முருகன் App
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
காப்பு1 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

காப்பு

✓
முகில்ஒன்று பாற்கடல் மடுப்பது கடுப்பநெடு
மோட்டுப் பனைக்கை நீட்டி
மூவுலகும் ஈன்றஉமை கும்பப் படாமுலை
முகட்டுப் பகட்டில் முட்டித்
துகில்ஒன்றும் உத்தரியம் நனைவுறப் பெருகுபாற்
றுள் அருவி வெள்ள மாந்தித்
தோய்ந்துநீந் திக்களித் தாடும்ஒரு கன்றானை
துணைஅடிக் கன்புசெய் வாம்
பகல்ஒன்று செஞ்சுடர் புறத்திருள்சு ருட்டும்அப்
பான்மைபோல் இருபொழுதும் என்
பல்வகை அகத்திருள்சு ருட்டும்ஒரு ஞானப்ர
பாகரனை மகளிர் கூந்தல்
அகில்ஒன் றிலஞ்சிசுமழ் தென்இலஞ் சிக்குமர
குருபரனை அமரர் வாழ்வை
அள்இலைய வேற்கைப்பி ரானைப் பராவுறும் என்
அதிமதுர கவிதழைகவே.