முருகன் App
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
சிறுபறைப்பருவம்10 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்

சிறுபறைப்பருவம்

81✓
ஊற்றும் பசுந்தேன் உவட்டநெட் டிதழ்விரியும்
ஒண்காந்தள் முச்சியுச்சி
ஒருவன்நீ மும்முதற் கடவுளும் இளைப்பாற
உலகெலாந் தலையளித்துப்
போற்றும் திறத்தினப் பழமறைக் கிழவன்
புரிந்தபகி ரண்டங்கள் தாம்
புதுக்குவ கடுப்பநெடு வெளிமுகட் டுக்குவிரி
புதுநிலாக் கற்றையிட்டுத்
தூற்றும் பெயர்கரு முகிழ்படாத் தையும்வெண்
துகிற்படாம் ஆக்கிவீக்கித்
தொடுகடற் புவனப் பெருந்தட்டொ டண்டச்
சுவர்த்தலத் துக்கும்வெள்ளை
தீற்றும் சுதைத்தவள மாடமலி வேளூர
சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
சிறுபறை முழக்கியருளே.
82✓
விளைக்கும் பெரும்புவனம் ஒக்கக் கரைத்தகடை
வெள்ளம் சுருங்கவீங்கி
வேதண்டம் எட்டினொடு மூதண்ட கூடத்தும்
விளையாடி உலகமேழும்
வளைக்கும் கருங்கடல் பெரும்புறக் கடலொடும்
வாய்மடுத் தெதிரெடுப்ப
வருபுனற் காவேரி வளநாடன் நாள்தொறும்
மதிக்கடவுள் ஏறியேறி
இளைக்கும் பளிக்கறை முயற்கறை அறக்காலும்
இளநிலா வெள்ளமூழ்கி
எறிதிரைப் பாகீ ரதிப்புனல் குடைந்திடும்
இடைக்கொடி நகிற்கொடியெனத்
திளைக்கும் துகிற்கொடி முகிற்கொடி செய்வேளூர
சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
சிறுபறை முழக்கியருளே.
83✓
இருளும் தரங்கக் கருங்கடல் முகட்டெழும்
இளம்பிறை முயற்குழந்தைக்
கேறவிடும் ஓடமென வான்மீன் தடந்திரை
யெடுத்தெறியும் நெடுமீனெனத்
தரளம் பதிந்திட்ட மணிமுறுவ லவரோடு
தருநிழற் செல்வருக்கும்
தமனிய விமானமும் வெயிற்கதிர்ப் போர்வையான்
தனிஆழி திசையுருட்ட
உருளும் கொடித்தேரும் வீற்றுவீற் றெழில்புனைந்
தோட்டுபொன் தெப்பம் என்ன
உலகேழும் மலையெட்டும் ஒழுகுகதிர் விழுதுவிடும்
ஒள்நிலாப் புணரிகோப்பத்
திரளும் பளிக்குமா டங்கள் பொலிவேளூர
சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
சிறுபறை முழக்கியருளே.
84✓
மொய்ம்பிற் பெரும்புவனம் ஒக்கச் சுமக்கின்ற
மோட்டாமை முதுகுளுக்க
முடவுப் படங்கிழிந் தரவரசின் ஆயிர
முடித்தலையும் மூளைபொங்கக்
கம்பக் கடாயானை எட்டும் பிடர்த்தலை
கழுத்தொடு முரிந்துகவிழக்
கதிர்மணிச் சூட்டுநெட் டரவெட்டும் வடவைக்
கடுங்கனற் கண்பிதுங்க
அம்பொன் தடம்புரிசை யெழுபெருந் தட்டுருவி
அண்டகூ டத்தளவலால்
அவரவர் வழங்குதற் கிடுதலைக் கடையென
அடுக்கேழு நிலையேழுமாம்
85✓
செம்பொன் திருக்கோ புரங்கள்பொலி வேளூர
சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
சிறுபறை முழக்கியருளே.
