முருகன் App
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
சப்பாணிப்பருவம்5 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

சப்பாணிப்பருவம்

32✓
வல்ஏறு பூண்முலைக் குழல்வாய் மொழிக்கவுரி
மழஏ றெனப்பயந் த
வண்டுபடு கவுள்மதக் கரடக் கடாயானை
வட்டம்இட் டுக்கொட்ட நீ
எல்ஏறு சுடர்மணிக் கடகபன் னிருகரம்
இசைந்துசப் பாணிகொட்டில்
இவ்வாறு கொட்டுதும் எனப்பவள வாய்மலர்ந்
தின்அருள் பழுத்துமது ரச்
சொல்ஏறு கடவுட் பழம்பாடல் முறையிடச்
சுடிகைஅர வரசுநெளியத்
தொந்தம்இடு சூலா யுதக்காளி வெட்குறச்
சுத்ததாண் டவம்நவிற்றிக்
கொல்ஏ றுயர்த்தவன் தமருகம் கொட்டநீ
கொட்டிஅருள் சப்பாணியே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணியே.
33✓
கடசலதி கொட்டுகைத் தந்தா வளத்துரி
கருங்காள மேகம்ஏய்ப் பக்
காய்சினப் புலியின்அதள் வெண்தார காபடலம்
ஒப்பக் கவின்கொழித் துப்
படநிலவு கொட்டும்வெண் நீற்றொளியும் மெய்யுமதி
பானுமண் டலநிகர்ப்பப்
பவளச் சடைக்காடு செக்கர்வான் இசையமழை
பைந்தேன் கடுக்கைதூற்ற
விடஅளறு கொட்டும்வெங் காகோ தரப்பணிகள்
மின்ஒளி கவற்றிவீ ச
விண்நின்ற விண்ஏறு விண்ணவர் வியந்தேத்த
விண்ஏற்றில் அண்ணல்நந் தி
குடமுழவு கொட்டநடம் இட்டவன் திருமதலை
கொட்டி அருள் சப்பாணி யே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணி யே.
34✓
தடம்வைத் தொடர்ந்தேறு கறைஅடிச் சிறுநடைத்
தந்தா வளப்பிடிக ளும்
தடவுக் குழைச்செவி கழற்கால் முகந்தெறி
தடக்கைக் கடாயானை யும்
சுடர்கவைத்த கொன்பிறை நுழைந்தேறு கொண்டலில்
துளைபடா முனைமருப் புத்
துடிஅடிக் கன்று நின் றாடுந் தடாகத்
துறைப்புனல் பரந்து வெள்ளிப்
புடம்வைத்து வார்த்தனைய பொங்குமா கடல்அருவி
பொன்னுழுத் துங்கொழிக் கும்
பூலோக கைலாய கிரியென் றுயர்த்துமைப்
புயல்முக டுரிஞ்சுபொன் அம்
குடும்திரி கூடத் தடஞ்சாரல் வளநாட
கொட்டிஅருள் சப்பாணியே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணியே.
35✓
மறந்தலை மயங்கர விலங்கிலை வலங்கல்வேல்
வாங்குபு திரித்துமரு வார்
மடியத் துறந்தடியர் பொன்உலகு வாழ்வித்த
வரதாப யங்கள்என்று
சிறந்தமலை யாசலச் செந்தமிழும் அருமறைத்
தெய்வப் பழம்பாடலும்
செந்நா முகந்துபல் நாளும் தவங்கள்புரி
செல்வர்வந் தேத்துவது போல்
நறுந்தளிர்ச் செந்தா மரைக்காடு தைவந்து
நறைவண்டு முரலுவது போல்
நடையபில் பசும்புரவி புடைபயில் விசும்பிரவி
நான்மூன்று முறையிடுதல் போல்
குறுந்தொடி புலம்புகை சிவந்தொளி ததும்பநீ
கொட்டிஅருள் சப்பாணியே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணியே.
36✓
வித்துமுளை வைத்துவெண் பார்கோலி ஒருமித்து
வெள்ளிக் குருத்துவிட்டு
வேர்ஊன்றி விற்கூன் நிமிர்ந்தெளிந் தள்இலை
விரித்துக் கருக்குவைத் துப்
பைந்தரை திரண்டுபொதி யாய்க்கமம் சூல்கொண்டு
பச்சைப் பசும்பாம்பு போல்
பருவக் கருக் கொண்டு பச்சென் றிளங்கதிர்
பயந்துபரி போற்கவிழ்ந்து
முத்துவிளை வித்துருமம் ஒத்துவாய்த் தீர்ங்குலை
முதிர்ந்துபொன்போல்விளைந் து
மொய்வரம் பறியாது தெற்றலா டிக்கழனி
முற்றுமுடி வைத்தழைத் துக்
கொத்துமலி செந்நெல்செறி தென்ஆரி நல்நாட
கொட்டிஅருள் சப்பாணி யே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணி யே.
