முருகன் App
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
தாலப்பருவம்5 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்

தாலப்பருவம்

21✓
கருதற் கரிய வல்வி டத்தைக்
களத்தின டக்கு மிறைமாறன்
களிப்பி னளித்த முளைய னத்திற்
காதல் புரிந்தா னவன்கண்வந்தே
நிருதக் கடுவைக் களத்த டக்கிந்
நிமலற் றமிழ்தொவ் வாதென்றே
நீண்மைப் பகட்டு வயிர வல
நிகழேர் பூட்டிப் பயிர்செய்யப்
பொருதக் கயற்க ணரம்பை யரைப்
புலவர் தம்மைப் போகிவிட்டாற்
போலு முழத்தி மாரு ழவர்
புனிதச் சாலி விளைவிக்கு
மருதப் பணைசூழ் கம்பை நகர்
வரதா தாலோ தாலேலோ
வரைவேந் துதவு பரையேந்து
மதலாய் தாலோ தாலேலோ.
22✓
புனிதச் சாலி யதைச்சாறு
பொழியுங் கருப்பஞ் சோலையதைப்
பொலியுங் கதலிச் சோலையதைப்
பூகச் சோலை யதையிளநீ
ரினிதுற் றுயர்தெங் கஞ்சோலை
யெழிலா யதைமாஞ் சோலையுஞ்சூழ்ந்
திசைவே லியதாய் வளர்ந்தோங்கி
யிருங்கற் பகச்சோ லையையண்மி
வனிதைப் பிடியைக் குறக்கொடியை
மருவி யரசா யெந்நிழலின்
வதிந்தான் முருகன் புகழெமக்கோ
மற்று முமக்கோ வெனவசையு
மனிதச் சுவர்க்க மெனுங்கம்பை
வரதா தாலோ தாலேலோ
வரைவேந் துதவு பரையேந்து
மதலாய் தாலோ தாலேலோ.
23✓
துய்ய பளிக்கு மேடையிடைத்
துலங்கு மணிப்பொற் றம்பமிசைந்
தூக்குந் துவச வெண்படம்போய்ச்
சுவர்க்கத் தலத்தி னுலவல்கண்டே
யுய்ய னமக்கென் வையமதி
யுற்ற தெனவான் மதிமதிகெட்
டோடி மேலைக் கடற்பாய
வுதனை யழைத்தாங் கதுவசையச்
செய்ய சுடரை யந்நாளிற்
றேடு மெகின மெனமறுநாட்
டிரும்பிச் சீலை யெனநாணுந்
திங்கண் மருவி யுடற்பொதிந்த
மைய லகல மகிழ்கம்பை
வரதா தாலோ தாலேலோ
வரைவேந் துதவு பரையேந்து
மதலாய் தாலோ தாலேலோ.
24✓
சுகந்த மலர்ச்சேக் கையின்முயங்கத்
துணையோ டமர்ந்த வரசவன்னத்
தோற்ற மனையான் மற்றொருத்தி
சுகத்தை நினைத்தா னெனவனையா
ளுகந்த துரைத்தி யெனவொர்தன
முறச்சிந் தித்தே னெனவுளதிங்
குணர்க வெனக்காட் டெனச்சுவர்க்க
மோர்தி யெனவம் மகவானும்
புகுந்த துளதோ வெனநீயே
போகி யெனச்சான் றியாதெனப்பின்
பொருந்துங் கண்க ளெனநகைத்துப்
பூவை வண்டாய்ப் புணர்ந்தனன்போன்
மகிழ்ந்து பலர்வாழ் மனைக்கம்பை
வரதா தாலோ தாலேலோ
வரைவேந் துதவு பரையேந்து
மதலாய் தாலோ தாலேலோ.
