கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
சப்பானிப்பருவம்6 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்
சப்பானிப்பருவம்
31✓
மழைவயிறு கடல்வயிறு கீண்டமாக் கீண்டெம்மை
வாழ்வித்த வேற்பா ணிதன்
வன்புயக் கந்தினொரு பெண்யானை யைக்கட்டி
வைத்தகன் மார்பை வடுவிற்
குழைவுறச் சமர்செயச் செய்வனென் றேபுயங்
கொட்டுகுலி சப்பா ணிமுன்
கூர்ந்துதவு தெய்வயா னையையணந் தவளுங்
குலாவிவிழி கொட்டா துசேர்
விழைவொடு தினைப்புனத் தெயினர்கள் வளர்த்துய்த்த
மென்முலைக் கோட்டா னைதன்
மெய்யழகு நாரதன் விளம்புமுன் களவியலின்
வேட்டிடுவ னினிதி னென்னாத்
தழைவுறு தடம்புயங் கொட்டுவன சப்பாணி
சப்பாணி கொட்டி யருளே
சம்பகா டவிமருவு கம்பைமா நகர்முருக
சப்பாணி கொட்டி யருளே.
32✓
ஒண்சார்ங்க பாணியுங் கரகபா ணியும்விண்ணி
னுறுகுலிச பாணியுந் தாழ்ந்
தோவாம லஞ்சலிசெய் பாணியொடு துதிகயிலை
யுற்றகல் லானி ழற்கீ
ழெண்சார்ந்த சனகாதி நால்வருக் கறநெறி
யினைப்பாணி காட்டி யிசையா
திசைசூல பாணிக்கு மகவாயு முபதேச
மினிதுரைசெய் வடிவு மாற்றி
மண்கூர்ந்த கிழவுருத் தண்டபா ணியினண்மி
மகிழுமங் குசபா ணியா
மால்யானை யான்மருட் டித்தெளித் தருள்கூர்ந்து
மற்றுமொ ரிராவள் ளிமான்
தண்காந்த ளம்பாணி பற்றுவன சப்பாணி
சப்பாணி கொட்டி யருளே
சம்பகா டவிமருவு கம்பைமா நகர்முருக
சப்பாணி கொட்டி யருளே.
33✓
மண்டலம டந்தைமுக மண்டலமெ னுங்காஞ்சி
வளநகர்க் கண்ணின் மணியா
வளர்மணிக் குமரகோட் டத்தருச் சகராய
மாக்கச்சி யப்ப மறையோன்
கொண்டநீள் கனவிடைத் திகடசக் கரமெனக்
கூறுமொழி முன்கொ டேத்திக்
குதுகலித் துத்தினமொர் நூறுகவி செய்தருள்
குலாவத்த சாமத் தினிற்
கண்டவர்கள் பவநீக்கு சந்நிதியின் வைத்துமெய்க்
காப்பிட் டகன்றி டப்பின்
கற்பவர்கள் கேட்பவர்கள் யாவர்களு முய்ந்திடக்
கந்தப் புராண மெனுமத்
தண்டமிழ் சிறப்பத்தி ருத்துவன சப்பாணி
சப்பாணி கொட்டி யருளே
சம்பகா டவிமருவு கம்பைமா நகர்முருக
சப்பாணி கொட்டி யருளே.
34✓
மதுமுகம் பில்கிமது கரம்விருந் துண்டுண்டு
மழலையம் பாண்மி ழற்றும்
வண்கடம் பணிபன்னி ரண்டுமலை சிறிதசைய
மாமேரு மலையு மலையும்
விதுமுகக் ககனமும் பெரிதசைய லக்கர்நவ
வீரரொடு விளையா டுநாள்
வெண்கயிலை மலையினிம மலையுதவு விமலைமகிழ்
மேவுசெம் மலைவ ணங்கிப்
புதுமுகனெ னப்போது மவனைநீ யாரெனப்
போதனென மறைபோ மெனிற்
புகலென்று புகலுமுன நிற்றியப் பிரணவப்
பொருள்பகர்தி யெனவி ழிக்குஞ்
சதுமுகன் றலையினிற் குட்டுவன சப்பாணி
சப்பாணி கொட்டி யருளே
சம்பகா டவிமருவு கம்பைமா நகர்முருக
சப்பாணி கொட்டி யருளே.
35✓
ஒப்பாரு மிக்காரு மில்லாத பொற்பாரு
முமையம்மை திருவு ளங்கூர்ந்
தோவாது கண்மலர் பரப்பியின் புறமுனிவ
ரோரிருவ ரின்பொ ருட்டான்
வைப்பான சிற்சபையி னற்பாத மலர்நோவ
மற்றுநட் டுவனி லாதே
வள்ளலெந் தாதைபுரி திருவருட் கூத்துக்கு
வன்பொய்முன் சொற்ற தன்றிச்
செப்பார ணப்பொருடெ ரிக்காமை யாலுஞ்
சிவப்பான தலையன் கொலாஞ்
சீர்த்தாள மார்ப்பது தகாதுநா னாசான்
சிறப்பா யமைப்பே னெனாத்
தப்பாம னன்குதன பொற்பாணி யொற்றல்போற்
சப்பாணி கொட்டி யருளே
சம்பகா டவிமருவு கம்பைமா நகர்முருக
சப்பாணி கொட்டி யருளே.
