முருகன் App
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
முத்தப்பருவம்7 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்

முத்தப்பருவம்

41✓
அடாதன புரிந்தவ சுரக்குழுவை வாரிமுன
மயில்வேற் கருத்து மழகற்
கருளினங் குஞ்சரியை மற்றுமென் சீதன
மளிப்பதென் றோர்ந்து மகவான்
கொடாநின்ற நிதிகாம தேனுசிந் தாமணி
குளிர்ந்த கற்பக மேகமுங்
கூடிவள னுதவவயி ராவதமோர் நதியிற்
குலாவுகென வுதவு நாட்டின்
விடாமகிழ்வி னுழவர்கள் படாமுலை யுழத்தியர்
விருப்பின் முட்கோ லெடாமன்
மேவியேர் பூட்டியவர் மென்றோளை வெல்லவயல்
விளைசெங் கரும்பொ டித்துக்
கடாமுதுகின் முத்துறச் செய்யுழுங் கம்பைவேள்
கனிவாயின் முத்த மருளே
கச்சியே கம்பர்தரு சச்சிதா னந்தகுரு
கனிவாயின் முத்த மருளே.
42✓
ஈராமை தாங்கமே லீரரவி ருப்பமிசை
யிருமந் தரங்க ளோங்க
விணையிலா விருகடலி ருந்துமிசை யோரமுத
மேற்கு மெளியேன் களிக்கத்
தாராமை யென்கொலோ தையனல் லாயுனைத்
தஞ்ச டைந்தே னென்னநற்
சதிர்பேசி யொத்தமன திற்கூடு கணவனென்
றனைவிடுத் தேகி யின்னும்
வாராமை யான்வந்து சேராமை யான்மனம்
வருந்துவன் வருந்தா மைநீ
மணவாள னுக்கோதி வருகென்னு முன்னோதி
வருககச் சொல்லின் மகிழ்கூர்
காராமை யோதியிற் பலர்குலவு கம்பைவேள்
கனிவாயின் முத்த மருளே
கச்சியே கம்பர்தரு சச்சிதா னந்தகுரு
கனிவாயின் முத்த மருளே.
43✓
தெளிகொண்ட சரியையுங் கிரியையுமி யோகமுந்
தேர்ந்துமேன் ஞான மரபாற்
சேராது தீமைபுரி யாராயி னுஞ்சரி
சிரத்தையொடு சிறிது நேர
மொளிகொண்ட கைலாய கிரிமேய வரநேய
வுமைசேய கார்த்தி கேய
வோஞ்சரவ ணோற்பவா வென்றருண கிரிநாத
னோதுபுக ழோது வாரே
லளிகொண்ட வாடவர்கள் கற்பினுயர் மாதருட
னன்பினொடு மவரை யண்மி
யார்ந்துபணி விடைபுரிந் துணவாதி நல்கியவ
ரருள்பெற்று மகவா திசீர்க்
களிகொண்ட மனையறம் பேணிவாழ் கம்பைவேள்
கனிவாயின் முத்த மருளே
கச்சியே கம்பர்தரு சச்சிதா னந்தகுரு
கனிவாயின் முத்த மருளே.
44வேறு✓
வயங்கும் பொன்னார் சடைப்பெருமான்
வலக்க ணாகிப் பகற்கதிராய்
வருபாற் கரனுக் கினியனென
வளரும் பெருமை யுரைக்ககிலேன்
றயங்குந் திரைநீர்ப் பூக்களுக்குத்
தனிவேந் தாகி முத்துயிர்க்குந்
தன்மை யுடையே னெனக்கொருநீ
சரியன் றெனுந்தா மரைக்குடைந்து
மயங்குங் குமுத மதியுடன்போய்
வருந்தித் தவஞ்செய் துன்னருளான்
மகிழ்வுற் றடைந்த பெருவாழ்வின்
மாண்பி தென்றே யடியர்கண்கள்
முயங்கும் வதனச் செவ்வாயின்
முத்தந் தருக முத்தமே
முத்தர் பரவுங் கம்பைவளர்
முத்தே முத்தந் தருகவே.
