திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
சப்பாணிப்பருவம்5 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்
சப்பாணிப்பருவம்
34✓
அண்டகூ டச்சிகர மடையத் துலங்கியணி
யானகமு காடவியெலா
மாதவன் மணித்தேர் வரும்பொழுது பட்டுதிரு
மாராங்க ளைப்பூவைமார்
வண்டலா யத்தவர்வ குத்தபா வைக்கினிய
மலையா கக்கோத்திடு
மங்கையர் முலைக்குமிரு செங்கையில் வளைக்கும்
வள்ளைமே லியகுழைக்குங்
கொண்டலா குங்கரிய கொண்டைக்கு மமுதாறு
கோவைக்கு மழகானதோர்
கோகில மொழிக்குமவ ரோதிமந டைக்குமயல்
கொண்டளைஞர் தூதுவிடவே
சண்டவே ளூர்திமறு கெங்குமார் கரனூர
சப்பாணி கொட்டியருளே
சங்கரி திகம்பரி சிதம்பரி தருங்குமர
சப்பாணி கொட்டியருளே.
35✓
வேலியா குங்கமுக மெனுமடவி விடுபாளை
வீசுசா மரையாகவும்
வெண்சங்கம் ஒலமிடு மேரிமடை மதகுகண்
மேளவொலி போலிசையவும்
வாலிதாம் வயல்வனச மணிவிளக் கேந்தவும்
வண்டினம் பாடியிடவும்
வாடையுல வும்புதிய சோலைமண் டபநடுவின்
மாநடஞ் செயுமயூரங்
கூலியா கத்தரள மணியளந் திடுமுழவர்
கோதைமா ரருகிலணையக்
கோலமே னிச்சாயல் கண்டுநா ணிக்கரிய
கொண்டையது சாய்த்தொதுங்குஞ்
சாலிவா னளவிவளர் பாலிசூழ் கரனூர
சப்பாணி கொட்டியருளே
சங்கரி திகம்பரி சிதம்பரி தருங்குமர
சப்பாணி கொட்டியருளே.
36✓
துந்துவெனு மொருநிருதன் அண்டரண் டந்தனது
தோள்வலியி னாளவதனால்
துன்பசா கரமூழ்கி இன்பசா கரமீது
துயிலுமா லுடன்மொழியவே
அந்தமா லும்பர்களை அஞ்சலென் றவனுடல்
அழிக்கவா யிரமுளரியால்
அர்ச்சிக்க வோரழி யன்றருள்வ ழித்துணைவ
ரங்கையாற் றழுவுமரசே
வந்தமத கரியொலியும் வாவுபாய் மாவொலியும்
மணிநெடுந் தேரினொலியும்
வந்தனைசெய் வார்களர கரவென்னும் ஒலியு மட
மாதர்நட மாடுமொலியுஞ்
சந்தமறை யொலியுமலை யொலியுமிகு கரனூர
சப்பாணி கொட்டியருளே
சங்கரி திகம்பரி சிதம்பரி தருங்குமர
சப்பாணி கொட்டியருளே.
37✓
பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்
புரக்கவெழு நாண்மறவனாய்ப்
புறவற வளைத்தெனது பெயர்மூட்டை பாடெனப்
பொன்போலு மென்றுபாட
வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி
ளம்பெனவிளம் பவர்மேல்
விழுந்தநுளி யென்றெடுத் துப்பாடி யவர்நாவில்
வேல்கொடு பொறித்தசதுரா
மையான மஞ்சுதவழ் காவில்வா முதிர்புன்னை
மலரரும் பைத்தரளமா
வடபான திக்கரையின் வண்டலம் பாவைமுலை
மார்பினி லணிந்துமகிழ்வாய்த்
தையாவி ழிச்சியர்கள் விளையாடு கரனூர
சப்பாணி கொட்டியருளே
சங்கரி திகம்பரி சிதம்பரி தருங்குமர
சப்பாணி கொட்டியருளே.
38✓
பரமர்தரு மாதியுஞ் சிவஞான தானமும்
பரவுமை வகைவேள்வியும்
பலபலவி சிட்டகா ரணமோடு தருமமும்
பாதகமு முறைசொர்க்கமும்
நரகவிய லுஞ்சனன மரணவிய லுஞ்சொர்க்க
நரகசே டத்தினியலு
ஞானபோ தமுமினிய பரிகார மாமியலு
நற்கோபு ரத்தினியலுங்
கரகமல முடிமிசை குவித்துமன முருகியிரு
கண்கணீர் நின்றுசொரியக்
கடலேழு மங்கையிற் கொண்டகுறு முனியன்று
கயிலையங் கிரியின்மேவிச்
சரணதா ரைதொழ மொழிந்தகர னூராளி
சப்பாணி கொட்டியருளே
சங்கரி திகம்பரி சிதம்பரி தருங்குமர
சப்பாணி கொட்டியருளே.