36வேறு✓
மஞ்சுநிற வஞ்சுருட னஞ்சுகுடர் பிஞ்சலற
மட்டிலுதி ரத்தா றுபோய்
மண்டியக ருங்கடலொர் செங்கட லெனும்படி
வகுக்குமயி றொட்டே வுசேய்
விஞ்சுபல வண்டமும டங்கலு மதிர்ந்திட
விசைக்குமயி லுற்றூ ருவோன்
விண்டுடுவை வெண்பொரியி னுங்கிமகிழ் செஞ்சுடிகை
மிக்கொளிர் கொடிச்சே வலோ
னெஞ்சலில்க டுந்திறல்கொ ளொன்பதின்மர் நன்றுணை
யிலக்கரொ டடற்பூ தர்கோ
னின்பமுறு மன்பர்சுர ரிந்திரன்மு குந்தனய
னிச்சைதரு மிக்கா னவேள்
குஞ்சரிசெ ழுங்குறவர் வஞ்சியணை யுங்குமர
கொட்டியருள் சப்பாணியே
கும்பமுதி துங்கர்துதி கம்பைவதி யெங்கள்பதி
கொட்டியருள் சப்பாணியே.
வேறு✓
எங்கடவு ளுங்கடவு ளென்றமர் செயும்பலரு
மிக்கடவுள் மெய்த்தேவெனா
இன்புடன ணைந்துபல நன்றுதிபு கன்றுயன
தெத்தனை நினைத் தாலுமே
யங்கவைகள் சங்கையில தங்கைநெலி யங்கனியி
னற்பினொடு பெற்றேயுய்வா
னங்கயிலை யின்கண்ணுறை சங்கரர் பெருங்கருணை
யச்சண்முக முற்றேகியோர்
நங்கள்பு வனங்குலவு தென்றிசைம கிழ்ந்துபுரி
நற்றவனின் வெற்பூரெலா
நங்கைகுரர் தம்படியும் வெங்குறவர் பைங்கொடியு
நட்டகட வுட்டாருநேர்
37✓
கொங்கலர் கடம்பலர நின்றென விளங்குகுக
கொட்டியருள் சப்பாணியே
கும்பமுதி துங்கர்துதி கம்பைவதி யெங்கள்பதி
கொட்டியருள் சப்பாணியே.
38✓
அந்தண னரும்பதமு மஞ்சன வண்ணபதமு
மற்புறுசு வர்க்காதியா
மங்கவையும் வந்திடினு மங்கவை சிறந்தவென
வற்பமு நினைப் போமலோ
மெந்திட மிருந்திடினு மெங்கண்முரு கன்பத
மிசைப்பது மறக்கோமெனா
வின்பநிலை நின்றவென தன்பர்பத கஞ்செய்கில
ரெய்ப்பிலவ ரிப்பாரின்மே
னந்துவினை பின்செயினு நன்றெனவு வந்திடுது
நற்குறவர் பொற்பாவையே
நம்பிவரை விண்டிடென வெம்பழி புகன்றிடினு
நட்புமிக வைப்பேனெனாக்
கொந்தலர் கரம்பொர விளம்பரு ளிளங்குமர
கொட்டியருள் சப்பாணியே
கும்பமுதி துங்கர்துதி கம்பைவதி யெங்கள்பதி
கொட்டியருள் சப்பாணியே.
39வேறு✓
கங்கா தரசிவ வென்றே பலகலை
கற்றவர் சொற்றாரேல்
கஞ்சா னனமமு தஞ்சேர் நகையின
கத்திடர் பட்டேயோர்
பங்கா ருமையுறி லெங்கோ னொடியது
பற்றுறு விப்பானேர்
பஞ்சா ரடியின் வணங்கா முனமமை
பக்கமி குத்தாய்தா
னங்கா சரவணை யுஞ்சீ ரிதுவென
வற்புட னுற்றோரீ
ரந்தா மரைக ளுடன்றார் கடலை
யளித்திரெ னொப்பாநீள்
கொங்கார் கரமலர் கொண்டே குருபர
கொட்டுக சப்பாணி
கும்பா ரியன்மகிழ் கம்பா புரகுக
கொட்டுக சப்பாணி.
40✓
வன்றா ரகனை யவன்சார் மலையை
வடித்த புலத்தோனே
மங்கா தெதிர்புகு சிங்கா னன்னை
மடித்த வலத்தோனே
யன்றார் கலியிடை வந்து ரழிய
வடர்த்த சலத்தோனே
யண்டா தியனை மகிழ்ந்தே சுரரொ
டளித்த நலத்தோனே
துன்றா ரணநெறி நின்றாய் குநர்தம
சுத்த குலத்தோனே
தொண்டாய் வருமவ ரன்பாய் மருவு
சுவர்க்க தலத்தோனே
குன்றா டறுமுக வென்றார் தமதருள்
கொட்டுக சப்பாணி
கும்பா ரியன்மகிழ் கம்பா புரகுக
கொட்டுக சப்பாணி.