முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
எஞ்சிவனார்க் குணர்த்துமே7 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

எஞ்சிவனார்க் குணர்த்துமே

7✓
எஞ்சிவனார்க் குணர்த்துமே ரகத்தாய் போற்றி
இகல்மிகுசூர் தடிந்தசெந் தூரா போற்றி
பஞ்சடியாள் ஏற்றபரங் குன்றா போற்றி
பழம்நாடிச் செல்பழுனிப் பதியாய் போற்றி
மஞ்சுசூழ் பழமுதிர்ப் பொழிலாய் போற்றி
மாகமார் திருத்தணிகை மலையாய் போற்றி
நெஞ்சுதவழ் இரத்னகிரி நிமலா போற்றி
நேடிவந்தோர்க் கருள்குகனே போற்றி போற்றி.