முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
காப்பு1 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

காப்பு

1பிள்ளையார் வணக்கம்✓
சுந்தரனாந் தென்விரிஞ்சைத் தோகைமயில் வாகனன்மேற்
சந்தமுறும் பிள்ளைத் தமிழ்பாடச் - செந்தமிழ்சேர்
வாக்கெனக்கு நல்கி மதமா முகக்கடவுள்
ஊக்கமுடன் காப்பா னுவந்து.
2பருவத்தொகை✓
சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே சிற்றிலே ஆய்ந்த சிறுபறையே
பம்புசிறு தேரோடும் பத்து.