✓
போந்து காரைக் காற்கனிக்குப்
புதுமாங் கனியொ ரிரண்டளித்த
புனித னால்வாய்த் தமையனுக்குப்
புசிக்க வொருமாங் கனிகொடுத்து
மாந்து கென்று தனக்கியாதும்
வழங்கா மையினக் கனிமரத்தை
மாய்ப்பான் போலச் சூர்மாவை
மாய்க்க மகிழ்ந்து கைம்மாறாய்க்
காந்து குலிசப் பாணிதன
கற்ப தருவிற் கனிந் தவத்தில்
கனியொன் றளிப்ப மிசைந்துபினுங்
களவிற் புனமாக் கனியைவௌவி
45✓
மோந்து சுவைத்த செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முத்தர் பரவுங் கம்பைவளர்
முத்தே முத்தந் தருகவே. 45
46✓
தில்லை யரும்புஞ் சிற்சபையிற்
றிருக்குத் தரும்புந் திருத்தாளை
சிவகா மித்தா யிருவோருஞ்
சிந்தை மகிழு மிருதலனாக்
குல்லை யரும்பும் புயமாமக்
கொண்ட லமரு மொருநிலனாக்
கோதை மாரு மாடவருங்
கூட வளைந்து நறையரும்பும்
வில்லை யரும்பு முவகையிற்கொள்
வேண்மைத் துனனார் படைக்கலனா
விரும்பத் தினைப்பூம் புனத்தெயினர்
விரும்பி வளர்த்த கொடிக்குமுத
முல்லை யரும்ப வரும்புநின்வாய்
முத்தந் தருக முத்தமே
முத்தர் பரவுங் கம்பைவளர்
முத்தே முத்தந் தருகவே. 46
47✓
ஈனம் பழுத்த வைம்பாசத்
திடராற் றிடராப் பவக்கடல்வீழ்ந்
தேறுந் துறையொன் றறியாதே
யிச்சை யலையா னெற்றுண்டே
யூனம் பழுத்த வெழுவகையா
முருவுற் றுழலு மவர்நிற்ப
வுருவு மருவு முருவருவு
மோரொன் பானுங் கடந்தப்பான்
ஞானம் பழுத்த திருவாளர்
நானீ யென்னா துணர்ந்துவந்த
நயமாய் நிறைந்த பரமசிவ
நம்ப னார்தந் திருச்செவியின்
மோனம் பழுத்த செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முத்தர் பரவுங் கம்பைவளர்
முத்தே முத்தந் தருகவே. 47
48✓
அம்மை மடியி னமருநினை
யமலக் கமலத் தணங்குவந்தே
யாசை மருக நின்மூறற்
காசை யுடையே னருளுகெனச்
செம்மை நிறத்துத் திருமாமி
செய்வ னவ்வா றெனக்கென்னை
திரும்பக் கைம்மா றளிப்பதுநீ
செப்பு கெனநின் றிருமார்பிற்
கொம்மை முலையின் றெழுங்கவணை
குறப்பெ ணளிப்ப னெனக்கள்ளக்
குறவற் பிடித்த குறத்திகொலோ
கோக னகையோ வெனக்கைதட்டி
மும்மை யுலகும் வெளுக்கநகை
முத்தந் தருக முத்தமே
முத்தர் பரவுங் கம்பைவளர்
முத்தே முத்தந் தருகவே. 48
49வேறு✓
அண்ட ரண்ட முந்து லங்க
வவிர்ம குடசி ரத்தனே
யங்க தங்க டங்கி டங்கொ
ளமல விருப தத்தனே
யெண்டி கந்த மும்பி றங்க
விசைப னிருபு யத்தனே
யின்பு னம்பு ரந்த நங்கை
யிலக வணையு ரத்தனே
கண்டு கொண்ட தொண்ட ரன்பு
கமழ வளர்க கத்தனே
கந்த வண்க டம்பி னென்சொல்
கருது கருணை யத்தனே
முண்ட கன்ப ணிந்து கெஞ்சு
முதல்வ தருக முத்தமே
முந்து கம்பை வந்து கந்த
முருக தருக முத்தமே. 49
50✓
வன்பு லன்க ளைந்தெ றிந்து
வனனின் மருவி நித்தமே
மண்டு மஞ்சி னொன்றி நின்று
மதியி னமுது துய்த்துமே
லென்பு டம்பு கொண்டி ருந்த
விணையி லவரு மெட்டொணா
திங்கு மங்கு மெங்கு மொன்ற
தெனுமோர் சொருப வத்துவே
நன்பு னங்கொ ணங்கை கொங்கை
நயன வயிலை நத்தியே
நம்பு மன்பு கொண்ட ணைந்து
நலனை யுதவு நித்தனே
முன்பு தொண்டர் கண்டு கொண்ட
முதல்வ தருக முத்தமே
முந்து கம்பை வந்து கந்த
முருக தருக முத்தமே. 50