கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
வருகைப்பருவம்8 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்
வருகைப்பருவம்
51✓
அம்பொன்மணி நூபுரக் கிண்கிணி யரிக்குர
லடிக்கமல வண்டி னார்ப்ப
வரையிலணி மணிகிங்கி ணெணுமோசை யுலகுயிர்க
ளஞ்செவிக் கமுதம் வார்ப்பச்
செம்பொன்மலை யருவியின் முத்தார வணிமாலை
திகழ்சன்ன வீர மிளிரச்
செவிமகர குண்டலம் புயகிரி யுதித்தவா
தித்தமண் டலம்வி ளக்கப்
பைம்பொன்மலர் வதனச்செ வாம்பறகு குழவியிற்
பான்முல்லை நிலவெ றிப்பப்
பட்டமுஞ் சுழியச் சுட்டியுந் திலதமும்
பன்னிருகண் மலரு மொளிரக்
கம்பன்மடி காமாட்சி யம்மைமடி யிற்குலவு
கந்த நாயகன் வருகவே
கந்தமலர் நந்தவன சுந்தர மிகுந்தகன
கம்பைவாழ் குகன்வ ருகவே. 51
52✓
பனிமா மலைக்கரசு தந்தவுமை யம்மையும்
பரமனும் விரும்பி நோக்கிப்
பரிவின்மக் காள்வருக வென்றலும் விகடகண
பதிபெரிய னானா தலா
னனியாசை கொண்டுசெல் வன்செல்வன் முன்னென
நடக்கவண் ணாலு னதுசொன்
னன்றுநீ பெரியன்வத னத்தினோ கையினோ
நயனத்தி னோவா யினோ
முனியாது கூறுகென வாறுமுக வயதினே
மொழிவதென் னெனவ யிற்று
முக்கியம் பெரியனுன் றந்தைக்கு முபதேச
மொழிராய குருயா ரெனாக்
கனிவா யதுக்கிழு வருமகிழ விளநகைசெய்
கந்த நாயகன் வருகவே
கந்தமலர் நந்தவன சுந்தர மிகுந்தகன
கம்பைவாழ் குகன்வ ருகவே. 52
53✓
அங்கைமிசை வருகென்ன மலைமாது மலைமாது
மன்புடன ழைக்க வழையா
தார்வமொடு நோக்குட னிருக்குமை யன்கரத்
தண்மியிள நகைசெய் நின்னை
யெங்கைமேல் வந்துமடி மேற்குலவு மறிவுள்ள
வேந்தலிவ் வன்னை மார்க
ளிருவரினி னக்காசை யார்மீது கூறுகென
வெம்பிரான் யான்சொல் வதென்
சங்கையில் லாதறன் மாதாவின் மேலெனத்
தாய்மாரும் யான்யா னெனச்
சமர்செய விராறுகண் பன்னிரா யிரமெனத்
தழைவுறக் கண்டு களிகூர்
கங்கைமக ளம்பிகைம கன்பரமன் மகனெங்கள்
கந்த நாயகன் வருகவே
கந்தமலர் நந்தவன சுந்தரமி குந்தகன
கம்பைவாழ் குகன்வ ருகவே. 53
54✓
அலசலற வுலகையொரு நொடியின்வ லம்வருமவற்
கருள்வனென வெனைய கற்றி
யடிவலஞ் செய்தா னெனப்பெரு வயிற்றனுக்
கன்பின்மாங் கனிய ளித்தி
குலசயில மெட்டுர்ந்து கண்டநா வற்பழங்
கொய்தருந் துவனெ னாமேற்
குதிகொளு நினக்கதுகொ டுங்காஞ்சி ரங்காய்
குமட்டுமெனு மரனை யையா
சிலசமய நின்னாசை மகனேச வருமுனது
இன்னுயிர்வி டுப்ப னென்னாச்
சீக்கிரம் போய்க்களம் பற்றிவிக் கிப்பரன்
றிக்குமுக் காட வம்மை
கலசமாங் கனியமுதி துண்கென விடுத்துவரு
கந்த நாயகன் வருகவே
கந்தமலர் நந்தவன சுந்தரமி குந்தகன
கம்பைவாழ் குகன்வ ருகவே. 54
55✓
தண்ணங் கடுக்கையணி யண்ணற்கு வேதத்
தனிப்பொருளு மம்மை யார்க்குச்
சந்தோட முங்கரி முகத்தமைய னார்க்குத்
தடம்புய பராக்கிர மமுநீண்
மண்ணன் றளந்தமாற் காழியும் பிரமற்கு
வையம்ப டைக்கு முறையு
மகவான் றனக்கரசு மிந்திரா ணிக்குநன்