39வேறு✓
துக்கமக லத்தினநி னைப்பவர்ம னத்திருள்து
ரத்தியம ணித்தீபமே
சுற்றியபி றப்பினிலி யற்றியவி னைத்தொடர்ந்து
வைக்குமொரு சிற்றானையே
மைக்குடுவ டக்கியவ ழித்துணைவர் பொற்புயம
லைக்கணியு முத்தாரமே
மற்றுநிக ரற்றசுரு திப்பொருள்க லைப்பொருண்ம
ணக்குமொரு கர்ப்பூரமே
நெக்குருகு சிட்டர்கள்கு ளித்திடவ ருட்புனனி
றைத்தருளு நெட்டோடையே
நித்தமுத திக்குளுத யப்பரிதி யிற்சுடர்நி
கழ்த்தியம ணிக்கோவையே
குக்குடமு யர்த்தருள்தி ருக்கரபு ரத்திறைவ
கொட்டியருள் சப்பாணியே
கொட்டமொடெ திர்த்தவசு ரக்குழுவை வெட்டுமுனி
கொட்டியருள் சப்பாணியே.
40✓
புற்றரவு கச்செனவி சைத்தவர்ம ழுக்கனல்பொ
றுத்தசும லப்பாணியார்
புத்தமுதி னைச்சுரர்க ளுக்குதவி நச்சதுபொ
சித்தகரு ணைப்பார்வையார்
வெற்றியிட பக்கொடிய டைத்தவர்ந டத்தொழில்வி
ளைத்தவிரு பொற்பாதனார்
வித்தகர்வ ழித்துணைவர் பொற்புயம ணைத்தவள்ளி
ருப்பமுறு நற்பாலனே
சிற்றிடைவ ருத்துசிக ரக்கனத னத்தியர்தெ
றித்தகள பச்சேறுசூழ்
தெற்றிகள்பு லர்த்தமது ரத்தமிழ ம ணத்தினொடு
சித்தசர்ம ணித்தேரதூர்
கொற்றமுள் நற்கரபு ரத்தறுமு கத்திறைவ
கொட்டியருள் சப்பாணியே
கொட்டமொடெ திர்த்தவசு ரக்குழுவை வெட்டுமுனி
கொட்டியருள் சப்பாணியே.
41✓
கைத்தலம ழுப்புறுசு ணத்தவர்க ளுற்றகயி
லைத்திரும லைச்சூழலோ
கட்டழகு பெற்றொளிப ரப்புமது மட்டுடைய
கற்பகம லர்ச்சோலையோ
வெத்தலமு மெப்பொருளு மிப்படியெ னச்சொன்மறை
யிற்பொருளி னப்பாலுமோ
விக்குவிலெ டுத்தமத னைப்பொடிப டக்கணிலெ
ரித்தவரி டப்பாகமோ
நித்தியம லத்தனுவெ னத்தவநி லைக்கணினி
னைப்பவர்ம னக்கோயிலோ
நித்தமு முனக்கிடமெ னப்பரவு பத்தர்தொழு
நித்திகக ளிப்பாகவே
கொத்தலர்வ யற்கரபு ரத்தறுமு கத்திறைவ
கொட்டியருள் சப்பாணியே
கொட்டமொடெ திர்த்தவசு ரக்குழுவை வெட்டுமுனி
கொட்டியருள் சப்பாணியே.
42✓
கற்றவறி விற்பெரிய வப்பரைமு ருட்டறிவு
கற்றவர்கள் கற்றாணிலே
கட்டியுத திக்குள்விட வப்பொழுத வர்க்கதுக
டக்கவரு ளைத்துரவுவா
ரெற்றுபுனல் மத்தமித ழித்தொடையெ ருக்கறுகி
ருக்குமுடி யெட்டாமலே
யெக்குமத லைக்குயரு முச்சியைய ளைத்தவரை
டுக்குமிள மைப்பாலனே
உற்றிடுமு ழத்தியர்மு கத்தில்விழி நித்திலமு
திர்க்குநளி னப்பூவின்மே
லுற்பலமெ னத்திகழ்வ தற்குழவர் வெற்றுளமு
ருக்கவரு மக்கோலவேள்
கொற்றவமர் முற்றியதி ருக்கரபு ரத்திறைவ
கொட்டியருள் சப்பாணியே
கொட்டமொடெ திர்த்தவசு ரக்குழுவை வெட்டுமுனி
கொட்டியருள் சப்பாணியே.
43✓
அப்புடைவ யற்கயல்கு தித்தெழுவு திர்த்தகம
லத்தரள நற்சோதியா
லற்றையிரு ளைக்கடிய மைக்குவளை யிற்றுகள்
தைப்பொருதி டக்காமவேள்
செப்புமதி முற்றிருளி லுற்றதென வட்டமுள
செப்பிளமு லைப்பாவைமார்
சித்தமும யக்கவிடர் சித்தமுமு றப்பொருதி
ருக்கரபு ரத்தேவனே
முப்பழமி தப்படுபொ ரிக்கறிப ருப்புநெய்மு
ளைத்துவரை யிக்கோடுதேன்
முக்கணவ லப்பமடை பிட்டுமது ரித்தவடை
முப்பொழுது முட்டாமலே
கொப்புணல்வ யிற்றிலடை யக்கொளும வற்கிளவல்
கொட்டியருள் சப்பாணியே
கொட்டமொடெ திர்த்தவசு ரக்குழுவை வெட்டுமுனி
கொட்டியருள் சப்பாணியே.