தரிக்குஞ் சுடர்ப்பருதி முழுமதிக் கடவுளொடு
தடமதில் கடந்தகநகர்
சாரஅரி தாற்புவன கோடிகட் கொளிசெயச்
சதுர்முகன் கற்பந்தொறும்
விரிக்கின்ற இருசுடரும் ஒருவழித் தொக்கென
வியன்கதிர்ப் படலமூடி
வீங்கிருள் விழுங்குசெம் மணிமாட நிரையும்ஒளி
விளைபசுங் கதிர்வெண்புரி
புரிக்கும் செழுந்தரள மாடமும் வெயிலினொடு
பொழிநிலாப் போர்ப்பமுற்றும்
போதுதெரி யாமையிற் குமுதமொடு சதஇதழ்ப்
போதுமே இருபோதையும்
தெரிக்கும் தடம்பணை உடுத்ததமிழ்வேளூர
சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
சிறுபறை முழக்கியருளே.
86வேறு✓
மழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை
மடமயி லினம்அகவ
மால்கட லோலிடும் ஒலியென விரக
மடந்தையர் மனநெகிழப்
பழமறை ஆர்ப்பென ஆகுதி வேட்டெழு
பண்ணவர் உளமகிழப்
பரநா தத்தொலி யெனஅனு பூதி
பலித்தவர் நெக்குருக
அழலவிர் சோதியெம் ஐயன் நடஞ்செய
ஆயிரம் அங்கையினோர்
அண்ணல் துவைத்திடு குடமுழ வொடுசுடர்
ஆழி யவன்கொட்டும்
முழவென அமரரும் முனிவரும் ஆர்ப்ப
முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்
முழக்குக சிறுபறையே.
87✓
பெருவெளி முகடு திறந்திடட் டண்டப்
பித்திகை வெடியாமே
பேரண் டத்துள வேதண் டங்கள்
பிதிர்ந்துதிர் வாகாமே
குருமணி சிதறிய வென்ன உடுத்திரள்
கொட்டுண் டுதிராமே
குவடு படுந்திசை செவிடு படச்சிலர்
குடர்கள் குழம்பாமே
திருவிர லொடுநக கன்களி னுஞ்செங்
குருதி ததும்பாமே
சேயொளி நின்று துளும்பிட நின்சிறு
செங்கை வருந்தாமே
முருகலர் தாரவன் ஒருமுறை மெல்ல
முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்
முழக்குக சிறுபறையே.
88✓
வம்மின் எனப்புல வோரை அழைத்திடு
வண்கொடை முரசமென
வடகலை தென்கலை யொடுபயி லுங்கவி
வாணர்கள் ஓடிவர
அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்ற
அணங்கை மணம்புணரும்
அணிகிளர் மணிமுர சென்னஎம் ஐயனொ
டம்மை மனங்குளிரத்
தெம்முனை சாயச் சமர்விளை யாடிச்
செங்கள வேள்விசெயும்
திறல்முர செனஇமை யவர்விழ வயரச்
செழுநகர் வீதிதொறும்
மும்முர சமுமதிர் காவிரி நாடன்
முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்
முழக்குக சிறுபறையே.
89வேறு✓
பெருகுசு வைத்தெளி நறவொழு கக்கனி கனியமுதே
பிடிநடை கற்றிட அடிகள்பெ யர்த்திடு மடவனமே
கருவரை நெக்குடன் உருகமி ழற்றுமொர் கிளியரசே
கருணைசெ யத்தகும் அளியனி டத்தெனும் மொழிபுகலா
அருளில் புனத்தவர் மகளிரு பொற்பதம் வருடல்செயா
அவள்முனெ டுத்துநின் முடியின் முடித்திடு கரமலராற்
பருவ யிரப்புய சயிலன்மு ழக்குக சிறுபறையே
பருதிபு ரிச்சிறு குமரன்மு ழக்குக சிறுபறையே.
90✓
இழுமென்மொ ழித்தெளி தமிழின் வடித்திடு நவரசமே
இதய இருட்டற உணர்விலு தித்திடு சுடரொளியே
கழுவு மணிக்கலன் நடுவிலி ழைத்திடு குலமணியே
கனிதரு முக்கனி யொடுவடி கட்டிய சுவையமுதே
ஒழுகுந றைச்செழு மலர்விரி யக்கமழ் புதுமணமே
உருகுமு ளத்தருள் பெருகியு வட்டெழு சலநிதியே
பழமறை கட்கொரு முதல்வன்மு ழக்குக சிறுபறையே
பருதிபு ரிச்சிறு குமரன்மு ழக்குக சிறுபறையே.