முருகன் App
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
10.சிறுதேர்ப்பருவம்11 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

10.சிறுதேர்ப்பருவம்

94✓
வெண்தேர் உருட்டிவரும் வேதாளம் இட்டஅடி
பாதாளம் முட்டவிரவும்
வீரசக் ராயுதப் பகழியும் பூட்டிலும்
வெரிங்கொண் டெருத்தலைப்ப
மொண்டேர் உருட்டிவைத் தால்அனைய நவரத்ந
முடிமுக டளாவி நிற்கும்
மூதண்ட வேதண்ட கோதண்ட கணபணா
முடிஅராச் சிறுநாண்எறிந்
தொண்டேர் உருட்டிவரு சேட்டிளம் பரிதிமதி
உபயசக் கரங்களாக
உபநிடப் பரிபூட்டி முப்புரம் கனலிகூட்
டுண்ணவான் தரணிவட்டத்
திண்தேர் உருட்டும்ஒரு சேவகன் திருமதலை
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந்தசுவாமி
சிறுதேர் உருட்டிஅருளே.
95✓
மன்றற் கருங்குழற் செய்யவாய் வெண்ணகை
வளர்க்குங் கலாபமயில் போல்
மடப்பிடி நடைச்சியர் கொடிப்படை எடுப்பநெடு
வான்மதிக் குடைகவிப்ப
அன்றிற் கருங்கா களங்கறங் காநிற்ப
அதிர்கடலமும் முரசம்ஆர்ப்ப
அலைப்பல கையும்துயில் கொளுங்கங்குற் கடையானை
அழிமதக் கலுழிகொட்பக்
குன்றிற் பணைத்தகுவ வுத்தடந் தோள்மதன்
கோலம் சமைந்துகன்னல்
கோதண்டம் ஏந்திக் குறும்பெறி சனற்கிளிக்
கொய்உளைப் புரவிபூட்டும்
தென்றற் றடந்தேர் உருட்டும் பரங்கிரிய
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டி அருளே.
96✓
தூங்குங் கமஞ்சூற் கருங்கொண்டல் மஞ்சுகண்
துஞ்சும் தடஞ்சாரலில்
சுழல்கின்ற பைங்கண் கருமபொரைச் செக்கர்வாய்ச்
சூர்உகிர்ப் போர்வேங்கையும்
தாங்குஞ் சிவப்புண்ணி வெள்ளிக் குழற்படி
சாரங்க பந்தாள மும்
தங்களில் பகைமைதீர்ந் தொருதுறைப் புனலுண்டு
சஞ்சரிக் குந்திரிகூடப்
பூங்குங் குமக்குவட் டடவிக் கொடிச்சியர்
புனத்திதழ் அமைத்தருமப்
புதுவெள்ளம் எறியச் செறித்தபால் முத்தனார்
புலவியிற் கொழுநர்பதிபோல்
தேங்குதோ றும்பரவு சித்ரா நதிக்கிறைவ
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅருளே.
97✓
இருவிரலின் நீளத்தில் ஒருவிரலின் ஆழத்தில்
இட்டஒரு களம்நிரைத்த
ஈர்மபள்ளை யாட்டின் மயிர்த்தொகை பல்லம்என்
றெண்ணுங் கணக்கின்வகை போல்
ஒருபெருங் களிறும்ஓர் பெருந்தேரும் வெம்படை
உழவர்ஐ வரும்கவின்மா
ஒருநான்கும் ஆகிய பதாதிமுதல் மும்மடித்
தோங்குசே னாமுகமும்மேல்
மருவிடும் கும்பியும் கண்டமும் வாகினியும்
மன்உயிர் தனையும் அப்பால்
வாய்த்தசமு கமுமனிக முங்கடந் தக்ரோணி
மாசேனை நெளியவிசையன்
செருவலித் திண்தேர் உருட்டும் பிரான்மருக
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅருளே.
98✓
எண்ணெய்க் குடங்கள்என் றிறுமாந்து நீலவடம்
ஏந்திள முலைக்கடைசி மார்
எடுத்துக் குடத்தொடும் அடுத்தநற வங்குரவை
இடுசெருக் கிற்கவிழ்த்த
பண்ணைச் செதும்ப்பில்விளை யாடுங் கருஞ்சிறார்
பற்றும்வாற் செங்கன்று போய்ப்
பாய்ந்திட முட்பல வடிக்குடக் கனிசிதறு
படுபழச் சேதகத்தின்
மொண்ணைக் கரும்பக டுரிஞ்சுகுலை வாழையின்
முப்பழச் சேறிழிந்து
மொய்என்று படுசேற்றில் வாய்த்தசெஞ் சாலிசொரி
முத்தைவா ரிக்குவித்த
திண்ணைக்கு வெண்ணில வெறிக்கும் பிரானூர
சிறுதேர் உருட்டிஅரு ளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅரு ளே.
