முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஏதிலனை எதிர்த்தவொரு8 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஏதிலனை எதிர்த்தவொரு

8✓
ஏதிலனை எதிர்த்தவொரு முகனே போற்றி
எழில்மாதர் மணந்தவொரு முகத்தாய் போற்றி
நாதனுக்கே உணர்த்துமொரு முகனே போற்றி
நற்றொண்டர் நயக்குமொரு முகத்தாய் போற்றி
வேதாக மம்செய்த முகனே போற்றி
வெவ்வினையை விலக்குமொரு முகத்தாய் போற்றி
வேதமுதற் காணரிய வெம்பா போற்றி
வேண்டியேன் நின்றாளைப் போற்றி போற்றி.