திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
செங்கீரைப்பருவம்3 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
செங்கீரைப்பருவம்
11✓
மேனைப் பிராட்டிதரு பெண்அரசி உள்உவகை
வெள்ளத்தில் ஆட்டுவது போல்
வெள்ளிவரை முன்றில்வாய் பொன்நூபு ரந்தள்ளி
மிளிர்கணைக் காற்கிடத் தி
ஏனைப் பசுங்குங் குமத்திமிர்ந் தீரும்புனல்
எடுத்தெடுத் தாட்டிவிரல் சேர்த்
திண்ணினிய மஞ்சள்நீர் மும்முறை சுழற்றிவார்த்
திருநிலக் காப்ப ணிந்து
சோனைக் குறுந்திவலை பட்டாடை இட்டுத்
துவர்த்திவெண் நீறுசார்த் திச்
சுடர்மா ளிகைப்புகுந் தேந்துமுலை அமிர்தம்
சுரந்திருந் தூட்டிமட வார்
சேனைக்குள் வைத்துமுத் தாட்டும் பசுங்கிள்ளை
செங்கீரை ஆடி அருளே
தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்
செங்கீரை ஆடிஅரு ளே.
12✓
தார்ஆடு கிண்கிணிச் செந்தாள் துதைந்தாடு
தமனியத் தொட்டில் ஆடத்
தண்பவள மெல்விரல் அதுக்கிச் சுவைத்தனை
தாலாட்டும் இன்னிசை மடுத்
தேர்ஆடு மெய்துவண் டிணைவிழி முகிழ்த்துயர்ந்
தந்துயில் வரத்துயின் றாங்கு
இடைவரு பதத்துணை எழுப்பப் புலந்துவயி
றெக்கிக் குழைத்துவிம் மிப்
போர்ஆடு கன்றெனத் துள்ளிஎழு பொருமல்
பொறாதுவந் தேந்திமோந்து
பொற்குழிசி ஊறுபால் வெண்சங்கு வைத்துப்
புகட்டத் தெவுட்டிமெல் ளச்
சீர்ஆடி எதிர்நிலைக் கண்ணாடி நிழலுடன்
செங்கீரை ஆடி அருளே
தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்
செங்கீரை ஆடிஅரு ளே.
13✓
பொருமல்அறி விக்குங் கடைக்கண் குறுந்துயில்
பொடிக்குமுன் அடுக்க வருவோம்.
பொன்மேனி பாயலிற் பூந்தாதும் ஏந்தாது
புதுநீர் எடுத்தாட் டுவோம்
பருமுலை அருத்தித் திருத்திவைத் தின்மொழி
பகர்ந்தணைத் துச்சி மோந்து
பசுமஞ்சள் இனியநீர் மும்முறை சுழற்றிஅப்
பால்ஊற்றி வாழி என்போம்
அருமணி நுதற்சுட்டி கட்டிஒரு பொட்டும்இட்
டண்ணல்வெண் நீறும்அணி வோம்
ஆட்டாத சரவணப் பூந்தொட்டி லிற்கிடந்
தாடின படிக்கு வனசத்
திருமுகம் மலர்ந்துகுழை ஆடவிளை ஆடிநீ
செங்கீரை ஆடி அருளே
தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்
செங்கீரை ஆடிஅரு ளே.
14✓
பட்டபுனல் நித்திலம் எனத்திகழும் வட்டவரி
பாசிலைய நெட்டை நெடிய
பச்சைப் பசுந்தாட் கழுத்தளவு நீருட்
பயின்றீன்ற மெல்அ ரும்பு
வட்டம்இடு பானலைப் புறநிறுத் திசைமுரலும்
மழலைச் சுரும்பர்வீழ்ந்து
வாய்மடுத் துண்ணக் கபாடம் திறக்கும்ஒரு
வள்ளமாக் கொள்ளை நறவம்
கொட்டுபு செழுங்குங் குமத்தா திறைக்குங்
குறுந்தகட் டல்லி புல்லிக்
கோட்டோ டலர்ந்துகமழ் செக்கச் சிவந்தபொற்
கோகனக பண்ட பத்தில்
சிட்டர்தொழ வாழும்ஒரு செல்விதிரு மருமகன்
செங்கீரை ஆடி அருளே
தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்
செங்கீரை ஆடிஅரு ளே.