மங்கிலிய முஞ்சு ரர்க்கு
விண்ணகமு முனிவர்க்கு ஞானமும் வள்ளியெனு
மெல்லிக்கு மமரர் யானை
மின்னுக்கு மிருபாலு முருககுரு பரகுமர
வேளென்னு மன்பு ளோர்க்குக்
கண்ணருட் டிருவடியு முறைமையி னளித்திடுங்
கந்தநாய கன்வ ருகவே
கந்தமலர் நந்தவன சுந்தர மிகுந்தகன
கம்பைவாழ் குகன்வ ருகவே. 55
56வேறு✓
கஞ்சத் தவிசிற் திருவன்னார்
கனஞ்சேர் குழற்கூட் டகிற்புகையுங்
கழனி விளையுங் கழைச்சாறு
காய்ச்சும் புகையு மனைதோறு
நெஞ்சத் துவப்பின் விருந்தோம்பி
நிதமுஞ் சுவைச்சோ றடுபுகையு
நிகமா கமத்தின் முறைமறையோர்
நீட்டும் வேள்விப் புகையுமன்பாய்த்
தஞ்சத் தருள்சண் முகப்பெருமான்
சந்நி தானத் தன்பரிடுந்
தகுகுங் குலியப் புகையுமொன்றாய்த்
தழைத்து முகிலாய்ப் பொழிவிதென
மஞ்செப் பொழுதும் பொழிகம்பை
வள்ளால் வருக வருகவே
மதுரைச் சங்கப் புலவர்சிகா
மணியே வருக வருகவே. 56
57✓
தளஞ்சால் வனச முகங்காட்டத்
தண்ணங் குமுதம் வாய்காட்டத்
தரள நிரைகண் கைகாட்டத்
தயங்கு நீலங் கண்காட்ட
வளஞ்சால் வள்ளை செவிகாட்ட
வப்பு நிலைநன் கவுள்காட்ட
வணையுங் குமிழி முலைகாட்ட
வவிரும் பாசி குழல்காட்ட
வுளஞ்சா லன்பி னீராட
வுற்ற மடவார் தங்கணவர்க்
குயிரன் னார்வா முறையுளென
வூடி யுடன்றா லெனத்திளைக்கும்
வளஞ்சால் குளஞ்சால் புனற்கம்பை
வள்ளால் வருக வருகவே
மதுரைச் சங்கப் புலவர்சிகா
மணியே வருக வருகவே. 57
58✓
முருகா வென்றோர் காற்சொலுமுன்
முக்கா லெனத்தன் னிருகாலின்
முகிண்மென் முலையாள் வள்ளியம்மை
மோகத் தினும்வே கத்தவர்க
ளருகா வடைந்து வேண்டியவா
வருளிச் சேவன் மயிலயிலு
மவரைக் காக்க வெளிநிறுவி
யகத்தா மறைபும் புனமாகப்
பெருகார் வமதாம் வள்ளியுடன்
பிரியாப் பிரிய முடனுறையும்
பெருஞ்சீர்க் கருணைத் திறன்றெரிந்த
பெரியோ ரன்பா யுருகியரி
மருகா முருகா வெனுங்கம்பை
வள்ளால் வருக வருகவே
மதுரைச் சங்கப் புலவர்சிகா
மணியே வருக வருகவே. 58
59வேறு✓
அலகி லுலக முழுது மொளிர
வன்பி னுதய பருதியே
யரனு மரியு மயனு மகிழு
மந்த ணமுத மதியமே
யிலகு மிமய குமரி யுதவு
மின்ப நிறையு மதலையே
யினிய துதிசெ யடியர் நிதமு
மெங்கு மறியு முருவமே
வலிய வெனது கொடிய மனதின்
வந்து நிலவு சொருபமே
வனனின் மருவு குறவர் தமது
வண்டு நுகரு நறவமே
கலவ மயில்க ளகவு பொழில்கொள்
கம்பை முருக வருகவே
கருணை வடிவி னடன மிடுமோர்
கந்தன் வருக வருகவே. 59
60✓
அதுலன் வருக வபயன் வருக
வண்ட ரதிபன் வருகவே
யமலன் வருக குமரன் வருக
வன்ப ரிறைவன் வருகவே
சதுரன் வருக தருணன் வருக
சம்பு குரவன் வருகவே
சரசன் வருக சுகுணன் வருக
சண்ட மயிலன் வருகவே
புதியன் வருக பழையன் வருக
பொங்கு மமுதன் வருகவே
புனிதன் வருக புலவன் வருக
புந்தி முதல்வன் வருகவே
கதியை யருண னகர சிகர
கம்பை முருகன் வருகவே
கருணை வடிவி னடன மிடுமோர்
கந்தன் வருக வருகவே. 60