37✓
மூப்பாண்ட கூடலின் முதற்பாண்டி யன்புதல்வி
மும்முலைக் கன்னி பொன்னின்
முடிசூடி அடிமரபின் முறைநெறித் திசைவென்றி
முன்னிப் படர்ந்தஞான்று
மாப்பாண்ட வாதியர்தம் மரபாண்ட கொண்டல்முதல்
மற்றுள்ள கடவுளர்எ லாம்
வான்ஓங்கு மீனக் கொடிக்குச் சிரம்சாய்ப்ப
வலன்ஏந்து மாலைசூட் டும்
தேப்பாண் டரங்கற்கு முடிசூட்டி என் அம்மை
திருவயிறு வாய்த்தளித்த
திறல்ஓங்கும் உக்கிரப் பெருவழுதி ஆகிஅத்
திருமரபில் வந்துதித் த
கோப்பாண்டியற்கும்ஒரு குலதெய்வம் ஆனவன்
கொட்டிஅருள் சப்பாணி யே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணி யே.
38✓
வீண்பொறை கிடந்த என் மனப்பாண் குருக்கத்தை
மெய்ப்பதம் அமைத் தமைபடா
வேதநூற் பகட்டினை உயர்த்தற நுகம்சேர்த்து
வெல்வினைக் கோரைப்போக்கித்
தூண்பொறை கிடந்திட்ட சஞ்சிதக் குத்தியை
துத்திப் பரிந்துழுது நீர்த்
தூளிபட லஞ்செய்யும் அவுத்திரி கன்புரம்
சூழ்ந்துதவ வேலிகோ லிக்
காண்பொறை நெல்வித்திப் பிராரத் துவப்பெருங்
களையறிந் தாகாமியக்
கருநோய் வராதருட் புனல்வார்த்து ஞானக்
கரும்புவிளை வித்துநிமிரா
கோண்பொறை நிமிர்த்தவெண் பிறைமுடிக் குருமதலை
கொட்டிஅருள் சப்பாணி யே
கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக
கொட்டிஅருள் சப்பாணி யே.
39✓
மன்றுதொ றாடல் உவந்தவர் கயிலையும்
மணிமா டக்கந்த
மாதன பூதர மும்பொன் மயில்கள்
மலர்க்கா விற்கார் கள்
துன்றுதொ றாடல் உவந்த பரங்கிரி
மலையும் தொலையா த
சூரலை வாய்விடு சீரலை வாயும்
தொழுதிரு வேரக மும்
நன்றுதொ றாடலும் வந்தருள்செல்வி
நயக்குந் திருஆவி
னன்குடி யும்பழ முதிர்சோ லைப்பழ
நாகமும் ஆகநெ டும்
குன்றுதொ றாடலும் வந்தருள் சேவக
கொட்டுக சப்பாணி
குறுமுனி பரவும் இலஞ்சிக் குருபர
கொட்டுக சப்பா ணி.
40✓
உரவு கிடந்த நெடும்புனல் ஆடை
உவந்து கிடந்துடை யாள்
உபய பயோதர மீதுகிடந்த பொன்
உத்தரி கம்போ லப்
பரவு கிடந்த தடங்கிரி அருவிப்
பாங்கர் கிடந்ததி னைப்
பரணி நடந்து பரித்த பசுந்தளை
கட்டிய பட்டுடை நெட்
டரவு கிடந்த அகன்பேர் அல்குல்
அணங்கு கனங்குழை போல்
ஆசை கிடந்த கருங்கட் குவளையின்
அருகே முருகவிழ் பூங்
குரவு கிடந்த தடம்புய பூதர
கொட்டுக சப்பாணி
குறுமுனி பரவும் இலஞ்சிக் குருபர
கொட்டுக சப்பாணி.
41✓
அழகு குறவர்தம் மகளிர் திருநுதல்
அப்பிய கத்தூரி
அணியும் முலைகளில் இழுகு புழுகுடன்
மணந்த திருப்பாணி
ஒழுகு நவமணி ஒளிவிடு கடகமும்
உத்தரி கத்தோள் மேல்
உதய கிரிகளில் உலவிய பரிதிகள்
ஒத்த குழைக்கா தும்
மழலை வரிஅணி முரல முகைஅவிழ்
கடப்ப மலர்த்தா ரும்
மரகத கலவநி ருபகுல துரக
வட்டமும் முட்டா த
குழைவும் அழகிய குழல்மொழி குலமணி
கொட்டுக சப்பாணி
குமர குருபர! சரவண! பவகுக!
கொட்டுக சப்பாணி.