முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
அம்புலிப்பருவம்8 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

அம்புலிப்பருவம்

64✓
நீல வுணினர்க ணாவை நீயிவனு
நீல வுணினர்க ணானவ
னேமி யங்குவடு சூழ்வை நீயிவனு
நேமி யங்குவடு சூழ்பவன்
ஏல நீயரிய மானு ளாயிவனும்
என்று மோரரிய மானுளான்
இருளு மாசினையொ ழிப்பை நீயிவனும்
இருளு மாசினையொ ழிப்பவன்
ஒல மாமலையி லெழுவை நீயிவனும்
ஒப்பி லாமலையி லெழுபவன்
உனக்கி வாறுநிக ராத லாலிவனு
னைக்கு லாவியழை யாநின்றான்
ஆலு மாமயில னாடுதற் கமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரிய னுளமகிழ
அம்பு லீவருக வருகவே.
65✓
இன்ன நீமலைவ லஞ்செய் வாயிவனி
மைக்கு முன்னிலம்வ லஞ்செய்தோன்
எறிக திர்க்கிடைவை நீயு முச்சுடரில்
இவன வன்கதிர ழிப்பவன்
மன்னி வாழ்மறுமு கம்ப டைப்பையிவன்
மறுவி லாவுறுமு கத்தினான்
வரும கத்திருளொ ழித்தியாயிவனு
மனவ கத்திருளொ ழிப்பவன்
மின்ன ராவுகொளு முணவு நீயிவனவ்
விடவ ராவுண்மயில் வாகனன்
மேனி நீவளர்ந் தழிவை யென்றுமிவன்
மேனி தானுமழி யாதவன்
அன்ன தாலிவன் றனக்கொவ் வாயமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரிய னுளமகிழ
அம்பு லீவருக வருகவே.
66✓
வரிசை கொண்டகுடை நீய தாக விருண்
மாவை யூர்மதனன் வாழ்வையு
மனம கிழ்ந்ததிக மைத்து னச்சரச
வளமை யாலொழிய மாற்றியே
உரிமை கொண்டவவ னானை யின்பிடரில்
உன்னை வைத்தருளி நாடொறும்
உனக்க வன்கவிகை யாயி டும்பதமும்
உதவி னாலுமிவ னுதவுவான்
பிரிய மாயுனைவி ரும்பி வாவெனவ
ழைத்த பேறெவர்கள் பெற்றுளார்
பெற்றி யாலுனது பெற்றி யேயினிய
பெற்றி மாதவர்கள் காணுதற்
கரிய கந்தன்விளை யாடு தற்கமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரிய னுளமகிழ
அம்பு லீவருக வருகவே.
67✓
பத்தி யாயுலகை வட்ட மிட்டுவரு
பரப ரப்பினையு மாற்றுவான்
பழுது பட்டகலை முழுது முற்றிலகு
பண்பை யுந்தருவ னீதலான்
நித்த மாயுடல முற்றி டுங்குறையை
நீக்கி யேகருணை நோக்குவான்
நின்ம லர்க்கருளு மூல மந்திரமு
நின்செ விப்படவு மொழிகுவான்
தத்து சாகரம தற்கு ளுஞ்சனன
சாக ரத்துமுதி யாமலே
தண்டை கிங்கிணிச தங்கை கொஞ்சுமுரு
தாம ரைப்பதமு முதவுவான்
அத்தன் வேலன்விளை யாடு தற்கமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரிய னுளமகிழ
அம்பு லீவருக வருகவே.
68✓
எண்ணி லாதபல புண்ணி யங்களையி
யற்றி நெஞ்சிலிரு ளற்றபேர்
ஏத்தி யேத்தியவ ரோல மிட்டலறி
னுங்கி டைக்கவரி தானவன்
விண்ணி னூடுமறு வாய உன்னைவடி
வேலெ டுத்தகர நீட்டியே
வேத வாய்மழலை யால ழைத்திடவு
மேவி டாமலுமி ருப்பதோ
பண்ணி னால்மதுர மாக வேகவிதை
பாடு வார்வினைக ளோடவே
பச்சை மாமயிலி லேறி வந்திருப
தாம்பு யந்தனைய ளித்திடும்
அண்ணல் வேலன்விளை யாடு தற்கமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரிய னுளமகிழ
அம்பு லீவருக வருகவே.