15✓
கங்கா நதிக்குநிகர் கடவுள்நதி களின்அதிக
கவின்மணல் தங்கு கழியில்
கதிர்மணிக் குன்றுபொதி புன்னையங் காவில்மென்
காவியங் கயல்பொரு தலைக்
குங்கால் இலக்கால் கொழிக்குமடை களில்மடைக்
கோவுகண் ணாற்றுவயலில்
குளிர்வயல் மருங்குவெண் முல்லைமல் லிகைவைத்த
கொல்லையில் கொல்யானை வாற்
பைங்காற் பசும்பொற் பொகுட்டுத் தகட்டிதழ்ப்
பங்கேரு கப்பொய்கை யில்
பங்கேரு கச்செல்வி விளையாடு பதிகளில்
பதிநிலா நுதலா ருடன்
செங்கால் அனங்கள்பயில் தென்ஆர்ய நன்னாட்
செங்கீரை ஆடி அருளே
தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்
செங்கீரை ஆடிஅரு ளே
16✓
இந்திரன் அங்கி யமன்கொடி யன்புனல்
ஈசன் நெடுங்கா லோன்
எண்தரு சந்திரன் இந்து வனைந்தவன்
மால்அயன் என்போர் தாம்
தந்தம் இடங்கள் புரந்திட வந்த
தபோதனர் சந்தோடர்
சங்கதி யும்சடை யும்கிர மங்களும்
வேதமும் நின்றோத
மந்தரம் என்ற தனங்கள் சுமந்த
மாதர் வளம்பாட
மங்கல சங்கம் முழங்க வலம்புரி
வால்வளை நின்றுஊத
அந்தர துந்துபி பொங்க இளங்குகன்
ஆடுக செங்கீரை
அண்டர் வணங்க இலஞ்சி உகந்தவன்
ஆடுக செங்கீ ரை
17✓
வாழி மடற்பா ளைக்குழல் சரிதர
வார்கெழு பந்தாடும்
மாதர் இளைப்பா றத்தனி வருசிறு
கால்வீசி றுங்காவில்
வீழிஇ தழ்க்கா லித்துணை விழிமணி
வேரல் நெடுஞ்சாரல்
வேடர் குலப்பா வைக்கொரு புதுமண
மாலைபு னைந்தாய்நீ
சூழமு கத்தா னுக்கிளை யவன்உயர்
தோகையர் மன்றாடு
சூலம்எடுத்தா டிப்பலி கொளுமதி
சூடித ரும்பாலன்
ஆழித ரித்தோ னுக்கொரு மருமகன்
ஆடுக செங்கீரை
ஆறுமு கப்பே ரிக்குரு பரன்இனி
தாடுக செங்கீ ரை.
18✓
மாதளை ஊடே மாவின் நறுங்கனி
வீழ்தர மந்தாரை
வாடியின் ஊடே வாழை நறுங்கனி
வீழ்குலை சென்றேழு
காதமும் மாறா வாசனை தந்திட
மூசு சுரும்பேறு
காவிக ளோடே கார்வய லின்புடை
ஓடுப ரந்தோடி
மேதகு பாரா வாரம் வளந்தர
வேர்கவி சம்பீர
வேலியின் ஊடே பால்மணி சங்கினம்
வீசவ ளங்கூரும்
ஆதிபி ரான்ஊர் ஆளும் நெடுந்தகை
ஆடுக செங்கீரை
ஆரண நூலோர் தேடும் இலஞ்சிமன்
ஆடுக செங்கீரை
19✓
உருவப் பிடிநிகர் பருவக் குறமகள்
பந்தா டுங்காவு
டுருகிக் கனமயல் பெருகிக் கருகி
உழன்றே நின்றாய்வோய்
அருணைக் கிரிபுனை தெரியற் பெரியபி
ரபந்தா லங்காரா
அசலக் குறுமுனி பணியப் பணிவிடை
கொண்டா ளுந்தாளா
இருவர்க் கரியவர் பவளச் சடையினர்
மைந்தா ஐந்துரரா
எளியற் கருள்புரி கருணைக் கடலெனும்
எந்தாய் செந்தூரா
திருவிற் பொலிதரு பழனிக் குருபர
செங்கோ செங்கீரை
திமிரப் பரமத படலத் தினகர
செங்கோ செங்கீரை.
20✓
கும்பக் குறுமுனி வந்தார்ச் சனைபுரி
குன்றே சென்றே ஓர்
குன்றிற் சிறுகொடி ஒன்றிப் படர்கொழு
கொம்பே எங்கோவே
அம்பொற் றளிர்அடி நம்பித் தொழும்அவர்
அன்பே என்பே றே
அங்கட் புலிமுதல் அண்டத் தளவுள
அஞ்சே செஞ்சே யே
வம்புப் பிறவியி ரும்பைக் குதவும்
மருந்தே செந்தே னே
மன்றற் குழல்மொழி முன்றிற் பயில்சிறு
கன்றே வென்றே வேல்
செம்பொற் கையில்அணி செந்திற் கதிபதி
செங்கோ செங்கீ ரை
செஞ்சொற் பழகும்இ லஞ்சிக் குருபர
செங்கோ செங்கீ ரை.