முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஐந்துமறைத் தாறுமுகம்9 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஐந்துமறைத் தாறுமுகம்

9✓
ஐந்துமறைத் தாறுமுகம் அளித்தாய் போற்றி
அமர்வென்ற ஆறிரண்டு தோளாய் போற்றி
செந்திருவைச் சேர்ந்தவிரு கரத்தாய் போற்றி
செய்யவேல் தாங்குமொரு கரத்தாய் போற்றி
மைந்துடைய மார்பிலொரு கரத்தாய் போற்றி
வந்தவர்க்கு வழங்குமொரு கரத்தாய் போற்றி
பந்தமதைப் பற்றறுக்கும் கிரியாய் போற்றி
பாவியென்றன் மனத்துறைவாய் போற்றி போற்றி.