திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
காப்புப்பருவம்2 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்
காப்புப்பருவம்
3திருவருள்✓
திருக்கஞ்ச இருகரத்தின் அபயவர தமுஞ்சேர்
திகழமர கதமளித்த தெய்வசிகா மணியை
அருக்கன்சந் திரன்தவழும் புரிசைவிரிஞ் சையில்வாழ்
ஆறுமுகத் தரசனைமை யாண்டவனைப் புரக்க
பெருக்கஞ்சந் ததமேவுஞ் சிவநாத னிடத்திற்
பிறந்தவொரு சிறுபாலன் பெருங்காணி பெறவே
இருக்கஞ்சன் முதலமர ரரகரவென் றேத்த
விளைத்தபிறை சூடுமுடி வளைத்ததிரு வருளே.
4திருநீறு
வேறு✓
முடியா றுடையாய் குமரசிவ மோட்சத்தேற்றும்
முருகா அசுரே சர்களாகிய காட்டைப்பாற்றும்
முனைவா கருணா கரனேமறை வாக்கிற்சாற்றும்
முடியா முதலே தளையோதிம னார்க்குப்பூட்டும்
அடியார் துணையே அவர்பால்வினை யாட்டைக்காட்டும்
அமுதே கனியே நறவேமுரு காற்றைக்கேட்கும்
அரசே யெமதா ருயிரேயெமை யூத்தைக்கூட்டில்
அடையாநெறிநீ அருள்வாயென வாழ்த்திப் போற்றி
விடியா மலமா யைகளாமுருள் தீர்த்துத்தீர்த்து
விழிநீர் தருயோ கிகள்சேர்தரு வீட்டுக்கேற்ற
வெளிறா அமுதா யுலகோரிடர் நீக்கப்பாட்டு
மிகவோ தமுனா னொருநேயனுள் நாக்கிற்றீட்டும்
வடிவே லுடனே வயல்சூழ்கர னூர்க்குட்டோற்றும்
மயிலே றியசேய் சிறுவானுநுதன் மேற்பொற்பூத்த
மலைமான் முலையூ றியபாலொடு கூட்டிச்சாத்தும்
வளைபோன் மதிபோல் ஒளிசேர்திரு நீற்றுக்காப்பே.
5மார்க்கசகாயசுவாமி
வேறு✓
சீரியவே லாயுதனைச் செவ்வேளைக் குகனைத்
தேவர்கள்சே னாபதியைத் திருமயில்வா கனனைக்
காரியகா ரணங்கடந்த கடவுளையெங் கோனைக்
கரபுரியி லாறுமுகச் சேவகனைக் காக்க
கூரியகொந் தளதேசத் தனபாலன் மகிழக்
குளிர்பிறையுஞ் சடைமுடியும் மழுமானும் பணியும்
வாரியிருட் கடுமிடறும் நுதல்விழியும் மறைத்தே
மறைப்புரியில் வழித்துணையாய் வந்தருள்சே வகனே.
6மரகதவல்லி
வேறு✓
அரவின் மணிகளும் அருண கிரணமும்
அழிய ஒளிவிடு தோற்றனை
அழகு பொழிதரும் இளைய குமரனை
அசுர ரொடுபொரு சீற்றனை
அயனு மலைவுறு மறையின் இறுதியை
அமுத மொழிகொடு தேற்றனை
அடிமை படுமவர் கொடுமை பொடிபட
முடுகி யெழுமுரு ஞாற்றனை
✓
விரவி யளியின முரல நறவுறு
குவளை மலர்கமழ் நாற்றனை
விழிக ளொருபதொ டுபயம் உடையனை
மிருக மதமகில் சேற்றனை
விருது பெருகரு தவர்க ளுடலுயிர்
விடுதி பெறவடு கூற்றனை
விபுதர் புகழ்கர புரியில் வருமறு
முகனை அணிதிரு நீற்றனை
✓
இரவி மதியழ னயனி பரிபுர
சரணி கவுரிச டாட்சரி
இறைவி திரிபுர தகனி முனிவர்கள்
இதய மலரை விடாக்கினி
எழுக டலுமெழு புவியும் அருளியும்
இளமை நலமழி யாக்குயில்
இழிஞர் தொழிலது புரியும் அறிவில
ரிடர்க ளிடயவ ராப்பிடி
✓
வரையி லுறைபவள் கருணை மழைபொழி
வதனி சடிலம கோத்தமி
வடுகி பகவதி குமரி சிவனிட
மருவி நிறையக லாத்திரு
வனச மலர்மகள் சகல கலைமகள்
வழிய டிமைவினை தீர்ப்பவள்
மலையின் மடமகள் வருண மரகத
வலிய மலியவள் காக்கவே.
