திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
செங்கீரைப்பருவம்3 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்
செங்கீரைப்பருவம்
14✓
உம்பரசு ரேசர்புரி வாதனை உரைத்தருள
உயர்கயிலை வாழ்ப ரமனார்
யோகத்தி லுண்ணவெண் ணீறணியு நுதல்விழியி
லோராறு பொறிகள் சிதற
வெம்பொறி யெழுந்தண்ட ரண்டம் பரந்துலவ
விண்ணவர்க ளஞ்சி மலைவாழ்
வித்தகர்க் கோதவப் பொறிகள்தமை வாவென்று
வெங்கனலி தனையி தனைநீ
சம்பரமொடு சரவணந் தனில்விடுதி யென்னவத்
தழலவன் கொண்டகலவத்
தழல்வெம்மை யாற்கங்கை தனில்விடக் கங்கையுஞ்
சரவணந் தனில் வைத்திடச்
செம்பதும முகமா றுடன்குலவு கரனூர
செங்கீரை யாடி யருளே
திருமுருக வரிமருக வரதகுரு பரகுமர
செங்கீரை யாடி யருளே.
15✓
ஆரமா முமைதாட் சிலம்பினவ மணிசிதற
வதனையர னாட வொன்பான்
ஆயிழைய ராயவர் கருப்பந் தரித்துமையி
னருளினா லவர்க ளருளும்
வீரவா குவையுமடல் வீரகே சரியையும்
வீரமா கேந்திர னையும்
வீரமா கேசனையும் வீரபுரந் தரனையும்
வீரராக் கதனை யுந்தோள்
தாருலாம் வீரமார்த் தாண்டனையும் வீரராந்
தகனையும் வீர தீரன்
தன்னையுந் தம்பிய ரெனக்கொண்டு தோலாத
சமரேறி வடிவே லினால்
தீரராம் நிசிசரரை வென்றகர னூராளி
செங்கீரை யாடி யருளே
திருமுருக வரிமருக வரதகுரு பரகுமர
செங்கீரை யாடி யருளே.
16✓
ககனமுக டுருவியெழு மகமேரு கிரியையொரு
கனகபம் பரமாகவே
கைக்கொண்டொ ராயிரக் கதிர்முடிச் சேடனைக்
கயிறாக வேசுருட்டிச்
சகலலோ கமுமுறத் தழுவியிடு கமடமது
தன்னையொரு குறியாகவே
சங்கரர் மகிழ்ந்தருள வரவிகட் கிடையுறு
சாராம லாடுகுமரா
மகரதோ ரணமறுகு மாணிக்க மண்டபமும்
வயிடூரியப் புரிசையும்
மரகதக் கோயிலும் பவளநித் திலமருவி
மதியின்மண் டலமளாவுஞ்
சிகரகோ புரமுமொளி தழையவாழ் கரனூர
செங்கீரை யாடி யருளே
திருமுருக வரிமருக வரதகுரு பரகுமர
செங்கீரை யாடி யருளே.
17✓
பரவையை யுறிஞ்சிவட குலகிரி குலுங்கிடப்
பாய்ந்தண்ட ரண்டமெல்லாம்
பயமெழ விழித்துவிழி களிலனல் கொழித்துரக
பந்திமுடி திண்டாடவே
தரணியி னடந்துதிசை மதகரியுடன்பொருது
தாவியா காயமேவித்
தாரகை யுதிர்த்தமரர் தாருவை யழித்துவரு
தகரினே றியகுமரனே
வரையில் குங்குமமரமு மணநாறு சந்தனமும்
மதுவொழுகு புன்னாகமும்
வாழையின் கனியுமணி யாரமும் உடன்கொண்டு
மழைபொழியு மேகமளவாய்த்
திரையெறிந் தொருபாலி நதிவருங் கரனூர
செங்கீரை யாடி யருளே
திருமுருக வரிமருக வரதகுரு பரகுமர
செங்கீரை யாடி யருளே.
18✓
பங்கயத் திரையமறை நூல்வினவி யோமெனும்
பதவுண்மை நீசொல்லெனப்
பண்டவன் திண்டாடல் கண்டுகுட் டித்தளை
படுத்திவண் சிறையூடுவைத்
தங்கையிற் செபமாலை குண்டிகை தரித்தபய
வரதத்தொடை முகமா
யன்றமர்ந் தண்டரண் டங்களையும் உண்டாக்கும்
ஐயனே துய்யஅரசே
கொங்குடைச் சண்பகா டவியுமிள வாழைக்
குருத்துமணி சேர்கரும்புங்
குளிர்தாழை யுங்கமுகு விடுபாளை யுங்கனக
கோபுரக் கொடியுமடவார்
செங்கையிற் கழலுமழை முகிலளவு கரனூர
செங்கீரை யாடி யருளே
திருமுருக வரிமருக வரதகுரு பரகுமர
செங்கீரை யாடி யருளே.
