முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
இந்திரனின் இடும்பைகளைஎந்3 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

இந்திரனின் இடும்பைகளைஎந்

3✓
இந்திரனின் இடும்பைகளைஎந் திட்டாய் போற்றி
இந்திரியச் செயல்தன்னை ஈர்ப்பாய் போற்றி
சந்ததமும் நினைப்பவரைச் சார்வாய் போற்றி
சச்சிதா னந்தநற் பொருளே போற்றி
பந்தவினை பற்றறுக்கும் பரனே போற்றி
பதமலரை நெஞ்சகத்தே பதிப்பாய் போற்றி
செந்தமிழ்சேர் இரத்தினகிரிச் செல்வா போற்றி
சேயானே செவ்வேளே போற்றி போற்றி.