முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
அண்டங்கள் அனைத்துமாய்1 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

அண்டங்கள் அனைத்துமாய்

1✓
அண்டங்கள் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஆறுருவம் ஒருருவம் ஆனாய் போற்றி
எண்திசையும் ஏத்துகின்ற இளையாய் போற்றி
ஏரகத்தே உறைகின்ற எம்மான் போற்றி
பண்களிலே இசைக்கின்ற பண்பா போற்றி
பாவலர்தம் நெஞ்சிலுறு பாலா போற்றி
நண்ணரிய இரத்தினகிரி நாதா போற்றி
நாடுவினை நசித்திடுவாய் போற்றி போற்றி.