25✓
மயங்கு மிரவா மடமாதை
மருட்டிப் பகலாங் காரிகையை
மணந்து நளின மகப்பூத்து
மகிழ்செஞ் சுடரோன் வான்வழியி
னியங்கு முருளை யொன்றுடைத்தே
ரிவுளி நிறத்தை யுறநோக்கி
யிமையோர் வேந்து வெண்புரவி
யீதே தென்னப் பாகனுந்தான்
றியங்கு நீயார் தினகரனோ
திகழு மதியோ செப்புகெனச்
சிந்தை மருள வெண்சாந்து
தீற்றிக் குளிர்மை செயுமாடம்
வயங்கும் வளஞ்சேர் கம்பைநகர்
வரதா தாலோ தாலேலோ
வரைவேந் துதவு பரையேந்து
மதலாய் தாலோ தாலேலோ.
26வேறு✓
பெத்த மகன்ற வருக்கரன் வைத்த
பெருங்கரு ணைத்திருவே
பேருல குய்ந்திட வம்மை வளர்த்த
பெருந்தரு மத்துருவே
கைத்தல மேல்வளை வைத்திடு மாமடி
கட்கொர்க வுத்துவமே
கஞ்சம லர்த்திரு வாகிய மாமி
களித்திழை மெய்த்தவமே
யத்திசை மாமுக னைச்சிறை வைத்துல
கருளிய விதிநெறியே
யைங்கர கரியின் பின்வரு மீரா
றங்கர கோளரியே
சத்துவ நிதியே கம்பைக் கரசே
தாலோ தாலேலோ
சம்பக நீபக லாரசு கந்தா
தாலோ தாலேலோ.
27✓
இமய மடக்கொடி செய்தவ மாற்றுதி
யென்றெனை நன்றேவி
யிலகி யவட்கரு ளிச்சுவ டுற்றன
னேகம் பேசனெனத்
தமியள் புலந்தலை வாரியின் வீழ்ந்திடு
தன்மை யறிந்தனையே
சார்குவ னின்னா தெனப்புகு சரவண
சாமியை யேந்தியடைந்
தமையவொர் நன்னக ராகி யமர்த்தி
யடுத்தவர் வல்வினைதீர்த்
தார்ந்தனள் கம்பை யெனக்கா மாட்சியு
மையனு மகிழ்பதியாந்
தமிழொலி குலவிய கம்பைக் கரசே
தாலோ தாலேலோ
சம்பக நீபக லாரசு கந்தா
தாலோ தாலேலோ.
28✓
ஆதியு மத்தியு மந்தமு மில்லதொ
ரற்புதப் பரவெளியே
யன்பர்கள் கண்டு மகிழ்ந்திட நாடக
மாடிய சுகவொளியே
வேதமொ டாகம மார்க்கமி தென்ன
விளம்புறு பைங்கிளியே
விழைசுக வாழ்வு நிலாதென விட்டவர்
விட்டுவி டாத்தெளியே
யோது மிரண்டற வொன்றுபு நின்றவ
ருற்றிட வருளளியே
யொப்பறு பத்தி யெனப்படு மெய்ப்பொரு
ளுய்த்திடு பொற்றளியே
தாதவிழ் நந்தன கம்பைக் கரசே
தாலோ தாலேலோ
சம்பக நீபக லாரசு கந்தா
தாலோ தாலேலோ.
29வேறு✓
பூதாதி தந்த வபூதா போதா தாலேலோ
போதா ரயன்றுதி போதா மேதா தாலேலோ
தீதான விண்டவ தீதா வீதா தாலேலோ
சீதா மகிழ்ந்துறை சீதா நீதா தாலேலோ
தாதார் கடம்பணி தாதா கீதா தாலேலோ
சாதா பலந்தெறு சாதா வேதா தாலேலோ
வாதாளர் கண்டவி வாதா சூதா தாலேலோ
மாதா னகம்பையுண் மாதா நாதா
தாலேலோ.
30வேறு✓
சூலாயு தன்றரு பாலா தாலோ தாலேலோ
தோலாத செந்தமிழ் நூலா தாலோ தாலேலோ
மாலார ணன்றுதி காலா தாலோ தாலேலோ
வாலாயர் தொண்டனு கூலா தாலோ தாலேலோ
சீலா கரம்பெறு கோலா தாலோ தாலேலோ
சேலார் கணங்கொடி மாலா தாலோ தாலேலோ
வேலாயு தங்கர லீலா தாலோ தாலேலோ
மேலா னகம்பையுண் மூலா தாலோ
தாலேலோ.