கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
சிறுபறைப்பருவம்11 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்
சிறுபறைப்பருவம்
81✓
பெருநா டவிர்ந்திடா தான்றமெய்ப் புண்ணியம்
பெட்பினொடு செய்யி னுந்தாம்
பேணுமுடல் விட்டுத்த னிப்புகந் தின்புறும்
பேறுதரு பெருமை பெறுமைந்
தருநாடு போலாது சூற்குழவி கைக்குழவி
தனையர் மனைவியர் நட்பினோர்
தம்மொடுந் தங்களைப் பொந்தியொடு கொண்டுதிரி
சங்குகண் டாவல் கொள்ள
வருநாடொ றுங்கலன் விமானத்தி னேற்றியவ்
வாழி வாயொலி முழங்க
வருவித்து வரிசைதந் தோங்குபொன் னாடென்ன
வளமிக்க வயிரா வதித்
திருநாட வருள்கூட மகிழ்நீட வற்புதச்
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன கருக்கினிய கம்பைநக ருக்கிறைவ
சிறுபறை முழக்கி யருளே. 81
82✓
காவெலாம் பூவெலாம் வண்டெலாங் கள்ளுண்டு
கானஞ்செய் கனமுழக்குங்
கனியெலாங் கிளியெலாந் தின்றுநற் பேச்செலாங்
கழறிமகிழ் பெருமுழக்குந்
தீவெலா மணம்வீசு நளினமலர் தடமெலாஞ்
செறியும்வெள் வளைமுழக்குஞ்
செய்யெலாம் பயிரெலாஞ் செய்யுழவ ரேரோட்டு
சீர்பாட்டி னிசைமுழக்கு
மாவெலாங் குடிகொண்ட மனையெலாங் கல்யாண
வாழ்த்துவாச் சியமுழக்கும்
வாய்ந்தவ யிராவதத் திருநாட வென்றன்பர்
வாயெலாந் துதிமுழக்குந்
தேவெலாம் புகழ்முழக் குஞ்செவியெ லாங்கொண்டு
சிறுபறை முழக்கி யருளே
செம்பொனக ருக்கினிய கம்பைநக ருக்கிறைவ
சிறுபறை முழக்கி யருளே. 82
83✓
நீர்பூத்த மகுடகோ டீரதாண் டவமூர்த்தி
நீடமரு கத்தினொலியு
நீனிறக் கொண்டல்வண் ணக்கண்ணன் மத்தள
நிரப்பொலியு நளினாசனத்
தேர்பூத்த நான்முகக் கிழவனொண் டாளத்தி
னெழுமொலியும் வீரவாண
னீராயி ரங்கையிற் குடமுழ முழக்கொலியு
மிணையிலாப் பானுகம்பன்
பேர்பூத்த சங்கொலியு மிருவர்நல் யாழிற்
பிறங்கொலியு மேனையொலியும்
பிரணவா சாரியின் சிறுபறை யினொலியிற்
பிறந்தபர மாணுவொலியேற்
சீர்பூத்த பேரொலிக் கவதியுண் டோமெலச்
சிறுபறை முழக்கி யருளே
செம்பொனக ருக்கினிய கம்பைநக ருக்கிறைவ
சிறுபறை முழக்கி யருளே. 83
84✓
நுந்தாதை யம்பலத் தாடுமா னந்தநட
நோக்காது நோக்கி மகிழ்சூர்
நுண்ணிடைப் பெருமுலைப் பெருமாட்டி நஞ்சேய்
நொடிக்கும் பறைக்கி ணங்க
வந்தா ளெடுத்தாட வருமோ நுமக்கென்ன
வன்பினுரை யாட நகைசெய்
தாரியன் கல்விசீ டன்றெரிவ னறிதியென
வரனாட வயனு மாலுந்
தந்தாள மத்தளந் தடுமாறி நிற்கநீர்
சண்முகக் குருவை யண்மித்
தான்கற்று வருதிரென வந்துன தருட்சந்நி
தானத்தி னேத்துகின்றார்
செந்தா மரைச்சிறு கரங்கொடு பயப்பயச்
சிறுபறை முழக்கி. யருளே
செம்பொனக ருக்கினிய கம்பைநக ருக்கிறைவ
சிறுபறை முழக்கி யருளே. 84
85✓
அத்தனீ யெமதருமை யன்னைநீ தெய்வநீ
யாபத் தகற்றி யன்பா
யாதரிக் குங்கருணை வள்ளனீ மாரனீ
யாண்மையுள விசய னீயென்
றெத்தனை விதஞ்சொலியு லோபரைத் தண்டமி
