முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஒண்மணியங் குசம்சேரும்10 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஒண்மணியங் குசம்சேரும்

10✓
ஒண்மணியங் குசம்சேரும் கரத்தாய் போற்றி
ஒண்வாமத் துற்றவொரு கரத்தாய் போற்றி
வண்ணமிகு குறங்கிலொரு கரத்தாய் போற்றி
வாளொடுகே டகஞ்சேரும் கரத்தாய் போற்றி
பண்பினரைப் பரிந்தெடுக்கும் கரத்தாய் போற்றி
பார்வதியும் பரிந்தணைக்க வந்தாய் போற்றி
நண்ணரிய இரத்னகிரி நாதா போற்றி
நாடுமெனை நண்ணிடுவாய் போற்றி போற்றி.