முருகன் App
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
செங்கீரைப்பருவம்4 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்

செங்கீரைப்பருவம்

11✓
பொங்கார வாரக்க டற்கடுவுண் மூர்த்திமெய்ப்
புளகார வணைபி ராட்டி
புனிதநீ ராட்டிவெண் ணீற்றினொடு நெற்றியிற்
பொட்டிட்டு முச்சி முடிமேற்
றங்கார வன்சுட்டி நாற்றிவிழி கட்குமை
தரித்தொளிர் செவிக்க ரதனத்
தங்கக் குதம்பைசாத் திப்பொன்னி னரைஞாண்
டயங்குறப் பூட்டி மதுரக்
கொங்கார மலரடிக் காரணப் பரிபுரங்
கூட்டியா லத்தி சுற்றிக்
கொங்கையமு தூட்டிநற் றொட்டிலிட் டாட்டவிசை
கூர்ந்துகேட் டமர்கு ழந்தாய்
தெங்கார வளர்சோலை சூழ்கம்பை வாழ்குமர
செங்கீரை யாடி யருளே
சிங்கார வள்ளிக் கலங்கார மணவாள
செங்கீரை யாடி யருளே.
12✓
வசையுற்ற வசுரர்தலை கீழாக வானாட்டு
வாழ்சுரர் கடலெ டுப்ப
மதலையங் குதலைமொழி வேட்டெம்பிராட்டியிம
மலையாட்டி தலையாட் டிமிக்
கசையுற்ற கங்களிக் கத்தலை யெடுத்துமோ
தலையுற்ற கடலு டுத்த
வவனிமட மங்கைகும் மலரேந்த விருகைமல
ரமையவூன் றித்த முடிமே
னசையுற்ற வன்பாளர் கரமலர் குவித்துமுக
நளினமலர் வுற்று நோக்க
நவில்வேத முடிமேன டிக்குமடி களினொன்றை
நன்குற முடக்கி யொன்றைத்
திசையுற்ற தவமல்க நீட்டிவளர் கம்பைவேள்
செங்கீரை யாடி யருளே
சிங்கார வள்ளிக் கலங்கார மணவாள
செங்கீரை யாடி யருளே.
13✓
நன்காஞ்சி வாகமெ யன்பாய் வினாவியுமை
நவிலரிய கயிலை நீங்கி
நண்ணிமறை மாவடி முளைத்தருள் பரஞ்சோதி
நாதனைச் சைக தத்தான்
முன்காஞ்சி யங்கம்பை யாற்றிடை யமைத்துரை
முறைப்படி புரிந்த பூசை
முடியுமுன் கம்பேச னேவவந் நதிமாது
முடுகிவர லோர்ந்தச் சுறாப்
பொன்காஞ் சியலையுற வெழுந்தேல வார்குழலி
பூங்கரத் தால ணைக்கப்
பூண்குருகு மென்முலைக் குருகுகம் பேசர்மேற்
புலவியிற் கம்பைய னைசேர்
தென்காஞ்சி யீதெனக் கம்பையமர் குமரவேள்
செங்கீரை யாடி யருளே
சிங்கார வள்ளிக் கலங்கார மணவாள
செங்கீரை யாடி யருளே.
14✓
பார்கொண்ட மன்பதைகள் பத்தியொடு மூழ்குவவர்
பவமெலாம் பாற்று கங்கை
படியுற்று மாசொரீஇப் பரிசுத்தை யாயுறப்
பாலிக்கு மான்மி யத்தாற்
பேர்கொண்ட கச்சிவளர் கம்பைகம் பண்பாற்
பிணக்குற்றி விடைய டைந்த
பெற்றியது கண்டவர நதியிவணொர் நதியெனப்
பிரியாது வைகின ளெனா
வேர்கொண்ட விசுவேச னருள்விசா லாட்சியு
மிசைந்தீண்டை மருவினர் கொலா
மென்றரியு மயனுமா கண்டலனு மண்டர்களு
மியல்வரரு நரரு நண்ணுஞ்
சீர்கொண்ட காசியாங் கம்பைவளர் குமரவேள்
செங்கீரை யாடி யருளே
சிங்கார வள்ளிக் கலங்கார மணவாள
செங்கீரை யாடி யருளே.
