முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
உள்குவார் உள்ளமதில்5 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

உள்குவார் உள்ளமதில்

5✓
உள்குவார் உள்ளமதில் உறைவாய் போற்றி
உள்காதார் உணர்வினுக்கே எட்டாய் போற்றி
கள்ளமனத் தூறதனைக் களைவாய் போற்றி
காரிருளாம் ஆணவத்தைக் காய்வாய் போற்றி
புள்ளேறும் திருமாலின் மருகா போற்றி
புவனங்கள் போற்றுகின்ற புனிதா போற்றி
வள்ளிதனை உகந்தேற்ற வேலா போற்றி
வளர்இரத்ன கிரியானே போற்றி போற்றி.