69✓
பங்க யாசனனை வேத நுண்பொருள்வ
ராமை கண்டுமுடி குட்டியே
பாத தாமரையி னாலு தைத்திடர்ப
டுத்தி வன்சிறையில் வைத்தல்போல்
இங்கு நீயினிவ ராதி ருந்திடினெ
ழிற்க ரங்கொடுபி டித்துன்மேல்
எழுந்த கோபமொடு குட்டி வன்சிறையி
லிடுவ னின்றுனையு முண்மைகாண்
கொங்கு லாவுமிரு தண்டை யங்கழல்கள்
குந்தி நின்றுவிரல் சுட்டியே
கொஞ்சு வாய்மழலை மொழியி னாலிவன
ழைத்த சால்புகுறை யாமலே
அங்கை வேலன்விளை யாடு தற்கமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரிய னுளமகிழ
அம்பு லீவருக வருகவே.
70✓
பந்த நீகொளவி ருந்த வஞ்சகர்ப
துங்க வேபொருத தறிவையே
பண்டு நாகரரி நம்பர் வந்தடிப
ணிந்த சால்புதனை யறிவையே
உந்தி நீமுழுகி டும்பெ ருங்கடலை
உண்ட வேலுடைய தறிவையே
உன்க ணேறுமர வங்க ளஞ்சிடவு
றிஞ்சு தோகையுள தறிவையே
இந்த நேரமிவன் நண்புகொண்டுபகை
யின்றி யேயினிமை யடையலாம்
எம்பி ரானெமையு மன்பர் தங்களொடி
ணங்க வேகருணை யருளினான்
அந்த ணீர்வயல்வி ரிஞ்சை யம்பதிய
மர்ந்த வாறுமுக முடையவேள்
அம்பு லீவருகவென்ற னன்கடுகி
அம்பு லீவருக வருகவே.
71✓
எண்டி சாமுகரு மிங்கி தம்புகலும்
இந்த்ர தேவனுல கருளவோ
என்று நீகுடையெ னும்பெ ரும்பதவி
இன்ப வேளுலகை யருளவோ
வண்டு போலுமுரு நந்த னுந்திதனில்
வந்த வேதனுல கருளவோ
மந்த்ர வேதமுனி தந்தை யென்னவரு
மஞ்சு ரூபனுல கருளவோ
சண்ட வீரரெனு நண்ப ரொன்பதின்மர்
தங்க ளோடுறவு நல்கவோ
தண்டை சேரிருப தங்க ளுஞ்சிரசு
தங்க வோவெதுவு மறிகிலேம்
அண்டர் சூழ்திருவி ரிஞ்சை யம்பதிய
மர்ந்த வாறுமுக முடையவேள்
அம்பு லீவருக வென்ற னன்கடுகி
அம்பு லீவருக வருகவே.
72✓
வன்ப ராவணனைவி ழுங்கு துன்புறும
ருந்து நேயமுட னுதவவோ
மங்கை பாகர்பபெறு மந்த மந்திரம
கிழ்ந்து நின்செவியின் மொழியவோ
உன்ச ரீரமரு வுங்க ளங்கமதொ
ழிந்து தீரவருள் புரியவோ
உன்றன் மேனியில குங்க வின்கொளவொ
டுங்கு கூனிமிர நினையவோ
இன்ப ஆரமுத மும்பர் பங்கினிலி
ருந்த மாபலனை யருளவோ
எங்க ளாளிவைதெ ரிந்தி லேம்புகலி
னின்று நீபெறுவ தென்கொலோ
அன்பர் சூழ்திருவி ரிஞ்சை யம்பதிய
மர்ந்த வாறுமுக முடையவேள்
அம்பு லீவருக வென்ற னன்கடுகி
அம்பு லீவருக வருகவே.
73✓
இஞ்சி சூழருணை யன்ப னன்புறவி
யம்பு பாடல்களை யறியலாம்
எங்கள் கீரன்மொழி யும்ப சுந்தமிழெ
னுஞ்சொல் வேதநிலை தெரியலாம்
விஞ்சு சூரர்களை வென்றி டுந்திறல்வி
ளம்பு காதைகளை வினவலாம்
வெந்த பூதியைய ணிந்த தொண்டர்கள்வி
ரும்ப வேகவிதை புகலலாம்
வஞ்ச மோடவரு தண்டை யங்கழல்வ
ணங்க லாமுலகை வலமதா
வந்து சூழ்வதிலும் இன்றி வன்றனைவ
லஞ்செய் தேபிறவி யொழியலாம்
மஞ்ச மார்வயல்வி ரிஞ்சை யம்பதிய
மர்ந்த வாறுமுக முடையவேள்
அம்பு லீவருக வென்ற னன்கடுகி
அம்பு லீவருக வருகவே.