முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஓங்காரத் துள்ளிருக்கும்11 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஓங்காரத் துள்ளிருக்கும்

11✓
ஓங்காரத் துள்ளிருக்கும் ஒளியே போற்றி
உயிர்களின்பால் உள்ளுணர்த்தும் உணர்வே போற்றி
பாங்கினொடு பொருள்களெல்லாம் ஆனாய் போற்றி
பாவகத்தால் உடனாய பரனே போற்றி
நீங்காதென் உள்ளத்தே நின்றாய் போற்றி
நின்மலனே குறைவில்லா நிறைவே போற்றி
தீங்கறுக்கும் இரத்னகிரிச் சேயே போற்றி
தீந்தமிழ்நற் கடவுளே போற்றி போற்றி.