முருகன் App
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
சிறுதேர்ப்பருவம்12 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்

சிறுதேர்ப்பருவம்

91✓
எட்டிக்கு மொளிவீசும் வச்சிரச் சகடச்சு
மெழினீல கோமே தகத்
திலகுபார் தட்டுவயி டூரியப் போதிகை
யிசைந்த பவளக் கால்களுந்
திட்டிக்கு விந்தையாம் பச்சைக்கொ டுங்கையுந்
திகழ்புட்ப ராக மொட்டும்
செம்மணிக் கலசமுந் தரளவெண் கவிகையுஞ்
செய்யபொற் கொடுச மைத்தே
சிட்டிக்கு மயனுக்கு மரிதான பெரிதான
சித்திர மெலாங்கு யிற்றிச்
சேவலங் கொடியுயர்த் தையநின் பொன்னிரத
சேவைகண் டார்வி னவினார்
செட்டிக் குமாரனுக் கழகெனப் புகழுநீள்
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழெந்தை
சிறுதே ருருட்டி யருளே 91
92✓
மாரதி மணாளனுக் கைம்படை யளித்தகா
மாட்சியென் மகவு சிறுதேர்
மானுதே ரில்லையென வேகம்ப னெனதுதேர்
மானுமென வஃதி வன்தேர்
பாரதிற் பூட்டாழி யிளவலாற் பயநீங்கு
பானுவாம் பரியென் னிலோ
பகர்பொருட் கிடனாய வுமைமொழி யைத்தாங்கு
பரசுரு தியேந டத்துஞ்
சாரதி யிவன்கையிற் குட்டுண்ட கதையையான்
சாற்ற வேண்டுவ தோவெனச்
சங்கர னகைக்கவூர் நகைசெய்யு நிற்கிது
தகுந்ததென வுமையை நோக்கிச்
சீரதிக நின்மகன் றேரென்று பரமன்மகிழ்
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழெந்தை
சிறுதே ருருட்டி யருளே. 92
✓
ஐயநீ சிறுதேரை யிம்மெனவு ருட்டினா
லவனிமா னதிரு முடையா
மலைகடல திர்ந்துமேற் பொங்குமவள் கொங்கையா
மசலங்க ளதிரு மவடன்
றுய்யமண் டபமான வாகாய மதிருந்
துளங்கா ததீப மான
சூரிய னதிர்ந்திடுந் தகழியா மவனெடுஞ்
சோதி யந்தே ரதிருமே
லொய்யெனத் தனியாழி யெழுபுரவி யரவுகயி
றொழியுநிலை விட்ட கன்றே
யோடிநிலை செய்யமுட வலவனென் செய்வன்மன
மோயுநீ யறியா ததோ
93✓
செய்யவண் டாமரைக் கையது வருந்தாது
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
94✓
மருவார் சடைப்பிரான் கயிலாச கிரியென்ன
மாதிமய சயில மென்ன
மாலா லெனக்கமல வல்லிபாற் கடலென்ன
மலரயன் வேத மென்னத்
தருவாணி சங்கமென விந்திரன் வண்பரன்
சயிலமென விந்தி ராணி
தண்கற்ப தருவென்ன மாரனென் கணையெனத்
தக்க ரதியின் புருவென
வொருவாத முனிவர்மக வேதியென வவர்மாத
ரொண்மணித் தீப மென்ன
வுயர்தெய்வ யானைவெள் ளானையென வள்ளிமா
னொளிர்புனத் திதண மென்னத்
திருவாள ரெமதுபெரு வாழ்வென்ன வொளிருநின்
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
95✓
குண்டுகண் வெண்பற் றிரங்குகொங் கைப்பெருங்
குழிவயிற் றாய்ப்பே யழுங்
குட்டியல கையையுதிர வாற்றாட்டி வெம்பிணைக்
குன்றா தனத்தி ருத்தித்
துண்டுபடு தலைகளைக் குடராற் றொடுத்தினிது
சூட்டியவு ணர்க ளுடம்பிற்
றுன்னமுக் காற்றிலக மிட்டுவீழ் கேடகச்
சோரிநீர்த் திட்டி சுற்றி
மண்டுபசி நீங்கநிண வமுதாட்டி யென்செல்வ
மகவுகண் வளர்க வென்னா
வள்ளனின் புகழ்பா டமர்க்களத் திற்றவர்கள்
வரவமுத மலைந் ததூர்