19வேறு✓
மாசுது பொருந்தாத காசிப னுடன்கூடி
மாயையரு ளும்பாலராம்
வாளரி முகன்றாரு காசுர னெனும்வேழ
மாமுக னெடுஞ்சூரனா
காசமள வுஞ்சீற சோமுகி யெழுந்தேழு
காசினியும் நொந்தேறவே
காவலது கொண்டான வானவர் பயந்தோடு
காலமவ ரஞ்சாமலே
வீசுதிரை யம்போதி நீர்சுவற மஞ்சான
வேடமொ டெதிர்ந்தோலமாய்
மேருகிரி யுந்தூளி யாகவரு வெஞ்சூரர்
வீழவிடு கெம்பீரனே
ஆசுறு விரிஞ்சேச னாரருள் இளங்காளை
யாடியருள் செங்கீரையே
ஆறுமுக முந்தோளு மேரொழு கிளங்காளை
யாடியருள் செங்கீரையே.
20✓
@todo add missing 4 lines
நாடியவுர் மஞ்சான வோதியி லலங்கார
நாண்மலர் முகந் தூதுவாய்
நாதமமர் நெஞ்சாசை யோதுத லெனும்பாலி
நாடுடைய கெம்பீரனே
பாடிமறை கொண்டாட ஆரமுத முண்டார்கள்
பார்வைகள் சலந்தூவமா
பாதக முறிந்தோட மாதவ ரெழுந்தார
வாரமுட னின்றாடவே
ஆடிய விரிஞ்சேச னாரருளிளங் காளை
யாடியருள் செங்கீரையே
ஆறுமுக முந்தோளு மேரொழு கிளங்காளை
யாடியருள் செங்கீரையே.
21✓
தாறுடைய பைம்பூக மாதவர் வரும்போது
சாமரை தருஞ்சோலைசூழ்
தாழைமயி லின்சாயல் மாதரிடை மின்சோதி
தானென மலர்ந்தெடெலாம்
நாறுமண முங்கூடி நீறுபுனை யன்பாளர்
ஞானவிழி யின்பாணிபோல்
நாளுமரு வுந்தாது தேறல்சொரி யும்பாலி
நாடுடைய கெம்பீரனே
சீறுமர வம்பாதி மாமதி கருங்காவி
சீதவன சந்தாதுசெந்
தேனொழுகு மந்தாரை தாதகி செழும்பூளை
தேவர்தலை யென்பாமையோ
டாறணி விரிஞ்சேச னாரருள் இளங்காளை
யாடியருள் செங்கீரையே
ஆறுமுக முந்தோளு மேரொழு கிளங்காளை
யாடியருள் செங்கீரையே.
22✓
மாரமத னன்றேரு மானையும் மகிழ்ந்தேறு
வாசியு மவன்காளமும்
வாளியும் நெடுஞ்சோலை யீயநல வம்போடு
வார்சிலை தரும்பாரில்வாழ்
நாரைவன சந்தாவு மாரலிரை யென்றோடி
நாடிநுக ரும்போதெலாம்
நாவிலதில் வந்தாறு தேனுநுக ரும்பாலி
நாடுடைய கெம்பீரனே
பூரணி கொடுஞ்சூலி நீலியுமை கங்காளி
பூமகள் தொழும்பூவைமால்
பூவிலுறை யுந்தேவன் மாமுனி கரன்றூய
பூசைபுரி யும்பாதனார்
ஆரணி விரிஞ்சேச னாரருள் இளங்காளை
யாடியருள் செங்கீரையே
ஆறுமுக முந்தோளு மேரொழு கிளங்காளை
யாடியருள் செங்கீரையே.
23✓
நீதிபெறு மன்பாளர் பாவவெயி லண்டாமல்
நீழலரு ளுஞ்சோலையே
நீடிய கொடுஞ்சூர ராகிய கருங்காடு
நீறெழ வெழுந்தீபமே
நாதமொடு கொண்டாடு வாரிருள் இரிந்தோட
நாடொறு மெழும்பானுவே
ஞானியர்கள் நெஞ்சான கோயிலும் அடங்காத
ஞானநிறை யம்பாரமே
மேதினியின் நொந்தாரை யேழ்பிறவி யீடேற
மேவிட விடுந்தோணியே
மேதியில் வருங்கால னாரெமை யடும்போது
விடுதவு சஞ்சீவியே
ஆதிய விரிஞ்சேச னாரரு ளிளங்காளை
ஆடியருள் செங்கீரையே
ஆறுமுக முந்தோளும் ஏரொழு கிளங்காளை
ஆடியருள் செங்கீரையே.