முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஈசனருட் கண்ணுதித்த4 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஈசனருட் கண்ணுதித்த

4✓
ஈசனருட் கண்ணுதித்த இறைவா போற்றி
என்னுளத்தின் இருளோட்டும் சுடரே போற்றி
பாசத்தைப் பறிக்கின்ற பதியே போற்றி
பாவியேன் உள்ளத்தே பயில்வாய் போற்றி
நேசத்தால் உன்றாளை நேர்வாய் போற்றி
நெஞ்சமதில் நெகிழ்கின்ற நினைவே போற்றி
வாசமலர் தூழிரத்ன கிரியாய் போற்றி
மாசறுக்கும் மாமயிலாய் போற்றி போற்றி.