15✓
உண்மையறி வானந்த வுருவாய சிவபிரா
னுமையம்மை யிருவ ருந்தா
மோரைந்து கத்தரா யைஞ்சத்தி யாய்விரிந்
துலகெலா மைந்தொழில் செயும்
வண்மையான் வேதாக மாதிய புராணங்கள்
வாய்மையி னெடுத்து ரைக்கு
மற்றந்த மாதேவ தேவிகண் மைந்தனாய்
மத்தியி னமர்ந்தெ மக்கே
யண்மையா யானந்த மயமா யிரண்டற
வகண்டமாம் வடிவி னோங்கு
மப்பனீ யம்மைநீ வேறல்லை யென்பதை
யறிந்துயா முய்யும் வண்ணந்
திண்மையாய்க் காட்டிவண் கம்பைவளர் குமரவேள்
செங்கீரை யாடி யருளே
சிங்கார வள்ளிக் கலங்கார மணவாள
செங்கீரை யாடி யருளே.
16வேறு✓
மஞ்ஞையை யஞ்சர வந்தந் தன்ன
மணிச்சுட் டியதாட
வதனச ரோருக மார்கதிர் நேர்குழை
வண்கா தினிலாட
விஞ்சிய நகையொளி நிகர்முத் தாரம்
வியன்மார் பினிலாட
விரியுல கங்குடி கொண்டிடு பண்டி
விளங்கியி சைந்தாட
வெஞ்சலின் மேருவ ளைந்தம ணிப்பணி
யெனவரை வடமாட
வெய்த்தய னுதையுண் டந்தன் கிண்கிணி
யிருசர ணத்தாட
வஞ்சலி செய்தன் பாளர்க ளாடிட
வாடுக செங்கீரை
வம்பரர் சூழ்சுக கம்பையுள் வாழ்குக
னாடுக செங்கீரை.
17✓
செய்யபொன் மேனி விபாகர னொளியிற்
செறிவல் லிருளறவே
திகழ்முக மதிபொழி திருவுமு தால்வெந்
தீவினை விடமறவே
வெய்யவர் கெடவளர் புயமலை யாலிம்
மேதினி யெழில்பெறவே
மிளிர்செவ் வாயுற வினதி யாலருள்
விளைவுகண் மிகவுறவே
துய்யக டைக்கணி னோக்கான் மன்னுயிர்
தொல்பசி தான்றெறவே
சுகநிலை தந்திடு கந்த மனோகர
தொண்டர்க டம்முறவே
யையம னோகர வற்புத வறுமுக
னாடுக செங்கீரை
யம்பரர் சூழ்சுக கம்பையுள் வாழ்குக
னாடுக செங்கீரை.
18✓
இன்பி னெடுத்து வளர்த்த விளம்பிடி
யென்னரு மந்தமகட்
கேற்ற மணாள னிருந்திரு நாட்டி
னிருந்திடு மன்னுயிர்காள்
வன்பிற வித்துயர் தீர்க்கு மருந்தவன்
வண்பத ரேணுவெனா
வாய்மை யறிந்து வணங்குதிர் நும்மிடை
வண்மை புரிந்திடுவா
னன்புல னாடுக வென்ற யிராவதி
நதியென வுற்றதெனா
ஞானியர் மோனியர் சித்தர்கள் பத்தர்க
ணாடொறு மூழ்கவொலித்
தன்பொடு பெருகயி ராவதி நாட்டவ
னாடுக செங்கீரை
யம்பரர் சூழ்சுக கம்பையுள் வாழ்குக
னாடுக செங்கீரை.
19வேறு✓
திண்புய வேடுவர் தந்தவ நங்காய் சென்றேவார்
சிந்துவி னார்புன லுண்டு செறிந்தே யெம்பாலாய்
நண்புயன் மேன்மை யடைந்தது கண்டே நன்றாய்வா
னம்பிய சோமன் முகம்பெற நின்றா னண்பாய்நீ
விண்புன மூடெனை வின்பொ டணைந்தா ளன்பாய்நான்
வந்தனை யேவல் புரிந்திடு கின்றே னென்றேகான்
கண்புனை மானை யணைந்தவ செங்கோ செங்கீரை
கம்பையுண் மேவிய மர்ந்தவ செங்கோ செங்கீரை.
20✓
இந்திரி யாடவி வென்றவர் சென்றே றும்பாரே
யின்புட னாடுற முந்துறு முந்தே முந்தாறே
யந்தர மாதிய வெங்கு மணஞ்சு மும்பூவே
யன்புடை யாருணர் வின்கவை தந்தூ றுந்தேனே
பைந்தொடி தாயுமை சிந்தையெனும்பு வண்டேயோர்
பங்கினன் வீணையி னின்றெழுதண்சேர் பண்சீரே
சந்தத யாபரசுந்தர செங்கோ செங்கீரை
கம்பையுண் மேவிய மர்ந்தவ செங்கோ செங்கீரை.