ழியற்றினு மிரக்கஞ்செயா
ரிலக்கண விலக்கியக் கற்பனைக் கவியா
லிறைஞ்சியெனை யேத்தவேண்டாம்
பித்தனொடு நீலியும் பெறுதகப் பன்சாமி
பெருவயிற் றான்றம்பியப்
பேய்ச்சிமுலை யுண்டகள் வன்மருகன் வேடுவப்
பெண்மணவ னென்றேசினுஞ்
சித்தமகி ழருள்செய்து மென்றேமு ழக்கல்போற்
சிறுபறை முழக்கி யருளே
செம்பொனிக ருக்கினிய கம்பைநக ருக்கிறைவ
சிறுபறை முழக்கி யருளே. 85
86வேறு✓
போதி லயன்சம வேதியர் நீதி
பொருந்துநல் வேந்தர்பெரும்
புண்ணியம் வளரப் பொருள்வளர் வாணிபர்
பூமிதிருத் துபுவென்
மாதிர மகிழ்வுற நெற்பயிர் முதல
வளர்ப்பவ ரேனையரு
மன்னி வளர்ந்திடு சீரயி ராவதி
வளநா டுடையரசே
வாதி லெதிர்ந்திடு மைம்புல வேடரை
வாட்டுமெய்ஞ் ஞானமெனும்
வாளுடை யோகியர் காதின் மடுக்குறும்
வண்டச நாதமெனக்
கோதில் குணாகர சோதி தயாபர
கொட்டுக சிறுபறையே
கோபுர முயர்கம் பாபுர குமரன்
கொட்டுக சிறுபறையே. 86
87✓
பஞ்சர வஞ்சுக நாடொறு மன்பர்கள்
பாடு திருப்புகழைப்
பழகிய வண்ணம் பாட வதற்குப்
பமரம திசைகூட்ட
வஞ்சர ளப்பொழி லமர்முகின் முழவ
மதிர்ந்திட மயிலாட
வழகித ழித்தலை யசையாப் பொன்சொரி
யயிரா வதிநாடா
வெஞ்சர வவுணரை வென்றொரு குஞ்சர
மெல்லி மணங்கொடுபோய்
மிக்குள வந்தர துந்துபி வினவியவ்
விண்ணகர் வீதியின்வெண்
குஞ்சர மிவருங் கடவுட் கோளரி
கொட்டுக சிறுபறையே
கோபுர முயர்கம் பாபுர குமரன்
கொட்டுக சிறுபறையே. 87
88✓
மண்டல நரமங் கையர்நீ ரெங்களை
மானுவி ரோவென்னா
வான்மட வார்சொல வானர மங்கையிர்
மற்றுமை யொப்பலமென்
றண்ட மடந்தையர் நாணுற நகைசெய்
தரிவைய ரமரறிவந்
தரமிய மாடம் பொன்னாட் டுயருந
லயிராவ திநாடா
பண்டரு கிளவி யுழத்திகண் மோகப்
பள்ளர்கள் பண்ணைதொறும்
பன்மலை யொப்பிட நென்மலை குவியப்
பயிரிட மழைபொழியக்
கொண்டன் முழக்கென மயில்க ணடிக்கக்
கொட்டுக சிறுபறையே
கோபுர முயர்கம் பாபுர குமரன்
கொட்டுக சிறுபறையே. 88
89✓
வானே வளியே கனலே புனலே
மண்ணே வளைகடலே
மலையே பொழிலே தருவே மலரே
மதுவே பரிமளமே
யூனே யுனின துடலே யுடலின
துயிரே யுயிருணர்வே
யுணர்வுக் கொளியே யொளியினு ளொளியே
யோங்கிய பூரணமே
தானே தானாய் வளர்தரும் வாழ்வே
சத்தே சிற்சுகமே
சட்சம யங்களு மற்புறு மற்புத
சண்முக வருள்வடிவக்
கோனே நின்னுரு வுலகதி ராமே
கொட்டுக சிறுபறையே
கோபுர முயர்கம் பாபுர குமரன்
கொட்டுக சிறுபறையே. 89
90வேறு✓
செண்டார் முலையுமு துண்டார் கெனுமுமை
செங்கர மலர்மருவே
சிந்தா மணிநிதி யைந்தா ருவுநினை
திப்பிய சுரதருவே
கண்டா தரவொடு தொண்டா யமர்நெறி
கற்றவ ரடைதிருவே
கஞ்சா தனவிதி மஞ்சார் நிறவரி
கட்கொளி தருகுருவே
திண்டா னவரெனும் விண்டார் கெடவரு
செற்றம துளவுருவே
செஞ்சே வடிகொடு செஞ்சே மெனநடி
சிற்பர சிவகுருவே
கொண்டா டுநர்மகிழ் தண்டா யுதகர
கொட்டுக சிறுபறையே
கும்பாய் நலனிறை கம்பா புரகுக
கொட்டுக சிறுபறையே. 90