99✓
இரைக்கும் சுரும்பறாக் குங்குமக் கோடிடறி
இபநெடுங் கோடு சாடி
இல்லக் கொடிச்சியரின் இதயப் புனத்திதண்
ஏற்றி பளிக்கறையில்இட்
டரைக்கும் செழுஞ்சாந்தொ டகில்முரு டுருட்டிநெட்
டரவுமிழும் மணிவரன்றி
அண்டர்அண் டங்களும் அளக்கும்நெடு மூங்கில்முத்
தரியிட் டரித்துவிரவிக்
கரைமிருக மதகலவை துன்றுசிவ மதுகங்கை
செண்பகக் காடுபொங்கு
கடல்கடந் தருவித் தடாகம் கடந்திரு
கரைக்குறும் பெறிய மோதித்
திரைக்கும் திரைப்புனற் சித்ரா நதிக்கிறைவ
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅருளே.
100✓
கம்பவள வாரணக் கடல்வந் திரங்கக்
கறங்குந் திரைக்கானல் வாய்க்
கரியசிறு முட்கவிழ் மடக்கிலை முடக்கேத
கைதாவின் விழுதுபற்றி
வம்பவிழும் வெண்மடல் தலைமிசை படர்ந்தோடி
மணற்குன்று தன்னைமூடி
மதுமலர்ப் புன்னைக் கருகோ டுலாயதன்
மருங்கோ டொருங்கொடியே
கும்பவள மென்முலைக் கடைசியர் குழாம்பயில்
கொழும்பணைக் கதலிநுதலிக்
கொல்லைக் குருந்தேறி முல்லையொடு பின்னிக்
குறிஞ்சிக் கவட்டினும் போய்ச்
செம்பவள வல்லிபடர் தென்குமரி வளநாட
சிறுதேர் உருட்டி அருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டி அருளே.
101✓
மகவான் மனைக்கிறைவி மகராசி பெற்றமகள்
மயில்போல் இருக்கஅயல் போய்
மகடூஉ ஒருத்திமிகு முசுடூ டளக்குமலை
விளைகாவ லுக்குவரு வாள்
முகலா ளித்ததரள முகிழ்மூர லுக்குருகி
முனைவேல் எடுத்துவரு வாய்
முருகா மருத்துவன் மருகா திருத்தணியில்
முதல்வா ஒருத்திபுதல்வா
உகளா முயற்பிறையை முடிவேல் முடிக்கும்எமை
உடையான் வலச்செவியிலே
உறைவான் உரைப்பரிய ஒருதா ரகப்பிரம
உபதேசம் வைத்தகுருவே
சிகரா சலத்தில்உயர் திரிகூட வெற்பன்ஒரு
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅரு ளே.
✓
பணிகொண்ட தாரைகன் மணித்தேரும் அர்ச்சுனன்
பாழித் தடந்தேரு மே
பருவமும் செல்வதிலை ஒருபெருஞ் சேடனே
பரூஉச்சுடிகை நெற்றிமுற்றத்
தணிகொண்ட கல்லோல வரதமனோ கர்மேக
லாபார மணிநெடுந் தேர்
அன்றே நடக்குநில நின்றாதை நகைசெய்வ
தாழியொன்றாதவன் றேர்
கணிகொண்ட வையமும் காண்பதிற் கங்குலில்
காமன் கறங்குபொற் றேர்
காற்றேர்அ லாதில்லை மேல்தேர் உரைப்பதென்
கவனவாம் புரவியின் மேல்
திணிகொண்ட செல்வஉன் தேர்அலா தில்லையால்
சிறுதேர் உருட்டி அருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅரு ளே.
✓
மருள்வந்த பிறவிக் கடற்படிந் துள்ஆசை
மகரம் புடைத்த டிப்ப
மால்கின்ற சிற்றுயிர்க் குற்றிடத் துதவிசெய்
வருமரக் கலமேமுகந்
தருள்வந்த மெய்அன்பர் ஆர்வம் தழைக்கின்ற
அகநெக்கு நெக்குருகி னே
னாலுமுகன் நனவினுக் கெதிரிட் டுவட்டெறியும்
ஆனந்த மாப்பெருக் கே
பொருள்வந்த கடவுட் பழம்பாடல் ஏந்தும்ஒரு
பொன்மானி கைக்குள்வைத்த
புனைமணி விளக்கமே அநுபூதி தந்துபர
போகம்விளை கின்றவிளைவே
தெருள்வந்த மணிமன்றம் உடையவன் செல்வமே
சிறுதேர் உருட்டிஅருளே
செந்தமிழ் இலஞ்சிநகர் வந்தகந் தசுவாமி
சிறுதேர் உருட்டிஅரு ளே.