திண்டுவச ரதநிற்க நோக்குசித் தச்சாமி
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
96✓
எங்கண்முக மலரவரு மிறைவகாத் தருள்கவென
விந்திரன் கவரி சாய்ப்ப
விமயோர்க ளாலவட் டம்வீச மதிகதிர்க
ளெழில்செய்வெண் கவிகை தாங்க
வங்கமுக வசுரருயிர் நுங்குமந் தகனன்பி
னருகினுடை வாள்பி டிக்க
வளகைவாழ் தனபதி யடைப்பையேந் திடவருண
னார்ந்துபடி யகமெ டுக்கத்
துங்கமுக மன்சொல்லி மாலயனு மருகுறச்
சோதிதரு தேரூர்ந்து போய்ச்
சுடருதய மலைமீது முதரமா மலையினுந்
துன்னு பூதரை மீட்டுவன்
சிங்கமுக னைச்செற்ற சண்முகச் சரபமே
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
97✓
நாவேழு கொண்டகன லாண்டலைக் கொடியாக
நம்மருந் துய்க்கு முயர்தேர்
நம்பர்தர வூர்ந்திரண் டாயிர வௌம்பூதர்
நவவீரர் துணைவ ரொடுபோய்
மேவேழு கடலெட்டு மலையொன்ப தொண்கண்ட
மிளிர்பதிற் றாசை யுலக
மேலேழு கீழேழு புவனாண்ட முற்றுமமர்
விளையாடி வடிவு காட்டி
மூவேழு பதினாயி ரஞ்சிங்க மாளிபேய்
மூட்டுதேர்ச் சூர பன்மன்
முனையோய்ந்து மாவாக வேலினிரு கூறாக்கி
முன்சேவன் மயிலாய் வரத்
தேவேழு மாரதன போற்றவேற் றூர்ந்தவேள்
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
98✓
தந்தைநண் புளகுபே ரன்றனைய னண்புறத்
தந்தபுட் பகவி ரதமோ
தான்பிழை செயிற்சிறை செயாதருள் கெனாவிதி
சமைத்துதவு பிரம ரதமோ
விந்தையாய் மருகன்வி ளையாடலுக் கிந்திரன்
விடுத்தவொரு தெய்வ ரதமோ
விந்தைமெய்த் தவமிழைத் தறுமுகற் கீந்தினிமை
மேவுநல் வினோத ரதமோ
விந்துசேக ரன்விலாய் வளையாத படிமேரு
வெண்ணியமை கனக ரதமோ
வென்னென்று சொல்லுகே மென்றுநின் றிமையோர்க
ளேத்திநோக் கிக்க ளிக்கச்
சிந்தைமலர் திருவாணை யுலகெலாஞ் செய்குமர
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
99✓
தித்திக்கு மானந்த வெள்ளமே கோதிலாச்
செங்க ரும்பே சீனியே
திகழ்தரும் பாற்கட்டி யேகனிச் சுவையே
தெவிட்டாத வான முதமே
பத்திக்கு வந்தபதி யேகருணை நிதியமே
பரிபூரண சாந்த மதியே
பரமவே கம்பர்கா மாட்சிமகிழ் செல்வமே
பாவாணர் துதி வள்ளலே
முத்திக்கு வித்தே யருந்தவர் தமக்குமெய்ம்
மூலமே தேவ சேனா
மூர்த்தியே குஞ்சரிகு லாவுமலை யேவள்ளி
மோககற் பகதா ருவே
சித்திக்கு மன்பர்குல தெய்வமா ணிக்கமே
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.
100✓
அருள்சுரக் குஞ்சோம கிரணமுக கமலமு
மபாங்க நயனவி லாசமு
மணிமுத்து வண்கட்டி யசைநெற்றி யிற்பொட்டொ
டற்புதப் பொற்பட் டமும்
பொருள்குரக் குஞ்சுருதி மணமிக்க குமுதவாய்ப்
பொலியுமென் மூர னிலவும்
பொற்புநவ ரத்தினக் குண்டலக் கன்னமும்
புயகனக மேரு கிரியும்
மருள்சுரக் குங்கடிய மலநீக்கு மொளிவீசு
மாணிக்க மாலை மார்பும்
மனவுகிண் கிணிபொன்னி னரைஞாணு மெய்ஞ்ஞான
வடிவான சீர்பா தமுந்
தெருள்சுரக் குங்காட்சி தெரிசிக்க வருண்முருக
சிறுதே ருருட்டி யருளே
செகராசர் புகழ்கம்பை நகர்வாச மகிழந்தை
சிறுதே ருருட்டி யருளே.