திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
முத்தப்பருவம்6 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்
முத்தப்பருவம்
44✓
சிலையுந்திகழ் பிறையுந்தொழு சிறுவாணுதன் மடவார்
சிகரக்கன தனமொன்றிய செம்மாமணி யொளியை
மலையின்மிசை யெழுமாதவ னென்றம்புய மலரும்
வயல்சூழ்கர புரிமேவிய மயிலேறிய வரதா
கலையின்படி நடவாதகொ டுந்துரைய ழிக்குங்
கனதோள்வலி பெறவேசிவ கயிலைக்கிரி யுடையாள்
முலையுண்கனி வாயாலொரு முத்தந்தனை யருளே
முருகாஅரி முருகாவொரு முத்தந்தனை யருளே.
45✓
மாலானவர் பாலாழியுள் வளர்கின்றவ ளம்போன்
மழைமாமுகில் தவழுந்துய மணிமேடையி லேறப்
பாலார்மொழி மடவாரெறி செம்பந்துடல் பட்டே
பனிவான்மதி செம்மைப்படு பாலித்திரு நாடா
வேலாவுமை பாலாசிவ சீலாவனு கூலா
வேதாசுரர் நாதாமயில் வீராகர னூரா
மூலாகம வாயாலொரு முத்தந்தனை யருளே
முருகாஅரி முருகாவொரு முத்தந்தனை யருளே.
46✓
தீரக்கவி பாயப்பல தென்னம்பழ மடுவிற்
றிரளாய்விழ நெடுவாளைசி னத்தொடெதிர் நாடிப்
பாரப்புயல் தாவித்திகழ் பலவைப்பொரு துதிரும்
பலவின்சுளை யுடனேவரு பாலித்திரு நாடா
வீரப்பசு மயிலாகர புரிமேவிய வரதா
விண்ணோர்தொழு மிறைவாசுதர்வேதப்பொருள்கமழு
மூரற்றிரு வாயாலொரு முத்தந்தனை யருளே
முருகாஅரி முருகாவொரு முத்தந்தனை யருளே.
47✓
மற்றாருமொவ் வாமாதர்கண் மறுகெங்குமி றைக்கு
மணமார்பனி நீரோடிவ யற்போயது பாயப்
பொற்றாமமெ னச்சாலிவ ளர்ந்தேறிய பாலிப்
புனல்வேலையெ னச்சூழ்கர புரிவாழிளை யோனே
சிற்றாரமு தச்சோமன்மு டிச்சூடிந லஞ்சேர்
சேமேல்வரு மீசற்குப தேசந்தனை யருளு
முற்றாகம வாயாலொரு முத்தந்தனை யருளே
முருகாஅரி முருகாவொரு முத்தந்தனை யருளே.
48✓
கதிரானிறை செஞ்சாலியும் வயன்மேவுக ரும்புங்
கனசங்கமு மதியுந்திகழ் கமுகாடவி மானு
மெதிராதவ னெழுபோதல ருந்தாமரை மலரு
மெரிமுத்தம ளிக்குங்கர புரிவாழிளை யோனே
அதிராவருள் முகிலேநல மழியாமத களிறே
யறுமாமுக வரசேதொழு மடியார்பெரு வாழ்வே
முதிராமணி வாயாலொரு முத்தந்தனை யருளே
முருகாஅரி முருகாவொரு முத்தந்தனை யருளே.
49வேறு✓
அருணாச லப்பதியை நினைவார்த மக்குமொளி
யழியாத பொற்ச பையையே
ரறிவார்த மக்குமொரு கமலால யத்திலுட
லடைவார்த மக்கு மலைநீர்
வருகாசி யிற்சனன மொழிவார்த மக்குமருண்
மறைஞான முத்தி தமதுரர்
மறுகேந டக்கிலருள் புரிவார்வ ழித்துணைவர்
மகிழ்வாய ணைக்கு மரசே
குருமாம ணிக்கிரண வெயில்வீசு முச்சியது
குவிகோபு ரத்தி லழகார்
கொடிமேவி ருக்குமுழு மதிதேவ ரிட்டவொரு
குடையாமெ னத்தி கழவே
திருநாள்பெ ருத்தகர புரிவாழ்தி ருக்குமர
திருவாயின் முத்த மருளே
சிறுதா மரைக்குநிக ரறுமாமு கக்குழவி
திருவாயின் முத்த மருளே.
