முருகன் App
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
நூல்2 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்

நூல்

2✓
பூங்கற் பகநிழல் வண்டா மரைநற் புணரியென்னு
மோங்கற் பகமொரு மூன்றையு மன்பர்க் குவந்துநல்கி
யீங்கற் பகலுமெ ழிற்கம்பை வாழ்குக னெங் கள்பிதா
வாங்கற் பகத்தெய்வ யானையும் வள்ளியு மன்னையரே
3✓
கந்தா குமரா கவுரி சுதாமணி கண்டர்பெற்ற
மைந்தா குவலய மானிடர் மாதவர் வானவர்தஞ்
சிந்தா குலமற வந்தெழிற் கம்பைத் திருநகர்வா
ழெந்தாய்கு ணக்குன்ற மேநம்பி னேனுன் னினையடியே
4காப்பு✓
மாமேவு கயிலாய மலைமேல் வசந்தமணி
மண்டபத் தோவி யத்துள்
வரைபிர ணவக்கலை கடம்மைநம் மையனொடு
மாதேவி கண்க ணோக்கக்
காமேவு களிறுபிடி யாய்க்கலந் துழியுலகு
காதலித் துய்யும் வண்ணங்
கருணையுரு வங்கொண்ட ஞானமத வைங்கரக்
கற்பகத் தைப்ப ரவுவாந்
தூமேவு சமயங்க ளோராறு மேத்துமோர்
சோதிமெய்ஞ் ஞான வடிவாய்த்
தோன்றுநங் குமரனைக் கொற்றவேல் வீரனைத்
தோகைமயி லேறு குகனைப்
பூமேவு தெய்வப் பிடியொடு குறக்கொடி
புணர்ந்துமகிழ் மணவா ளனைப்
பொன்பொலி வளங்குலவு கம்பைவளர் முருகனைப்
போற்றுவண் டமிழ்த ழையவே.