயனுடன்
அம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தஞ்செறியி லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
71✓
செம்புவழு இட்டனைய தீமுடைக் காழ்மந்தி
சென்றொருக் காலும்அறி யாச்
சேண்கிளர் மரம்பயில் அருங்கோட்டின் இடைவைத்த
செந்தேன் இறால்கிழித் து
வம்புவழு சாரலில் இதைப்புனம் காக்குமட
மகள்இருந் தமுதம்உண் ண
வண்ணப் பசுந்தினையின் நன்னிலாக் கொழுங்கதிர்
வானதி கொழித்துமருள் மாக்
கொம்புவழு குத்திப் பதந்தந் திடித்துக்
கொழுந்தேக் கிலைப்படுத்திக்
குழையளவும் வாங்கிக் குழைக்குந் தடச்சிலைக்
குன்றவர் திருத்திவிடு நெட்
டம்புவழி தேன்அருவி பாயுமலை நாடனுடன்
அம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தஞ்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.
72✓
பருவரைப் படர்சினைப் பாரிசா தப்பொதும்
பரின்நின் றுலாவுகட வுள்
பாகசா தனன்விழி குறுந்துளி உரைத்துழி
பார்த்துநின் றிருவர்அறி யா
ஒருவரைப் பங்கில்உடை யவள்பால் சுரந்தமுலை
உண்டசெங் கனிவாய் மலர்ந்
தோடவிடு தூதுவர் உரைக்குந் திருக்குறிப்
புணராத சூரபட லம்
கருவரை அறுத்துத் திரும்பினோன் எங்கோன்
கடைக்கணிக் குங்குறிப்புக்
கண்டுபணி கேளாத வர்க்கேது தஞ்சம்எதிர்
காணுரக் கடைக்கண் சிவந்
தருவரை துளங்கநின் றயில்வேல் எறிந்தவனோ
டம்புலீ ஆடவா வே
அந்தண்மரு தஞ்செறிஇ லஞ்சிவடி வேலனுடன்
அம்புலீ ஆடவா வே.