7கங்கை
வேறு✓
எம்பா தகநீக் கியவே லவனை
இமையோ ரரசைக் குமரே சனையென்
இதயத் திருளைக் களையுங் குகனை
அம்பான் மொழிஅம் மையளித் தருளும்
அமுதைக் கனியைக் கரனூர் தனில்வாழ்
அடியார் பெருவாழ் வையளித் தருள்க
கம்பா நதிகோ தமைகா வேரி
காளுந்தி கோதா விரிபா லிநதி
கனகா நதிகண் டிகைகுண் டிகைசூழ்
பம்பா நதிவா னதிசீ தைநதி
பாஞ்சா லிதபோ நதியே முதலாம்
பலவா நதியா னபகீ ரதியே.
8கணபதி
வேறு✓
முந்திவரு சூரரின மாளச் சிவந்தவனை
முன்புகடல் நீர்சுவற வேல்தொட்ட செங்கையனை
முண்டகனை நூல்வினவி வாதித்த புங்கவனை
மொய்ம்புபெற வேதொழுத கீரற்கி ரங்கினனை
எந்தையை என்ஆவியை என்னாவிக் கருந்துணையை
என்சிரசி லோலமிடு பாதச்ச தங்கையனை
இன்பமுரு கேசனைமெய்ஞ் ஞானக் கொழுங்கனியை
எங்கள்கர னூரின்மயி லோனைப் புரந்தருள்க
அந்தரமெ லாமதிர வாய்விட்டு மண்டிவரு
மஞ்சலரெ லாமுறிய வால்சுற்றி மஞ்சுதனை
அங்கைகொடு தாவியத னீரைப்பி ழிந்துகட
லம்புவியெ லானெளிய வோடித்தி ரும்பிவிட
மந்தரமெ லாமசைய வேமுட்டி யங்குலவு
வன்பரிதி தேர்முறிய வேகுத்தி வெண்டரளம்
வந்துலவு மேழ்சலதி நீர்வற்ற உண்டுமிழும்
வண்டுகண்ம தாசலம தாயுற்றி ருந்தவனே.
9வைரவன்
வேறு✓
ஒருகைமணி ஒருகைகயி றொருகைசரம் ஒருகைசிலை
ஒருகைகடம் ஒருகை வடிவாள்
பொருகழுமு ளொருகைசிரம் ஒருகையிவை யுடையகர
புரிவடுக னடிதுதி செய்வாம்
முருகையரி மருகமையின் முனியைமறை முதலையறு
முகனையுமை மகனை யடியார்
இருளகல வருகுகனை எமையடிமை கொளுமரசை
இனிமையொடு புரவு செயவே.
10திருவேல்
வேறு✓
முடியொ ராறுடை யானையெம் ஐயனை
முதல்வனைச் செவ்வேளைப்
படியெ லாம்புகழ் தேவனை விரிஞ்சையம்
பதிமுரு கனைக்காக்க
கொடிய தானவர் குருதியி லாடிவெங்
குடலெனுந் தொடைசூடி
நெடிய யாக்கையின் நிணமெலாம் அருந்திய
அவன்கையின் நெடுவேலே.
11திருமயில்
வேறு✓
தொண்ட னாகவெ மைக்கொ ளுஞ்சிறு
தோன்ற லைச்சதுர் வேதநூல்
சொல்லு மாமணி வாய னைச்சுக
மாயி ருந்தும ணங்கொளும்
வண்டு சேர்தரு நீப மாலைய
னைத்தி ருக்கா னூரில்வாழ்
மரக தக்கொடி பெற்ற செஞ்சுடர்
மணியை யன்பொடு காக்கவே
அண்ட கூட நடுங்க மால்வரை
தூளி யாகஅத் தூளியால்
ஆழி யேழுநி ரம்பி மேடுப
டக்க லாபம டித்தெழுந்
தெண்டி சாமுக முங்க டைக்கணி
மைக்கு முன்னமு லாவியே
என்று மாட லியற்றி வாழ்வ
னேறு கின்றம யூரமே.
12திருமுருகாற்றுப் படையும் திருப்புகழும்
வேறு✓
அம்மைமுலை யுண்டுவிளை யாடுமிளை யோனைஎமை
யாட்கொண்ட குமரேசனைச்
செம்மையுள ஆறுமுக னைத்திரு விரிஞ்சைவரு
சேயைப் புரந்தருள்கவே
மும்மைமல மகலநக் கீரமுனி சொன்னதிரு
முருகா றெனுந்தேறலும்
எம்மருண கிரிநாதர் ஓதுபதி னாறா
யிரந்திருப் புகழுமுதுமே.
13பலதேவர்கள்
வேறு✓
கந்தனை வேளை விரிஞ்சையின் மேவு
கடம்பனை மாதுமையாள்
மைந்தனை வேலனை எங்கும ரேசனை
வந்திரு தாள்பணிவார்
இந்திரர் வானவர் சந்திர சூரியர்
எண்டிசை யோர்முனிவோர்
செந்திரு மார்பினர் விஞ்சையர் பாதலர்
செங்கம லாசனரே.