50✓
உருகாம னத்திமிர முடையோனி ரக்கமுட
னொருபூத ருக்கு முதவே
னுலகோர்ப ழித்தசெயல் புரிவேனி டர்க்கடலி
லுழல்வேனி ரக்க வெழுவேன்
மருவார்க ளுத்தகுழன் மடமாதர் கட்கடையின்
மயலாலி ளைத்து மெலிவேன்
வழிபாடு மர்ச்சனையு மறியேனு னக்கமல
மலர்மீதி ருக்கு முருகா
வருகார்வ யற்குவளை யளிபாடி யிட்டபொழு
தழகாயொ ழுக்கி யிடுதே
னடியாரி சைக்குருகி விழிநீர்து ளித்தருளு
மதுவாமெ னத்தி கழவே
திருவார்செ ழித்தகர புரிவாழ்தி ருக்குமர
திருவாயின் முத்த மருளே
சிறுதாம ரைக்குநிக ரறுமாமு கக்குழவி
திருவாயின் முத்த மருளே.
51✓
அரைமீது கட்டுநவ மணிநாணு நெற்றிதனி
லழகாய பொற்சு டிகையோ
டணிநீறு முத்துவட மிசைமார்பு நற்செவியி
லசைவாய பொற்கு ழையுநீள்
வரைவார ணக்கொடியு மயில்வாக னப்பரியு
மணநாறு சிற்றடியுமே
மலமாயை விட்டகல மறவாத பத்தருடன்
வறியேனை வைத்த தலைவா
விரைவாயொ லித்துபுனல் மதகடு பட்டதிர
விசையாகி முட்டி யிளநீர்
விழவேகு தித்ததிக வலைவாண ரைக்கறுவி
விளையாடி யிட்ட கயல்சூழ்
திரைவாவி யுற்றகர புரிவாழ்தி ருக்குமர
திருவாயின் முத்த மருளே
சிறுதாம ரைக்குநிக ரறுமாமு கக்குழவி
திருவாயின் முத்த மருளே.
52✓
தவநாவ லிற்சடையன் மகவாயு தித்திறைவர்
தடையான்ம ணத்தொரு வியே
தமிழ்ப்பாடி நற்பரவை யொடுகூட விட்டவிறல்
தனையோதி நெற்கு வையெலா
நவமாவ ழைத்தருளி நிதியாக மட்சிலைகள்
நதியூடு விட்ட பொருள்தான்
நலமார்கு ளத்தில்வர வருளானி னைத்தமலர்
நடமாடு மொற்றி நகர்வாழ்
அவள்தோள ணைத்தரனை யொருதூது விட்டருகி
லலராறொ துக்கி யடைவா
யவநாசி யிற்கரவு நுகர்சேய ழைத்தருளு
மவரோடு முத்த குதியோர்
சிவநூன் மணத்தகர புரிவாழ்தி ருக்குமர
திருவாயின் முத்த மருளே
சிறுதாம ரைக்குநிக ரறுமாமு கக்குழவி
திருவாயின் முத்த மருளே.
53✓
சதுமாமு கற்குநிகர் சிவநாதர் பெற்றசிவ
தருமாவு னக்கு முறைநீ
தவறாம லிப்பொழுது பரிபூச னைக்கிளையை
தருகாணி யொற்றி தரவே
யிதுதாய்த னக்குமொழி யெனுஞாதி கட்சிசைய
வியலாவு ரைக்க வரனே
யினியேது திக்குமிலை யெனவாடு மப்பொழுதி
லிளையாய்ம னக்க னவிலே
விதவேதி யத்தலைவ னெனவாயு ரைத்தபடி
விடிபோது தற்க தனைநீர்
விடமூழ்கி டச்சுருதி யறிவோதி யப்புமுடி
விடவேசி ரத்தை வளைவார்
திதமாய்வ ளர்த்தகர புரிவாழ்தி ருக்குமர
திருவாயின் முத்த மருளே
சிறுதாம ரைக்குநிக ரறுமாமு கக்குழவி
திருவாயின் முத்த மருளே.